6 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 03-03-2025 முதல் 07-03-2025
மாதம் : மார்ச்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. திருக்குறள்
1.கற்றல் நோக்கங்கள் :
# திருக்குறளில் கூறப்பட்ட வாழ்வியல் அறங்களைப் புரிந்துகொண்டு வாழ்வில் பின்பற்றுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø திருக்குறளை இயற்றியவர் யார்? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.படித்தல் :
திருக்குறள் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
5.மனவரைபடம் :
திருக்குறள்-அறன் வலியுறுத்தல்
o குற்றம் இல்லாமல் இருப்பது சிறந்த அறம்
o பொறாமை,பேராசை,சினம்,கடுஞ்சொல் பேசுதல் இல்லாமல் வாழ்தல்
ஈகை
o இல்லாதவர்களுக்கு தருவது ஈகை.
o ஈகையால் வருவதே இன்பம்
இன்னா செய்யாமை
o பிறர் நாணும் படி நடத்தல்
o பிறர் துன்பத்தை தம் துன்பமாக கருதுதல்
o உள்ளம் ஏற்றுக் கொள்ளாத செயல்களை செய்யாமை
கொல்லாமை
o பிற உயிர்களுக்கு பகிர்ந்து வாழ்தல் வேண்டும்.
பெரியாரைப் பிழையாமை
o ஆற்றல் உடையவர்களை இகழக் கூடாது.
o பெரியவர்களுக்குத் தீங்கு செய்யக் கூடாது.
8.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
10.எழுதுதல்:
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
11.தொடர்பணி:
பாடப்பகுதியில் இடம்பெற்ற அணிகளைப்பற்றி எழுதிவரச்செய்தல்
12.கற்றல் விளைவு:
Ø 603 - மாணவர்கள், தாம் படித்த, பார்த்த நிகழ்வுகள் மீதான கட்டுரைகள்
எழுதுதல், கேட்ட தலைப்புகள் பற்றித் தங்களின் சொந்த நடையில் கருத்துகளை
முன்னெடுத்துச் செல்லல், கதைகளை நீட்டித்தல் போன்றவற்றைச் செய்தல்