PUBLIC EXAM MARCH 2024 10 TH STD TAMIL MODEL QUESTION PAPER-1

மாதிரி பொதுத்தேர்வு வினாத்தாள்-1 (2023-2024)

மொழிப்பாடம் - பகுதி I - தமிழ்

கால அளவு : 3.00 மணி நேரம்                                                                         மொத்த மதிப்பெண்கள் : 100

அறிவுரைகள் :

     (1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.

     (2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.

குறிப்புகள் :

   (i)  இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

   (ii) விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி – I  (மதிப்பெண்கள் : 15)

குறிப்பு : (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                              15x1=15

             (ii) கொடுக்கப்பட்டுள்ள மாற்று விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

1. உலகத் தமிழ்க்கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்

(அ) பெருஞ்சித்திரனார் (ஆ) இளங்குமரனார்  (இ) தேவநேயப் பாவாணர்  (ஈ) கண்ணதாசன்

2. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற  தொடர்-------

அ)இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது   ஆ)என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

இ)இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்  ஈ)என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

3. இங்கு நகரப்பேருந்து நிற்குமா?’ இன்று வழிப்போக்கர் கேட்பது----------வினா.

    ‘அதோ அங்கு நிற்கும் என்று மற்றொருவர் கூறியது--------------விடை

அ) ஐய வினா,வினா எதிர் வினாதல் ஆ) அறியா வினா,மறை விடை

இ) அறியா வினா,சுட்டு விடை ஈ) கொளல் வினா,இனமொழி விடை

4. "விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்" இத்தொடரில் 'வேறார்என்ற சொல் குறிப்பது

அ) வேற்று மொழியார் ஆ) வேண்டியவர் இ) வேறு ஒருவர் ஈ) வெற்றியாளர்

5. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன ?

(அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்  (ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

(இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்   (ஈ) அங்கு வறுமை இல்லாததால்

6. பழமொழிகளைப் பொருத்துக.

அ. ஆறில்லா ஊருக்கு - 1. சோற்றுக்கு ஒரு சோறு பதம்

ஆ.உப்பில்லாப் பண்டம் - 2. நூறு வயது

இ. நொறுங்கத் தின்றால் - 3. குப்பையிலே

ஈ. ஒரு பானை - 4. அழகு பாழ்

) 1 - , 2 - , 3 - , 4 -    ) 1 - ,2 - , 3 - , 4 - 

)1 - ,2 - , 3 - , 4 –       ) 1 -, 2 - , 3 - , 4 –

7. வினைமுற்றுத் தொடரைத் தேர்க

அ) பாடிய கவிஞர்   ஆ) பாடினார் கவிஞர்  இ) கவிஞர் பாடினார்  ஈ) பாடும் கவிஞர்

8. வாய்மையே மழைநீராகி இத்தொடரில் வெளிப்படும் அணி :

(அ) உவமை   (ஆ) தற்குறிப்பேற்றம்  (இ) உருவகம்  (ஈ) தீவகம்

9 . பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா ஆ) சீலா இ) குலா ஈ) இலா

10. இருபாலருக்கும் பொதுவான பிள்ளைத்தமிழ் பருவத்தைத் தேர்ந்தெடுக்க

அ) சிற்றில்  ஆ) சிறுதேர்  இ) சப்பாணி  ஈ) அம்மானை

11. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்

அ) நாட்டைக் கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல் 

இ) வலிமையை நிலைநாட்டல் ஈ)கோட்டையை முற்றுகையிடல்

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக

"காற்றே, வா

மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு,  

மனத்தை மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன்வா

இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து,

மிகுந்த ப்ராண-ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு"

12. 'மயலுறுத்து' என்பதன் பொருள்:

(அ) விளங்கச் செய்  (ஆ) மயங்கச் செய்  (இ) அடங்கச் செய்   (ஈ) சீராக

13. பின்வருவனவற்றுள் பிராண ரஸம் எது?

(அ) ஆக்சிஜன்  (ஆ) கார்பன்-டை-ஆக்ஸைடு (இ) ஹைட்ரோ கார்பன் ஈ) கந்தக-டை-ஆக்ஸைடு

14. 'மிகுந்த' -இலக்கணக் குறிப்பு தருக.

(அ) வினையெச்சம் (ஆ) முற்றெச்சம்   (இ) பெயரெச்சம் (ஈ) வினைத்தொகை

15. நீரலைகளின் - பிரித்தெழுதுக.

(அ) நீர் + அலைகளின் (ஆ) நீரின் + அலைகளின்  (இ) நீரலை + களின்  (ஈ) நீர + அலைகளின்

பகுதி – II     பிரிவு - 1

குறிப்பு : எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். வினா எண் 21- க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.                                                                                                                  4x2=8

16. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு -இத்தொடரை இரு தொடர்களாக்குக.

17. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்கவும் :

(அ) ஒரு நாட்டு வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்களும் அமைந்திருக்கும்.

(ஆ) ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்கவேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.

18. இரட்டுற மொழிதல் என்றால் என்ன?

19. வறுமையின் காரணமாகஉதவி கேட்டு வருபவரின் தன்மானத்தைஎள்ளிநகையாடுவது குறித்துக்குறளின் கருத்து என்ன?

20. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்? 

21. 'பல்லார்' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

பிரிவு-2

குறிப்பு: எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                           5x2=10

23. சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க

      அ. பழமைக்கு எதிரானது. எழுதுகோலில் பயன்படும்  ஆ. ஓரெழுத்தில் சோலை. இரண்டெழுத்தில் வனம்.

24. தேன், நூல், பை, மலர், வா இத்தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழியாக்குக.

22. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார் ? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் பயனிலைகள் யாவை ?

25. எதிர்மறையாக மாற்றுக.   அ. மீளாத்துயர்   ஆ. புயலுக்குப் பின்

26. 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என  அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார் என்பது எவ்வாறு அடுக்குத்தொடர் ஆகும்?

குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா.

கலைச்சொற்கள் தருக.  ) Vowel  ) Discussion

27. பகுபத உறுப்பிலக்கணம் தருக : தணிந்தது.

28. கலவைச் சொற்றொடராக மாற்றுக :   கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

பகுதி – III  (மதிப்பெண்கள் : 18)

குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                  2x3=6

பிரிவு -1

29. புதிதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர். திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களை அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது. இப்படியாகக் காலமாற்றம் தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

        பருப் பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக்காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்து போல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகி, ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது.

(அ) பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

(ஆ) புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது ?

(இ) பெய்த மழை -இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

31. பொய்க்கால் குதிரை ஆட்டம் – குறிப்பு வரைக

பிரிவு - 2

குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.வினா எண் 34- க்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.                                                                                                         2x3=6

32. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.

33. சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைத் திருக்குறள்வழி விளக்குக.

34. அடிபிறழாமல் எழுதுக.

(அ) "செம்பொனடி" எனத் தொடங்கும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடலை எழுதுக       (அல்லது)

(ஆ) "தூசும் துகிரும்" எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை அடிமாறாமல் எழுதுக.

பிரிவு -3

குறிப்பு : எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்                   2x3=6

35. வினா வகைகளை எழுதுக. ஏதேனும் இரு வகை வினாக்களைச் சான்றுடன் விளக்குக

36. "அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

        பண்பும் பயனும் அது"                   -இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

37. உலகத்தோ  டொட்ட வொழுகல்   பலகற்றும்

      கல்லார்  அறிவிலா  தார்.

இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.

பகுதி – IV  (மதிப்பெண்கள் : 25)

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                                   5x5=25

38. (அ) மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை உருவாக்குக.  (அல்லது)

(ஆ) ”விடா முயற்சி நமது வாழ்க்கைக்கு இன்றியமையாதது” எனும் கூற்றினை வள்ளுவர் வழி விளக்குக.

39. (அ) புதிதாகத் திறன்பேசி வாங்கியிருக்கும் தங்கைக்குத் திறன்பேசியின் பயன்பாடு குறித்த அறிவுரைகளைக் கூறிக் கடிதம் எழுதுக.                                        (அல்லது)

(ஆ) பல்பொருள் அங்காடி ஒன்றில் வாங்கிய  உணவுப்பொருள்  நாள்பட்டதாக இருப்பது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் எழுதுக.

40) கட்சியைக்கண்டு கவினுற எழுதுக

41. தட்டச்சர் பணி வாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு படிவத்தை நிரப்புக.

பெயர் : அருளன்,  தந்தை : செல்வம்,  முகவரி : கதவு எண். 25, திலகர் தெரு, மதுரை வடக்கு – 2.

42. (அ) தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக்கொண்டிருக்கும் தம்பி: திறன்பேசியிலேயே விளையாடிக்கொண்டிருக்கும் தங்கை; காணொலி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன்; எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள் ! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட வைக்க நீங்கள் செய்யும் முயற்சிகளைப் பட்டியல் இடுக..    (அல்லது)

(ஆ) மொழிபெயர்க்க :

     Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the streets. It is performed by rural artists. The stories are derived from epics like Ramayana, Mahabharatha and other ancient puranas. There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe. Though the orchestra has a singer, the artists sing in their own voices, Artists dress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas.

குறிப்பு : : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

     மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு, மேற்கிலிருந்து வீசும் போது நான் கோடை எனப்படுகிறேன். மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசுகிறேன். வறண்ட நிலப்பகுதியில் இருந்து வீசுவதால் வெப்பக்காற்றாகிறேன். வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு. வடக்கிலிருந்து வீசும் போது நான் வாடைக் காற்று எனப்படுகிறேன். நான் பனிப் பகுதியிலிருந்து வீசுவதால் மிகவும் குளிர்ச்சியான ஊதைக் காற்று எனவும் அழைக்கப்படுகிறேன்.

(i) மேற்கிலிருந்து வீசும் காற்று யாது

(ii) ஊதைக் காற்று என்று அழைப்பதேன் ?

(iii) மேற்கு என்பதன் மற்றொரு பெயர் என்ன?

(iv) வாடை என்பது எத்திசையைக் குறிக்கிறது ?

(v) இப்பத்திக்கு ஏற்ற தலைப்பினை தருக.

பகுதி – V  (மதிப்பெண்கள் : 24)

குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும்.                                             3x8=24

43. (அ) உங்கள் இல்லத்துக்கு வந்த விருந்தினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலைப்பற்றி எழுதுக.      (அல்லது)

(ஆ) உதவியும் , வாய்மையும் தமிழரின் சிறந்த அறங்களாக விளங்கியமையைப் பாடத்தின்வழி நிறுவுக.

44. (அ) இராமானுசர் நாடகத்தினைச் சுருக்கி கதையாய் எழுதுக.                                                              (அல்லது)

(ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.

45. (அ) ”போதயில்லா புத்துலகைப் படைப்போம்” என்ற தலைப்பில் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக

     முன்னுரை – பரவலான போதைப்பழக்கம்- காரணங்கள் – போதைப்பழக்கத்தின் விளைவுகள் – விடுபடும் வழிமுறைகள் – விழிப்புணர்வு- நமது கடமைகள் – முடிவுரை                                                                    (அல்லது)

(ஆ) குறிப்புகளைக் கொண்டு பொருட்காட்சிக்குச் சென்ற நிகழ்வைக் கட்டுரையாக எழுதுக.

   முன்னுரை - பொருட்காட்சி வகைகள் சென்னையில் அரசு பொருட்காட்சி துறை அரங்குகள் பொழுதுபோக்கு விற்பனை - பொருட்காட்சியால் விளையும் நன்மைகள்-  முடிவுரை

பதிவிறக்கம் செய்ய

  

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை