PUBLIC EXAM MARCH 2024 10 TH STD TAMIL MODEL QUESTION PAPER - 5

 மாதிரி பொதுத்தேர்வு வினாத்தாள்-5  (2023-2024)


வினாத்தாள் தயாரிப்பு:

(தமிழ் விதை மற்றும் கல்வி விதைகள் வலைதளம்)

திரு. வெ.இராமகிருஷ்ணன், 
தமிழாசிரியர், 
அரசினர் உயர்நிலைப் பள்ளி, 
கோரணம்பட்டி, 
சேலம் மாவட்டம். 

அரசு பொதுத் தேர்வு – 2024 / பத்தாம் வகுப்பு - மொழிப்பாடம்

 தமிழ்மாதிரி வினாத்தாள் – 5

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                                              மதிப்பெண் : 100

அறிவுரைகள் : 1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்   உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

                    ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.                                  பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)                         அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)                       கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                                                                                                                                                                                15×1=15

1. காலம் கரந்த பெயரெச்சம்என்பது ____________                                                                        

) வினைத்தொகை                           ) உம்மைத்தொகை    

) பண்புத்தொகை                                ) அன்மொழித்தொகை

2. .’ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்’- மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே

) திருத்தணியும்,திருப்பதியும்      ) திருப்பரங்குன்றமும் பழனியும்

) திருப்பதியும் திருத்தணியும்      ) திருப்பதியும் திருச்செந்தூரும்

3. கலையின் கணவனாகவும்,சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன்- ஜெயகாந்தனின் இக்க்கூற்றிலிருந்து நாம் புரிந்துக் கொள்வது_____________

) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்

) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.

4. கொடுக்கப்பட்ட அனைத்துச் சொற்களும் அமைந்த பொருத்தமான தொடரைத் தேர்க.

மலை,மழை,மேகம்,ஆறு,ஏரி,குளம்

) மலைமீது மழை பெய்து ஆற்றுவெள்ளம் ஊரின் வழியே பெருக்கெடுத்து ஓடியது.

) கருத்த மேகம் மலை மீது மழையைப் பொழிய ஆறு,ஏரி,குளம்,அனைத்தும் நீரால் நிரம்பின.

) திரண்ட மேகங்கள் மலையில் மாரியாகி ஆறு,ஏரி,குளங்களில் நிறைந்தன.

) மலைமீது மழைபொழிய ஏரி குளங்கள் நிறைந்து பின் கடலில் சென்று கலந்தது.

5. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்________

) தமிழழகனார்                                       ) அப்பாத்துரையார்                           

) தேவ நேய பாவாணர் ) இரா.இளங்குமரனார்

6. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க….

) உழவு,மண்,ஏர்,மாடு                       ) மண்,மாடு,ஏர்,உழவு      

) ஏர்,உழவு,மாடு,மண்                        ) உழவு,ஏர்,மண்,மாடு

7. ‘ சங்க இலக்கியங்கள்,ஐந்திணைகளுக்குமான ஒழுக்கங்களை இரு திணைகளும் பெற எடுத்தியம்புகின்றன” – இத்தொடரில் அமைந்துள்ள தொகைச் சொற்களின் பொருத்தமான விரியைக் கண்டறிக.

) குறிஞ்சி,முல்லை,செய்தல்,பாலைநல் வினை, தீ வினை

) குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலைஉயர்திணை,அஃறிணை

) குறிஞ்சி,முல்லை,நெய்தல்,பாலை,மருதம்அறம்,பொருள்,இன்பம்

) குறிஞ்சி,மருதம்,மலை,காடு,வயல்பனை, திணை

8. ‘ மலர்கள் தரையில் நழுவும்எப்போது?

. அள்ளி முகர்ந்தால்                           . தளரப் பிணைத்தால்                    

. இறுக்கி முடிச்சிட்டால்                                     . காம்பு முறிந்தால்

9. குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் ___________

) திரு.பிரகாசம்                   ) மார்ஷல்..நேசமணி ) தனிநாயகம் அடிகள்  ) . முத்துசாமி

10. “ காற்றுள்ள போதே தூற்றிக் கொள் “ – இப்பழமொழி உணர்த்தும் சரியான பொருள்

) காலம் வருமென்று காத்திருந்தால் செயல் கெட்டு விடும்

) உரிய காலத்தில் ஒரு செயலை முழுமையாகச் செய்து விட வேண்டும்.

) உரிய காலத்தில் காற்றைப் போல செயல்பட வேண்டும்.

) உரிய காலத்தில் உணர்ந்து உரிய செயலைத் தேட வேண்டும்

11. ‘ வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்இவ்வடி குறிப்பது

. காலம் மாறுவதை                             . வீட்டைத் துடைப்பதை               . இடையறாது அறப்பணி செய்தலை

. வண்ணம் பூசுவதை

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி,

 கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து

சேந்த செயலைச் செப்பம் போகி,

அலங்கு கழை நரலும்  ஆரிப்படுகர்ச்

சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி

நோனாச் செருவின் வலம்ப்டு நோன்தாள்

மான விறல்வேள் வயிரியம் எனினே,”

12. ‘ அசைஇஇச்சொல்லின் இலக்கணக் குறிப்பு

. வினைத்தொகை        . பண்புத்தொகை            . சொல்லிசை அளபெடை     . செய்யுளிசை அளபெடை

13. ‘ சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி ‘ – இவ்வடியில்பாக்கம்என்னும் சொல்லின் பொருள்

. சிற்றூர்          . பேரூர்        . கடற்கரை      . மூதூர்

14. பாடல் இடம் பெற்ற நூல்

. சிலப்பதிகாரம்     . முல்லைப்பாட்டு         . மலைபடுகடாம்         . காசிக்காண்டம்

15. பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்

. அன்று,கன்று,அலங்கு,சிலம்பு                                        . அன்று,அவண்,அசைஇ,அல்கி

. சேந்த,செயலை,செப்பம்,சிலம்பு                                      . அல்கி,எய்தி,போகி,எனினே

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                                                                      4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்..

16. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நூல்கள் எவையேனும் நான்கு எழுதுக.

17. விடைக்கேற்ற வினா அமைக்க.

)  இஸ்மத் சன்னியாசி என்னும் பாரசீகச் சொல்லுக்கு தூய துறவி என்பது பொருள்.

) தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது வினையாலணையும் பெயர்.

18. அமைச்சருக்குரிய சிறந்த பண்புகளாக திருவள்ளுவர் கூறுவன யாவை?

19. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

20. உறங்குகின்ற கும்பகன்னஎழுந்திராய் எழுந்திராய்கால தூதர் கையிலேஉறங்குவாய் உறங்குவாய் ‘ – கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

21.  பொருளல்எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                                          5×2=10

22. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:-

) அனைவரின் பாராட்டுகளால் , வெட்கத்தில் பாடகர் முகம் _________

) வெயிலில் அலையாதே; உடல் _____________

23. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

24.  உவமையைப் பயன்படுத்தி சொற்றொடர் அமைக்க.

) மழை முகம் காணாப் பயிர்போல                                  ) தாமரை இலை நீர் போல

25. “ சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக

குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

ஊர்ப்பெயர்களின் மரூஉ எழுதுக. ) உதக மண்டலம்                      ) நாகப்பட்டினம்

26. . கலைச்சொல் தருக:- ) SEA BREEZE          )  COSMIC RAYS

27. ’ அறியேன்’ – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

28 கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

   கோடிஉண் டாயினும் இல்இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 ) பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                                            2×3=6

29. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

                    இரவீந்திரநாத் தாகூர் வங்கமொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகு தான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஒரு நாடு எவ்வளவு மின்னாற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைக் கொண்டு அதன் தொழில்வளர்ச்சியை மதிப்பிடுவார்கள். அது போல ஒரு நாட்டின் மொழி பெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கையைக் கொண்டு அந்நாட்டின் பண்பாட்டையும் அறிவையும் மதிப்பிடுவார்கள்.மொழி பெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகளும் கூட உருவாகியிருக்க முடியாது.

1. ஒரு நாட்டின் பண்பாட்டையும், அறிவையும் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?

2. கீதாஞ்சலி நூலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்?

3. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?

30 சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில சான்றுகள் தருக.

31. பொய்க்கால் குதிரையாட்டம் குறித்து எழுதுக.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                                   2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை?

33. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

34.  அடிபிறழாமல் எழுதுக

) சிறுதாம்புஎனத் தொடங்கும் முல்லைப்பாட்டு பாடல்      (அல்லது )

) செம்பொ னடிச்சிறு“ – எனத் தொடங்கும் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் பாடல்

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                                        2×3=6

35 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

    பண்பும் பயனும் அதுஇக்குறளில் பயின்று வந்துள்ள அணியை விளக்குக.

36.இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

    இன்மையே இன்னா தது    இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.

37. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது: தந்தை என்னிடம்,” இலச்சுமி கூப்பிடுகிறாள்,போய்ப் பார்என்றார். “இதோ சென்றுவிட்டேன்என்றவாறே அங்குச் சென்றேன்.துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து,”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன்.என் தங்கை அங்கே வந்தாள்.அவளிடம்,” நீயும் இவனும் விளையாடுங்கள்என்று கூறினேன்.அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.

இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                                         5×5=25

38. ) நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.

பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ்மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான பரிபாடலில்…….  

( அல்லது )

) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிகவளாகங்களோடும், அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

39. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில்,” உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.  ( அல்லது )

  பல்பொருள் அங்காடி ஒன்றில் நீங்கள் வாங்கிய உணவுப் பொருள் நாள்பட்டதாக இருந்ததைக் குறித்து உணவுப்பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டு கடிதம் எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தைக் கவினுற எழுதுக.

41. எண்.60, திருவள்ளுவர் நகர், கம்பர் தெரு, கோவை -6 என்ற முகவரியில் வசித்து வரும் அருளப்பன் மகள் யாழினி வாள்வீச்சு ஆர்வம் கொண்டுள்ளார். அவர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராக சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை யாழினியாக பாவித்துக் கொண்டு உரிய படிவத்தை நிரப்புக.

42. ) பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.  ( அல்லது )

) மொழிபெயர்க்க.

Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the steets.It is performed by rural artists.The stories are derived from epics like Ramayana,Mahabharatha and other ancient puranas.There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe.Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup.Koothu is very popular amoung rural areas.

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

               பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்

பூ உண்டு.ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியவாய் இருக்கும் மலர்கள்; ஆல மலர்;பலா மலர்.

மலர் உண்டு;பெயரும் உண்டு; ஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.

அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி,ஆலம்,கொழிஞ்சி,பலா.

பயன்பாடு நாற்றம்,மக்களது விருப்பில் இடம் பெறாமை,பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி,எருக்கு,பூளை,குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.

(i). கண்ணிற்குக் காட்சி தராமல் காண்பதற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் எவை?

(ii). புறத்தே காட்சிப்படாமல் உள்ளே பொதிந்திருக்கும் மலர்கள் யாவை?

(iii). இனிப்பான பூக்கள் எது?

(iv) எந்தப் பூ குடிநீருக்கு மணத்தை ஏற்றும்?

(v)  மூங்கில் அரிசி என்றால் என்ன?

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                                                                                          3×8=24

43.) நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.

மகளிர் நாள் விழா

இடம்பள்ளிக் கலையரங்கம்                                                 நாள் -08.03.2019

கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கூடுதல்தலைமையாசிரியரின் வரவேற்புஇதழாளர்

கலையரசியின் சிறப்புரைஆசிரியர்களின் வாழ்த்துரை மாணவத் தலைவரின் நன்றியுரை.

( அல்லது )

) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

44. ) அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.. ( அல்லது )

) குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

மாணவன்கொக்கைப் போல,கோழியைப் போலஉப்பைப் போலஇருக்க வேண்டும்கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழிகண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும்ஆசிரியர் விளக்கம்மாணவன் மகிழ்ச்சி.

45. ) குமரிக் கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித் தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி, அழகூட்டி அகம் மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.

இக்கருத்தைக் கருவாகக் கொண்டுசான்றோர் வளர்த்த தமிழ் என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.                    ( அல்லது )

) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பிடுக.

முன்னுரை – ‘ சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ‘ – சாலை விதிகள்ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் – ‘ விபத்தினைத் தவிர்ப்போம் விழிப்புணர்வு தருவோம் ‘ – முடிவுரை

வினாத்தாள் தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி, சேலம்


பதிவிறக்கம் செய்ய

 

 

 


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை