இரண்டாம் திருப்புதல் தேர்வு - பிப்ரவரி 2024
இரண்டாம் திருப்புதல் தேர்வு-2024 பிப்ரவரி , தஞ்சாவூர் மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா
எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
இ.
எம்+தமிழ்+நா |
1 |
2. |
அ. கடல்நீர் ஆவியாகி மேகமாதல் |
1 |
3. |
ஆ. இன்மையிலும் விருந்து |
1 |
4. |
ஈ. பெப்பர் |
1 |
5. |
அ. சங்ககாலத்தில்
மொழிபெயர்ப்பு இருந்தது |
1 |
6. |
ஆ. முல்லை |
1 |
7. |
இ.
வலிமையை நிலைநாட்டல் |
1 |
8. |
ஆ. ஊன்பொதிப் பசுங்குடையார் |
1 |
9. |
ஈ. இலா |
1 |
10. |
ஈ. கரகாட்டத்தின் வேறுபெயர்கள் யாவை? |
1 |
11. |
அ.
காடு |
1 |
12. |
ஈ.
தனிப்பாடல் திரட்டு |
1 |
13. |
அ.
இரட்டுற மொழிதலணி |
1 |
14. |
ஆ.
கடல் |
1 |
15. |
இ.
அணைகிடந்தே , இணைகிடந்த |
1 |
பகுதி-2
பிரிவு-1 4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ.ஆ வினாக்களுக்குப்
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
17 |
தினைச்சோற்றைப் பெறுவீர்கள் |
2 |
18 |
மீண்டும்
மீண்டும் நிறைந்த வெள்ளத்தால் உயிர்கள் தோன்றுவதற்கேற்ற சூழல் உருவானது. |
2 |
19 |
மறைத்து
வைத்தல் எனும் துன்பத்தைத் தராத நல்லவர். |
2 |
20 |
நான் எழுதுவதற்கு
ஒரு தூண்டுதல் உண்டு
, நான் எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு |
2 |
21 |
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த
தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
22 |
வினா
6 வகைப்படும். அவை: 1.
அறி
வினா 2.
அறியா
வினா 3.
ஐய
வினா 4.
கொளல்
வினா 5.
கொடை
வினா 6.
ஏவல்
வினா |
2 |
23 |
உரிச்சொல் தொடர் |
2 |
24 |
வளியை வாளியில் அள்ள முடியாது |
2 |
25 |
அ.
விண்வெளிக் கதிர்கள் ஆ. அறிவாளர் |
2 |
26 |
அ. நெல்லை
ஆ. மன்னை |
2 |
27 |
வா(வரு)
+ க வா- பகுதி , ‘வரு’ எனத்திரிந்தது விகாரம் , க
– வியங்கோள் வினைமூற்று விகுதி |
2 |
28 |
அ. கண் விழித்திருக்கும்
பறவை ஆ. வானவில் |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
பெரிய
வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா ? என்று
கேட்பதற்காக |
3 |
30 |
இடம்: இத்தொடர் ம.பொ.சி அவர்களின்
சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள் தலையை கொடுத்தாவது தலைநகரைக் காப்பாற்றுவோம். விளக்கம்: ஆந்திர
மாநிலம் பிரியும்போது, சமயத்தில்,
செங்கல்வராயன் தலைமையில் கூட்டப்பட்ட
கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று
முழங்கினார். |
3 |
31 |
அ.
தம்
வீட்டுக்கு வர ம் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உ ண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து
அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல் ஆ.
முன்பின் அறியாத புதியவர் இ.
விருந்தே புதுமை |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü மண்ணின் மேல்பக்கம் ஈரமானது. ü பொன்னேரைத் தொழுது நிலத்தை உழுதனர். ü மண் புரண்டு, மழை பொழியும்; நாற்று நிமிர்ந்து வளரும் ü உழவர் நம்பிக்கையுடன் உழுவர். |
3 |
|
33 |
ü தொழில்
செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு
ஏற்ற காலம், செயலின்
தன்மை, செய்யும்
முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார். ü மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல்
, நூல்களைக்கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும்
சிறப்பாக அமைந்தவரேஅமைச்சராவார். ü இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு
முன், எந்தநுட்பமான சூழ்ச்சிகள் நிற்க முடியும்?
(எந்தசூழ்ச்சியும் நிற்க இயலாது). |
3 |
|
34 |
அ.
|
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
ü அகவலோசை பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து
வரும். ü ஆசிரியத்தளை மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும்
வரும். ü மூன்றடி முதல் எழுதுபவர்
மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும் |
3 |
||||||||||||||||||||||||
36 |
வஞ்சப்புகழ்ச்சி
அணி – பழிப்பதுபோலப் புகழ்வதும், புகழ்வதுபோலப் பழிப்பதும் |
3 |
||||||||||||||||||||||||
37 |
|
3 |
பகுதி-4 5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||
38 |
அ) அ)
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் மனித
வாழ்விற்கான பண்புநலன்களை உருவாக்குகின்றன. ஆ) இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில் நன்மை கிட்டும்
என எண்ணாமல் , அறம் செய்ய வேண்டும் என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன. இ) நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம்
காண்பதே அரசனின்கடமை என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன.இக்கருத்து இன்றைக்கும்
பொருந்தக்கூடியது. ஈ) மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள்
இன்றைக்கும் தேவையே. (அல்லது) ஆ) ü
நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற
கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான் ü
ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும்
வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக. ü
அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள்
என்று கூறுங்கள். ü
அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும்
கொடுத்து உபசரிப்பார்கள் என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது. ü
ஆற்றுப்படுத்துதல் பல்வேறு நிலைகளில்
வளர்ச்சியடைந்துள்ளது. ü
ஆசிரியர்களும்,குறிப்பிட்ட
துறையின் வல்லுநர்களும் மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர். ü
இணையதளம் கூட மாணவர்களுக்கும்,பிறருக்கும்
பல நல்வழிகளைக் காட்டுகிறது. |
5 |
||||||||||||
39 |
அ) ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் உறைமேல்
முகவரி என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். ஆ) ü இடம்,
நாள் ü விளித்தல் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு உறைமேல் முகவரி என்ற அமைப்பில்
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
||||||||||||
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||||
41 |
படிவங்களைச் சரியான விவரங்களுடன்
நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
||||||||||||
42 |
அ)
ஆ) பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால்
இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை
உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை
மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும்
பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. |
5 |
பகுதி-5 3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) வினாவுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண்
வழங்குக. (அல்லது) ஆ) வினாவுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
8 |
44 |
அ. ü அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம்
ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும். ü கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை
ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும். ü வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக
அறிய முடிகிறது. ü மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும்
படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற
இயலாது. ü கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம்
என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக்
கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம். (அல்லது) ஆ முன்னுரை: கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப்
பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யா
அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞனின் பசியைப்
போக்கிய அன்னமய்யா: அன்னமய்யா அங்கு இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. அன்னமய்யாவின் பெயர்
பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?”
என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். முடிவுரை: அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம்
கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும்
பொருத்தமுடையதே. |
8 |
45 |
அ. முன்னுரை: ”எங்களுக்கு நிலாச்சோறு சாப்பிடவும் தெரியும் நிலாவுக்கே போய்
சோறு சாப்பிடவும் தெரியும்” தமிழர் அறிவியலை நான்காம்
தமிழாகக் கொண்டு வாழ்ந்தனர். அதற்கு எண்ணற்ற சான்றுகள் இருந்தாலும், மிகவும்
குறிப்பிடத்தக்கது தமிழரின் விண்ணியல் அறிவாகும்.இன்றளவில் நிகழ்த்தப்பெறும் பல
விண்ணியல் ஆய்வுகளுக்கு, பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்
பெற்ற கருத்துக்கள் முன்னோடியாகத் திகழ்வதை யாராலும் மறுக்க இயலாது. தமிழன் அறிவியலின் முன்னோடி: தமிழர் பழங்காலத்தில் தங்கள்
வாழ்வியலோடு அறிவியலையும் இணைத்துக் கொண்டவர்கள்.சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன.
பெருவெடிப்புக் கொள்கையை பற்றி இன்றைய அறிவியல் கூறும் கருத்துகளை சங்ககால
இலக்கியங்களில் நமது முன்னோர்கள் கூறியிருப்பது வியப்பான ஒன்று. “விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக் கருவளர் வானத்து இசையில் தோன்றி" எனத்தொடங்கும் பரிபாடலில்
புலவர் கீரந்தையார் அண்டத்தின் தோற்றம் குறித்து, இன்றைய
அறிவியல் கூறும் கருத்துக்களில் அனைத்தையும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்க
ஒன்றாகும். அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924 ல் நம் பால்வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என்பதைக்
கண்டறிந்தார்.ஆனால் 1300ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகர்
தான் இயற்றிய திருவாசகத்தில், திருஅண்டப் பகுதியில் 100 கோடிக்கும் மேலான பால் வீதிகள் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். விண்வெளியும் கல்பனா
சாவ்லாவும்: ”கைகளை நீட்டிப்பார் ஆகாயம் உன்கைகளில் முயற்சிகளைச் செய்துபார்
ஆகாயம் உன் காலடியில்” விண்வெளிக்குப் பயணம்
செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி
ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும்
வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா. 1995 ஆம் ஆண்டு நாசா
விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா கொலம்பியா விண்வெளி
ஊர்தியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம்செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்த
விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில்
இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார். நமது
கடமை: ”அறிவியல் எனும் வாகனம் மீதில்
ஆளும் தமிழை நிறுத்துங்கள் கரிகாலன் தன் பெருமையெல்லம் கணினியுள்ளே பொருத்துங்கள்” - வைரமுத்து அனைத்துக் கோள்களையும்
இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது என்பதையும்
ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும் மாணவர்களுக்குத்
தேவையான ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது. விண்ணியல் ஆய்வில் நாம்
கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும். விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப்
பயன்படுமாறு செய்யக்கூடாது. அப்துல் கலாம் அவர்களைப் போல நமது நாட்டின்
முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும் முடிவுரை: "வானை
அளப்போம், கடல் மீனை அளப்போம்" என்ற பாரதியின் கனவு
கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும்.
இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும். (அல்லது) ஆ தலைப்பு : உழவெனும்
உன்னதம் முன்னுரை: ”ஏர் முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே” என்ற திரைப்பாடல் உயர்த்திக்கூறுவது
உழவுத்தொழிலைத்தான். தன் வயிற்றுப் பசி போக்க தொழில்களை
மேற்கொள்ளும் மனிதர்களிடையே, பிறர் பசி போக்க தொழில்
புரிவோர் உழவர். இவர்தம் உயரிய பணி குறித்து இக்கட்டுரையில் காண்போம். உழவுத் தொழிலும் உழவர்களும்: ”நித்தமும் உழவே அவன் நினைப்பு நெற்றி வியர்வை சிந்திட
அவன் உழைப்பு” உழவுத்தொழில் உழுதல்,
சமன் செய்தல், விதைத்தல், நடுதல், நீர் பாய்ச்சுதல்,களை
யெடுத்தல், பாதுகாத்தல்,அறுவடை
செய்தல் எனும் பல கூறுகளை உள்ளடக்கியது. களமர், உழவர்,
உழத்தியர், கடையர், கடைசியர்
போன்றோரின் உழைப்பால் உழவுத் தொழில் சிறப்புற்று இருக்கிறது. தமிழர் வாழ்வில் உழவு ”தமிழனின் உதிரத்தில் கலந்தது உழவு உழவன் இன்றி உலகோர்க்கு ஏது
உணவு?” பழந்தமிழகத்தில் மக்களின்
தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது உழவும் உழவு சார்ந்த தொழில்களும்
மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. உழவர்கள் சமுதாயத்தில்
மதிப்புள்ளவர்களாக வாழ்ந்தனர். மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் ஆடுமாடுகளை
மேய்த்தும் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த காலத்தில்
அந்நிலங்களில் வரகு சாமை, தினை முதலியவற்றையும், உளுந்து, பயறு, அவரை
முதலியவற்றையும் விளைவித்தான். மருதநிலத்தில் வயல்களில் விளைந்த நெற்பயிரை
பாதுகாத்தலில் உழவர்களில் ஆடவரும் மகளிரும் ஈடுபட்டனர். இலக்கியங்களில் உழவுத் தொழில்: ”உழவர்கள் உழுத உழவினை நல்லேர் நடந்த நகைசால் விளை வயல்' என்கிறது சங்க இலக்கியம்.
'நெல்மலிந்த மனை பொன் மலிந்த மறுகு' என்கிறது
புறநானூறு.'ஏரின் உழாஅர் உழவர்' என்கிறது
திருக்குறள். அதோடன்றி சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் உழவுத்தொழில் பற்றிய
குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன உழவின் சிறப்பு: உழவு அனைத்துத்
தொழில்களுக்கும் மையமாக விளங்குகிறது.தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும்
காப்பாற்ற உழவுத் தொழிலை அறத்துடன் செய்தனர் உழவர். சேமிப்பின் அவசியத்தை
தானியக் குதிர்கள் மூலம் அறியலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்
பெரும்பங்காற்றி வரும் இத்தொழிலே, உலகில் நடைபெறும்
அனைத்து தொழில்களுக்கும் தலைமைத் தொழிலாகும்.' உழுவார்
உலகத்தார்க்கு அச்சாணி' எனும் வள்ளுவர் வழி இதனை அறியலாம். உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்: உழவர் சேற்றில் கால்
வைத்தால்தான் உலகமக்கள் சோற்றில் கை வைக்க முடியும். 'உழுதுண்டு
வாழ்வாரே வாழ்வார்' எனும் சிறப்புப் பெற்று, மழை வெயில் பாராமல் உழைக்கின்ற உழவரையும் உழவுத் தொழிலையும் நாம்
வணங்கிப் போற்றினால் இவ்வுலகம் நிலைபெறும். முடிவுரை: 'சுழன்றும் ஏர்பின்னது
உலகம்' என்கிறார் வள்ளுவர். 'கடவுள்
எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி' என்கிறார்
மருதகாசி. உழவையும், உழவரையும் அழிவிலிருந்து காப்பது நம்
அனைவருடைய கடமையாகும். இயற்கையை வணங்குவோம்; உழவினைப் போற்றுவோம். |
8 |