THAMIZH MANDRA THERVU QUESTION PAPER AND ANSWER KEY 2024

தமிழ் மன்றத் தேர்வு - 2024 பிப்ரவரி

ஆற்காடு G.V.C மேனிலைப்பள்ளி👇👇


தமிழ்மன்றத் தேர்வு-2024 பிப்ரவரி , ஜி.வி.சி.மேனிலைப்பள்ளி, ஆற்காடு

10.ஆம் வகுப்பு தமிழ் - உத்தேச விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. மணி வகை

1

2.     

. இலா

1

3.     

. உழவு,ஏர்,மண்,மாடு

1

4.     

. அருமை+துணை

1

5.     

. அங்கு வறுமை இல்லாததால்

1

6.     

. பாண்டியன்

1

7.     

. செப்பலோசை

1

8.     

. வினைத்தொகை

1

9.     

. வலிமையை நிலைநாட்டல்

1

10.    

. ,ரு

1

11.    

. காடு

1

12.   

. பெருமாள் திருமொழி

1

13.   

. குலசேகராழ்வார்

1

14.   

. தீராத

1

15.   

. வாளால், மாளாத

1

 

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

செய்யுளும் , உரைநடையும் கலந்து எழுதப்பெறுவது

2

17

.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

18

அருளைப்பெருக்க கல்வி கற்போம் , அறிவைத்திருத்த கல்வி கற்போம்

2

19

தினைச்சோற்றைப் பெறுவீர்கள்

2

20

சீவக சிந்தாமணி , வளையாபதி, குண்டலகேசி

2

21

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்.

2

 

                                                               பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

வினா 6 வகைப்படும் . அவை,

1.     அறிவினா

2.    அறியா வினா

3.    ஐய வினா

4.    கொளல் வினா

5.    கொடை வினா

6.    ஏவல் வினா

2

23

. நெல்லை  ஆ. மன்னை

2

24

. விண்வெளிக்கதிர்கள்  . புயல்

2

25

ஒலித்து - ஒலி + த்+ த்+ ;

ஒலி - பகுதி;   த்- சந்தித்- இறந்தகால இடைநிலை; -வினையெச்சவிகுதி

2

26

வெட்சிகரந்தை  , வம்ஜ்சிகாஞ்சி , நொச்சி - உழிஞை

2

27

. பள்ளி விட்டதும் வீட்டுக்குச் சென்றான்.

. கொடுப்பதற்கு கோடு இடக் கூடாது

2

28

. பண்டம் குப்பையிலே  . மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

இடம்: இத்தொடர்  .பொ.சி  அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம்

          பெற்றுள்ளது.

பொருள்: எங்கள் தலையை கொடுத்தாவது  தலைநகரைக் காப்பாற்றுவோம்.

விளக்கம்: ஆந்திர மாநிலம் பிரியும்போது, சமயத்தில், செங்கல்வராயன் தலைமையில்  கூட்டப்பட்ட கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்என்று முழங்கினார்

3

30

 

ü  செப்பல்ஓசைபெற்று வரும்.

ü  ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள்நாற்சீராகவும் வரும். இயற்சீர்,வெண்சீர் மட்டுமேபயின்று வரும்.

ü  இயற்சீர் வெண்டளை, வெண்சீர்வெண்டளைமட்டும் பயின்று வரும்

ü  இரண்டடி முதல்பன்னிரண்டு அடி வரைஅமையும். (கலிவெண்பாபதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும்.)

ü  ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும்

3

31

(அ) போலச்செய்தல்

() புரவி ஆட்டம், புரவி நாட்டியம்

(இ) மராட்டியர்

 

3

 

 பிரிவு-2                           

  பிரிவு-3                                                          2X3=6

ம் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

தற்குறிப்பேற்ற அணி:

             இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.

சான்று:

             “   போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

                 வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட

அணிப்பொருத்தம்:

               கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில் அசைந்தது. இது இயல்பான நிகழ்வு என்றாலும்அக்கொடியானது  கோவலன் கண்ணகியை, ”மதுரை நகருக்குள் வரவேண்டாம்எனக் கூறிகையசைப்பதாகக் கம்பர் தனது குறிப்பை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று

3

36

  ஒரு செய்யுளில் சொற்கள்முறைபிறழாமல் நிரல்நிறையாக (வரிசையாக) அமைந்து வருவதுநிரல்நிறைப் பொருள்கோள்ஆகும்.

  இது முறைநிரல்நிறைப் பொருள்கோள், எதிர்நிரல்நிறைப் பொருள்கோள் என இருவகைப்படும்.

3

37

சீர்

அசை

வாய்பாடு

அருமை

நிரை+நேர்

புளிமா

உடைத்தென்

நிரை+நேர்

புளிமா

றசாவாமை

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

வேண்டும்

நேர்+நேர்

தேமா

பெருமை

நிரை+நேர்

புளிமா

முயற்சி

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

தரும்

நிரை

மலர்

3

 

                                                                                        பகுதி-4                                                             5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

.

மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  கடல் ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது.

ü  அதற்குத் தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம் திலகமாகவும்  உள்ளது.

ü  திலகத்தின் மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது.

ü  அத்தகைய தமிழை வாழ்த்துவோம்.

பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்:

ü  அழகான அன்னை மொழி

ü  பழமையான நறுங்கனி

ü  பாண்டியன் மகள்

ü  சிறந்த நூல்களை உடைய மொழி

ü  பழம்பெருமையும் தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம்.

.

விளம்பரம்:

      சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம் கிடையாது. ஆனால் இன்றளவிலோ  வணிக வளாகங்களும்,வணிகநிறுவனங்களும்  பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்கின்றனர்.

பண்டமாற்று முறை:

      மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். ஆனால் தற்போது உள்ள வணிக வளாகங்களில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது.

அங்காடிகள்:

      சிலப்பதிகாரம் கூறும்   மருவூர்ப்பாக்கத்தில்பலவிதமான வணிகர்களும்  ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்தனர்.

       ஆனால், இன்றைய சூழலில்  அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.

பல தொழில் செய்வோர்:

       மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும்  வாழ்ந்து வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்  பலர் உள்ளனர்.

வணிக வளாகங்கள்:

      மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில் நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது  வானுயர் கட்டடங்களுக்கு  இடம் பெயர்ந்து உள்ளது

5

39

 

( மாதிரி கடிதங்கள்)

)

வாழ்த்து மடல்

சேலம்,

03-03-2021.

அன்புள்ள நண்பனுக்கு,

            நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம்என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

            பெறுதல்

                        திரு.இரா.இளங்கோ,

                        100,பாரதி தெரு,

                        சேலம்.

)

வேண்டுதல் விண்ணப்பம்

அனுப்புநர்

                        அ அ அ அ அ,

                        100,பாரதி தெரு,

                        சக்தி நகர்,

                        சேலம் – 636006.

பெறுநர்

            ஆசிரியர் அவர்கள்,

            தமிழ்விதை நாளிதழ்,

,           சேலம் – 636001

ஐயா,

பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல்சார்பு

            வணக்கம். நான்  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “  எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

                                                          நன்றி.

இணைப்பு:                                                                                                    இப்படிக்கு         1. கட்டுரை                                                                                                                தங்கள் உண்மையுள்ள,

இடம் : சேலம்                                                                                              அஅஅ

நாள் : 04-03-2021

           பெறுநர்

            ஆசிரியர் அவர்கள்,

            தமிழ்விதை நாளிதழ்,

,           சேலம் – 636001

 

         

 

 

உறை மேல் முகவரி:

 

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

நூலக உறுப்பினர்  படிவம்

திருச்சி மாவட்ட நூலக ஆணைக்குழு

மைய / கிளை / ஊர்ப்புற நூலகம் திருச்சி

 

உறுப்பினர் சேர்க்கை அட்டை எண்:  1234                                                    உறுப்பினர் எண்: 9874                                   

1.    பெயர்                                                         :  .கனிமொழி

2.   தந்தை பெயர்                                             : . மணிவண்ணன்     

3.   பிறந்த நாள்                                                : 12-01-2009  

4.   வயது                                                         : 15      

5.   படிப்பு                                                         : 10.ஆம் வகுப்பு          

6.   தொலைபேசி / அலைபேசி எண்              : 9876543210

7.   முகவரி                                                      :18/550 புகழ் நகர், பாலக்கரை, திருச்சி           

      (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)                           

                 நான் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ. 200 சந்தா தொகை ரூ 50 ஆக மொத்தம் ரூ. 250 செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.

 

இடம்:   திருச்சி

நாள்:    17-02-2024                                                                                                                                    

                                                                                                                                          .கனிமொழி                                   

                                                                                                    தங்கள் உண்மையுள்ள

     

திரு / திருமதி / செல்வி / செல்வன் .கனிமொழி  அவர்களை எனக்கு நன்கு தெரியும் எனச் சான்று அளிக்கிறேன்.

        

                                                                                              பிணையாளர் கையொப்பம்        

அலுவலக முத்திரை                                                                     

(பதவி மற்றும் அலுவலகம்)

 

42

)

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

 

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

 

)

   பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.

5

 

 

 

பகுதி-5                                                             3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

 )    

தமிழ்ச்சொல் வளம்:

v  தமிழ்மொழி சொல்வளம் மிக்கது.

v  திராவிட மொழிகளில் மூத்தது.

v  பல மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை.

v  பிறமொழிச்சொல்லை நீக்கினாலும் தனித்தியங்கும்.

  தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை:

v  மொழிபெயர்ப்பிற்காக பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும்.

v  தொழில்நுட்ப உதவியுடன்  பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்.

v  மொழிபெயர்ப்பாளர் அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும்.

 (அல்லது)

)

இராசராசன்  எட்டு திசைகளிலும் உள்ள காவல் தெய்வங்கள்  ஒன்றிணைந்தது போல் ஆட்சி செய்தான். அவனது நாட்டில்,

·        யானைகள் மட்டுமே பிணைக்கப்பட்டு இருந்தன.

·        சிலம்புகள் மட்டுமே புலம்பின.

·        ஓடைகள் மட்டுமே கலக்கம் அடைந்திருந்தன.

·        நீர் மட்டுமே அடைக்கப்பட்டிருந்தது.

·        மாங்காய்கள் மட்டுமே வடுப்பட்டிருந்தன.

·        மலர்கள் மட்டுமே பறிக்கப்பட்டு இருந்தன.

·        காடுகள் மட்டுமே கொடியனவாக இருந்தன.

·        வண்டுகள் மட்டுமே தேன் உண்பதாக இருந்தன.

·        நெற்கதிர்கள் மட்டும் போராகவும்,மலைகள் மட்டுமே இருள்சூழ்ந்ததாகவும்,

·        இளம் ஆண்களின் கண்கள் மட்டுமே பயந்ததாகவும்,

·        குளத்து மீன்கள் மட்டுமே பிறழ்ந்து சென்றதாகவும்,

·        செவிலித்தாய் மட்டுமே சினம் கொண்டதாகவும் போது சரியான

இசைப் பாணர்கள் மட்டுமே ஆடிப்பாடியதாகவும்  கல்வெட்டுகள் கூறுகின்றன

8

44

.

கோபல்லபுரத்து மக்கள்

முன்னுரை:

              கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம்.

அன்னமய்யாவும், இளைஞனும்:

               சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார்.

இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா:

               அன்னமய்யா அங்கு இருந்த  நீத்துப்பாகத்தை அவனிடம் நீட்டினான். அந்த  இளைஞன்  கஞ்சியை  “மடக் மடக்என்று உறிஞ்சிக் குடித்தான்.

அன்னமய்யாவின் மனநிறைவு:

              புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது.

அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்:

               இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்குஅன்னமய்யாஎன்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக்  கொண்டான்.

முடிவுரை:

            அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம் கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே.

 (அல்லது)

வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்)

 முன்னுரை:

                யாரையும் அலட்சியப்படுத்தாத  ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி  தனதுஒருவன் இருக்கிறான்என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்  ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.

 குப்புசாமியின் குடும்ப நிலை:

              காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை. வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து தாய்மாமனும்  மட்டுமே அவனது உறவினர்கள்.

நோயுற்ற குப்புசாமி:

               சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.

ஆறுமுகம்:

              வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.

 முடிவுரை:

                  “ பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

                    மண்புக்கு மாய்வது மன்”   

 பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு  மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.                                   

8

45

 .

முன்னுரை:

எங்களுக்கு நிலாச்சோறு சாப்பிடவும் தெரியும்

நிலாவுக்கே போய் சோறு சாப்பிடவும் தெரியும்

      தமிழர் அறிவியலை நான்காம் தமிழாகக் கொண்டு வாழ்ந்தனர். அதற்கு எண்ணற்ற சான்றுகள் இருந்தாலும், மிகவும் குறிப்பிடத்தக்கது தமிழரின் விண்ணியல் அறிவாகும்.இன்றளவில் நிகழ்த்தப்பெறும் பல விண்ணியல் ஆய்வுகளுக்கு, பழந்தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்ற கருத்துக்கள் முன்னோடியாகத் திகழ்வதை யாராலும் மறுக்க இயலாது.

தமிழன் அறிவியலின் முன்னோடி:

       தமிழர் பழங்காலத்தில் தங்கள் வாழ்வியலோடு அறிவியலையும் இணைத்துக் கொண்டவர்கள்.சங்க இலக்கியங்களிலும், பக்தி இலக்கியங்களிலும் அறிவியல் கருத்துக்கள் நிறைந்துள்ளன. பெருவெடிப்புக் கொள்கையை பற்றி இன்றைய அறிவியல் கூறும் கருத்துகளை சங்ககால இலக்கியங்களில் நமது முன்னோர்கள் கூறியிருப்பது வியப்பான ஒன்று.

விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

                                                       கருவளர் வானத்து இசையில் தோன்றி"

      எனத்தொடங்கும் பரிபாடலில் புலவர் கீரந்தையார் அண்டத்தின் தோற்றம் குறித்து, இன்றைய அறிவியல் கூறும் கருத்துக்களில் அனைத்தையும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் 1924 ல் நம் பால்வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என்பதைக் கண்டறிந்தார்.ஆனால் 1300ஆண்டுகளுக்கு முன்பே மாணிக்கவாசகர் தான் இயற்றிய திருவாசகத்தில், திருஅண்டப் பகுதியில் 100 கோடிக்கும் மேலான பால் வீதிகள் இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்:

கைகளை நீட்டிப்பார் ஆகாயம் உன்கைகளில்

           முயற்சிகளைச் செய்துபார் ஆகாயம் உன் காலடியில்

      விண்வெளிக்குப் பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில் விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா.

           1995 ஆம் ஆண்டு நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா கொலம்பியா விண்வெளி ஊர்தியான எஸ்டிஎஸ் என்பதில் பயணம்செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்த விண்வெளிப் பயணத்தில் சுமார் 372 மணி நேரம் விண்வெளியில் இருந்து சாதனை புரிந்து வெற்றிகரமாகப் பூமி திரும்பினார்.

நமது கடமை:                                                     

                   ”அறிவியல் எனும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்

                   கரிகாலன் தன் பெருமையெல்லம் கணினியுள்ளே பொருத்துங்கள்”     - வைரமுத்து

        அனைத்துக் கோள்களையும் இன்றைய அறிவியல் ஆராய்ந்து வருகிறது. மனிதன் வாழ தகுதியான போல் எது என்பதையும் ஆராய்ந்து வருகிறது. விண்ணியல் குறித்து ஆராய விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான ஊக்கத்தை நமது அரசாங்கம் அளிக்கின்றது. விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும். விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும்  அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு செய்யக்கூடாது. அப்துல் கலாம் அவர்களைப் போல நமது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும்

முடிவுரை:

       "வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்" என்ற பாரதியின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அதை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப் படைக்க வேண்டும்.

 (அல்லது)

. சான்றோர் வளர்த்த தமிழ்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர்களின் தமிழ்ப்பணி

தமிழின் சிறப்பு

முடிவுரை

முன்னுரை:

          சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தமிழின் தொன்மை:

Ø  தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் என்றுமுள தென்தமிழ் என்றார்.

Ø  கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்.

சான்றோர்களின் தமிழ்ப்பணி:

Ø  ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார்.

Ø  வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார்

Ø  தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

தமிழின் சிறப்புகள்:

Ø  தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களை கொண்ட மொழி.

Ø  இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது.

Ø  தமிழ் மூன்று சங்கங்களை கண்டு வளர்ந்தது.

முடிவுரை:

          சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம்.

போதைக்குள் செல்லாமல் இருப்பதே ஒரு மனிதன் செய்யும் மிகச் சிறந்த செயல் எனலாம். போதைப் பாவனையை ஒழிப்போம். போதையில்லா உலகை உருவாக்கப் பங்களிப்புச் செய்வோம்!

8


பதிவிறக்கம் செய்ய



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை