பத்தாம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வு , மார்ச் 2024
வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பு
அரசுப்பொதுத் தேர்வு-2024 மார்ச்
10.ஆம் வகுப்பு தமிழ்- உத்தேச விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா
எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
ஈ.
பாடல், கேட்டவர் |
1 |
2. |
ஆ. உவமைத்தொகை |
1 |
3. |
ஈ. வானத்தையும், பேரொலியையும் |
1 |
4. |
ஆ. தாளாண்மை, வேளாண்மை |
1 |
5. |
இ. அறியா வினா, சுட்டு விடை |
1 |
6. |
இ. குழந்தையே
வா |
1 |
7. |
இ.
குறிஞ்சி, மருதம் ,நெய்தல் நிலங்கள் |
1 |
8. |
அ. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது |
1 |
9. |
இ.
காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் |
1 |
10. |
ஆ. சங்க
காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது |
1 |
11. |
ஆ.
மலேசியா |
1 |
12. |
ஈ.
முல்லைப்பாட்டு |
1 |
13. |
இ.
அகன்ற உலகம் |
1 |
14. |
அ.
உரிச்சொல் தொடர் |
1 |
15. |
ஆ.
நப்பூதனார் |
1 |
பகுதி-2
பிரிவு-1 4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
சிலேடை
நயம் அமையுமாறு உரிய சான்றுடன் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
17 |
அ.
அறிவியலின் வளர்ச்சி எதை விரிவாக்குகிறது? ஆ.
எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி? |
2 |
18 |
உணவு உண்பதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும்
நூல்களையே வாங்குபவர் ம.பொ.சி. |
2 |
19 |
உழைத்ததால் கிடைத்த ஊதியம். ஏனெனில் பகைவரை வெல்லும்
ஆயுதம் அது. |
2 |
20 |
அருளைப்பெருக்க
கல்வி கற்போம்
, அறிவைத்திருத்த கல்வி கற்போம் |
2 |
21 |
முயற்சி
திருவினை ஆக்கும்
முயற்றின்மை இன்மை
புகுத்தி விடும். |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
22 |
சரியான தொடர்கள் : ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள்
உள்ளன ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. பிழையான
தொடர்
: ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன பிழைக்கான காரணம்
: தாற்றின் தொகுப்பு சீப்பு எனப் பிழையாக உள்ளது. |
2 |
23 |
அ. கொடுப்பதற்கு கோடு இடக் கூடாது ஆ. இயற்கைக்
காடுகளில் செல்ல செயற்கை கருவிகள் பயன்படுகின்றன. |
2 |
24 |
மயங்கிய – மயங்கு + இ(ன்) + ய் + அ மயங்கு – பகுதி இ(ன்) – இறந்தகாலஇடைநிலை;‘ன்’
புணர்ந்து கெட்டது.
ய் – உடம்படுமெய் அ - பெயரெச்சவிகுதி |
2 |
25 |
அ. உயிரி
தொழில் நுட்பம் ஆ. தொன்மம் செவிமாற்றுத்திறனாளர்களுக்கான
மாற்று வினா அ. பார்க்காத படம் ஆ. எழுதாக்கவிதை |
2 |
26 |
அ. நான் சுவைக்காத
இளநீர் வகை உண்டோ? ஆ. தமிழ்ப்புலவர் எழுதாக் கவிதைப் பொருள் உண்டா? |
2 |
27 |
"சீசர் எப்போதும் என்
சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிர
கடிக்காது
" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார். |
2 |
28 |
ü வேம் + கை என்பது கையைக் குறிக்கும்
தொடர்மொழி ü சேர்ந்து வரும்போது மரத்தையும், பிரிந்து வரும்போது கையையும்
குறித்தது ( பொதுமொழி) |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
# மறைகாணி எல்லாப் பக்கமும்
திரும்பி காட்சிகளைப் பதிவு செய்கிறது. #செயற்கைக் கோள் ஏவுதலில் அறிவியல்
புதுமைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. # மருத்துவத் துறையில் மாபெரும்
புரட்சி ஏற்பட்டுள்ளது. |
3 |
30 |
1. தொடர்ந்து பெய்த மழையால் 2. மீண்டும் மீண்டும் 3. பெய் மழை |
3 |
31 |
பிழையின்றி பொருந்திய
விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü உயிர்பிழைக்கும்
வழி அறியேன் ü உறுப்புகள்
அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன். ü உணவினத்
தேடும் வழி அறியேன் ü காட்டில்
செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார். |
3 |
|
33 |
ü விருந்தினரை வரவேற்றல் ü உணவுண்ண அழைப்பு ü வாழை இலையில் விருந்து ü வெற்றிலை பாக்கு ü வழியனுப்புதல் |
3 |
|
34 |
அ.
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்டநாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன்மகளே! திருக்குறளின்மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே! மணிமேகலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
|
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
அறிதல்,
அறியாமை, புரிதல், புரியாமை, தெரிதல், தெரியாமை, பிறத்தல், பிறவாமை |
3 |
||||||||||||||||||||||||
36 |
சொற்பின்வரு நிலையணி
– செய்யுளில் வந்த சொல்லே மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது |
3 |
||||||||||||||||||||||||
37 |
|
3 |
பகுதி-4 5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||||||||
38 |
அ) தமிழர் மருத்துவம்: •
தமிழர் மருத்துவமுறை என்பது சித்த மருத்துவம் ஆகும். *
தாவரம், விலங்கு, உலோகம்
அதாவது பஞ்சபூதங்கள் எல்லாம் மனித நலனுக்காக பயன்படுவன என்பது சித்த
மருத்துவத்தின் கோட்பாடு. தமிழர்கள் நோயைச் சரிபடுத்த இயற்கை தரும் இலை, காய், கனிகளிலிருந்தே மருந்தைக் கண்டனர். வாதம்,
பித்தம், சீதம் இவை மூன்றும் சமநிலையில்
இருந்தால் நோய் நம்மை நாடாது. `
தமிழர் மருத்துவமுறையில் பக்க விளைவுகள் ஏதுமில்லை. குணமாவதற்குச்
சில நாட்கள் ஆனாலும் மீண்டும் அந்நோய் நம்மைத் தாக்காது. நவீன மருத்துவம்: *
அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, மருத்துவத்துறையில்
பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. அறிவியல் முறையில் சுகமளித்தவர்களில் சிறந்தவர்
ஹிப்போகிரேட்ஸ். *
நவீன மருத்துவ முறையினால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்குச்
சாத்தியக்கூறுகள் உண்டு. நோய்கிருமிகள் உடனடியாக அழிக்கப்படுகின்றன.
நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால் இவ்வகை மருத்துவத்துறையில் கவனக்குறைவு
ஏற்பட்டால் உயிர் இறுதியாகிவிடும். உதாரணமாக, குருதி ஏற்றும்போது தொடர்புடையவரின் குருதி ஒரே இனமாக இருக்க வேண்டும்.
இவையெல்லாம் பரிசோதனை செய்து நோயாளியைக் குணப்படுத்த வேண்டும். . (அல்லது) ஆ)
ü கிடைத்தற்கரியபேறுகளுள்எல்லாம்
பெரும்பேறு பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதல் ஆகும். ü குற்றங்கண்டபொழுது இடித்துக் கூறும் பெரியாரைத் துணைக்கொள்ளாத பாதுகாப்பற்றமன்னன்,
பகைவர் இன்றியும் தானேகெடுவான். ü தானொருவனாக நின்று பலரோடு பகைமேற்கொள்வதைக் காட்டிலும்
பல மடங்கு தீமையைத் தருவது நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுதலாகும். |
5 |
||||||||||||||||||
39 |
அ) மதுரை-1, 08-02-2024 அன்புள்ள
தம்பிக்கு, உன் அன்பு அண்ணன்
எழுதும் கடிதம். நான் இங்கு நலமாக உள்ளேன். உன் நலத்தையும், அம்மா,அப்பா, தாத்தா,
பாட்டி அனைவருடைய நலத்தையும் அறிய அவா.நீ எவ்வாறு படிக்கிறாய்?
படிப்பையும் விளையாட்டையும் இருகண்களென நினைத்து, இரண்டிலும் கவனம் செலுத்துக.திறன்பேசி அதிகமாகப் பயன்படுத்துவதாக அப்பா
கூறினார்.திறன்பேசியினால் நன்மையும் உண்டு;தீமையும் உண்டு.
படிப்பிற்காக இணையத்தைப் பயன்படுத்தும்போது, இலவசஇணைப்பு
போல்,தேவையற்ற விளம்பரங்களும், காட்சிகளும்
உன்னைக் கவரும். அவற்றை விலக்கி விட்டு,படிப்பில் மட்டும்
கவனம் செலுத்தி, கல்வியில் உயர்நிலையை அடைய முயலவும்.
அப்பா அம்மா சொல்வதைக் கேட்டு நல்ல பெண் என்று பெயர் எடுக்க வேண்டும். அடுத்த
மாதம் விடுமுறையில் வரும்போது நேரில் பேசலாம். இப்படிக்கு உன்
அன்பு அண்ணன் த.தமிழ்நிலவன். ஆ) அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், , சேலம் – 636001 ஐயா, பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும்
தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன்
கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி. இணைப்பு:
இப்படிக்கு, 1. கட்டுரை
தங்கள் உண்மையுள்ள, இடம் : சேலம்
அ அ அ அ அ. நாள் : 04-03-2021
உறை மேல் முகவரி: |
5 |
||||||||||||||||||
40 |
|
5 |
||||||||||||||||||
41 |
மேல்நிலை
வகுப்பு – சேர்க்கை விண்ணப்பப் படிவம்
சேர்க்கை
எண்:
1234 நாள்: 26-03-2024 வகுப்பும் பிரிவும்:11.ஆம்
வகுப்பு / ஆ பிரிவு 1. மாணவரின் பெயர் : த. வான்மலர் 2. பிறந்த நாள் : 10-12-2009 3. தேசிய இனம் : இந்தியன் 4. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் : தமிழ்வேந்தன் 5. வீட்டு முகவரி : 7 பாரதி தெரு, விருதாச்சலம், கடலூர் 6. இறுதியாகப் படித்த வகுப்பு : 10.ஆம் வகுப்பு 7. பயின்ற மொழி : தமிழ் 8. இறுதியாகப் படித்த பள்ளியின் முகவரி : அரசு உயர்நிலைப்பள்ளி, விருதாச்சலம் 9. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் :
9. மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா? : ஆம் 10. தாய்மொழி : தமிழ் 11. சேர விரும்பும் பாடப்பிரிவும் பயிற்று மொழியும் : அறிவியல் பிரிவு/தமிழ்
த. வான்மலர் மாணவர்
கையெழுத்து |
5 |
||||||||||||||||||
42 |
அ)
ஆ) கலைஞர்களால் தெருவில் இசை நாடகம் போல் நடத்தப்படுவதே தெருக்கூத்து. இதில் இராமாயணம்,மகாபாரதம்
போன்ற இதிகாசங்களிலும் இன்னபிற பழங்கால புராணங்களிலிருந்தும் கதைகளை,நிறைய பாடல்களுடன் நாடகமாக்கம் செய்து, சூழ்நிலைக்கேற்ப வசன்ங்களை சேர்த்து கலைஞர்கள் மெருகேற்றி நடிப்பார்கள். பதினைந்திலிருந்து இருபது கலைஞர்கள் ஒரு குழுவாக “ கூத்து குழு “
ஒன்றை அமைத்து இதை நடத்துவர். குழுவுக்கென பாடகர் இருந்தாலும் அனைவருமே தங்கள் குரலில் பாடுவர். கலைஞர்கள் மிக கனமான உடைகளும்,ஆபரணங்களும் அணிந்து கனமாக முகப்பூச்சும் அணிந்து பங்கு கொள்கிறார்கள். இவை கிராமங்களில் புகழ் பெற்றவை செவி மாற்றுத் திறனாளர்களுக்கான
மாற்று வினா: 1.
வாழை இலை 2.
தமிழர் 3.
மருத்துவப்பயன்கள் 4.
மனநிலை 5.
தமிழர் விருந்தோம்பல் |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) # செயற்கைக் கோள் ஏவுதலில் செயற்கை
நுண்ணறிவு சிறப்பாகச் செயல்படும். # மருத்துவத் துறையில் மாபெரும்
புரட்சி ஏற்பட செயற்கை நுண்ணறிவு வழிவகுக்கும். # வேளாண்மையில் எண்ணற்ற முன்னேற்றம்
காண அறிவியல் உதவும். # செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பயன்படும். # மனிதர்களால் செய்ய இயலாத செயல்களையும்
செய்ய இயலும். # பள்ளிகள்,மருத்துவமனைகள்,வங்கி,அலுவலகம்
போன்ற இடங்களில் இயந்திர மனிதன் தனது சேவையை
அளிக்கும். (அல்லது) ஆ) கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச் சான்றுகள்,கருத்துச்செறிவு,
சொல்பயன்பாடு ,பிழையின்மை, தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக. |
8 |
44 |
அ. முன்னுரை: யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர நெஞ்சம்
உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி தனது “ ஒருவன்
இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன்,
ஆறுமுகம் ஆகிய இரு பாத்திரங்களைப்
படைத்துள்ளார். குப்புசாமியின்
குடும்ப நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். நோயுற்ற குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று
ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். ஆறுமுகம்: வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு
அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த
செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி
பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து
குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான்,
இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின்
வாக்கிற்கு மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும்
ஆறுமுகமும்.
ஆ. இராமானுசர்
நாடகம் முன்னுரை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை
மலர்வது குறிஞ்சி, தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலர்வது
மூங்கில், நம் தலைமுறைக்கு ஒரு முறை பிறப்பவர்களே ஞானிகள்.
அத்தகைய ஞானிகளுள் ஒருவர் இராமானுசர், அவரைப் பற்றி
இக்கட்டுரையில் காண்போம். தண்டும்
கொடியுமாக: திருமந்திரத் திருவருள்
பெறத் தண்டும், கொடியுமாக இராமானுசரை வரச் சொல்லுங்கள்
என்னும் செய்தி, பூரணரால் திருவரங்கத்திற்கு
அனுப்பப்பட்டது. அதனால் இராமானார், கூரேசர், முதலியாண்டான் ஆகிய மூவரும் பூரணர் இவ்வத்திற்கு வந்தனர். அவர்களைக்
கண்ட பூரணர் கோபம் கொண்டு "நாள் உணக்கு மட்டும் தான் அம்மந்திரத்தைச்
சொல்வேன், நீ உறவுகளுடன் என் வந்தாய்?" என வினவினார். அதற்கு இராமானுசர், "தாங்கள்
கூறிய தண்டு கொடிக்கு இணையானவர்கள் இவர்கள். எனவே கோபம் கொள்ளாது பரிவு கொண்டு
திருவருள் புரிய வேண்டும்" என்று கூறினார், ஆசிரியரின்
கட்டளை: பூரணர் மூவரையும்
வீட்டிற்குள் அழைத்து "நான் கூறப்போகும் திருமந்திர மறை பொருள்கள் உங்கள்
மூவருக்கு மட்டுமே தெரிய வேண்டும். வேறு யாரிடமாவது இதைக் கூறினால் அது ஆசிரியர்
கட்டளையை மீறியதாகும். அப்படி நடந்தால் அதற்குத்தண்டனையாக நாகமே கிட்டும்"
என்றார். பின்னர் "திருமகளுடன் கூடிய நாரயணனின் திருப்பாதங்களைப்
புகலிடமாகக் கொள்கிறேன்; திருவுடன் சேர்ந்த நாராயணனை
வணங்குகிறேன்" என்று பூரணர் கூறிய திருமந்திரத்தை மூலரும் மூன்று முறை
உரக்கச் சொன்னார்கள். திருமந்திரத்தை
மக்களுக்கு உரைத்தல்: திருக்கோட்டியூர் சௌம்ப
நாராயணன் திருக்கோவில் மதில் சுவரின் மேல் இராமனுார் நின்று கொண்டு, உரத்த குரலில் பேசத் தொடங்கினார். "கிடைப்பதற்கரிய பிறவிப்பிணியைத்
தீர்க்கும் அருமருந்தான திருமந்திரத்தை உங்களுக்குக் கூறுகிறேன். அனைவரும் இணைந்து
மந்திரத்தைச் சொல்லுங்கள்". அவர் சொல்லச் சொல்ல அனைவரும் உரத்தக் குரலில்
மூன்று முறை கூறினார்கள். குருவின்
சொல்லை மீறுதல்: குருவின் (பூரணரின்)
சொல்லை மீறியதற்காக கோபம் கொண்ட பூரணரிடம் "கிடைப்பதற்குரிய மந்திரத்தைத்
தங்களின் திருவருளால் நான் பெற்றேன். அதன் பயனை அனைவருக்கும் கிட்டவேண்டும்.
அவர்கள் பிறவிப்பினளி நீங்கி பெரும் பேறு பெற்றிட, நான்
மட்டும் நரகத்தை அடைவேன்" என்று விளக்கமளித்தார். குருவின்
ஆசி இராமானுசரின் பரந்த
மனத்தைக் கண்ட குரு பூரணர், அவரை மன்னித்து அருளினார்
மேலும் இறைவனின் ஆசி பெற அவரை வாழ்த்தினார். இராமானுசத்திற்கு தன் மகள் சௌப்ய
நாராயணனை அடைக்கலமாக அளித்தார். முடிவுரை யாம் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம்' என்ற உயரிய மந்திரத்தை வாழ்வாக்கியவர்
இராமானுசர், தனக்கென வாழாது பிறருக்காக நரகமும் செல்ல
முன்வந்த பெருமகளார் |
8 |
45 |
அ. முன்னுரை: சாலை பாதுகாப்பு நாட்டின்
முக்கியமான ஒரு பிரச்சினையாக உள்ளது. அரசு தெரிவிக்கும் ஒரு புள்ளி
விவரத்தின்படி ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1.10 இலட்சம் மக்ள்
விபத்தினால் உயிர் இழக்கின்றனர் என்பது அதிர்ச்சி தரும் செய்தியாகும். சாலை பாதுகாப்பு, உயிர்
பாதுகாப்பு: ஆண்டுதோறும் சனவரி முதல்
வாரம் சாலைப் பாதுகாப்பு வாரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது வாகன
ஓட்டுநர்கள், பாதசாரிகள் ஆகியவர்களுக்கிடையே சாலை
பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுகிறது. சாலை பாதுகாப்பு என்பது
உயிர் பாதுகாப்பு. சாலை விதிகள்: ü போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு
விளக்கு எரிந்தால் நிற்கவும், மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையைச் கடக்கத் தயாராக
இருக்கவும். பச்சை விளக்கு எரிந்தால் செல்லவும் வேண்டும். ü தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி, மற்றும் நோயாளர் வண்டி
போன்றவைகளுக்கு வாகன ஓட்டுநர்கள் தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும். ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்: ü ஊர்தி ஓட்டுநர் சாலையின் இடது
புறத்திலேயே வாகனங்களைச் செலுத்துதல் வேண்டும். ü 'U' திருப்பம் இல்லாத இடங்களில் தங்களது
வாகனங்களை திருப்பக் கூடாது. ü அனுமதிக்கப் பட்ட இடங்களில் தான்
வாகனங்களைத் திருப்ப வேண்டும். விபத்துகளைத் தவிர்ப்போம், விழிப்புணர்வு
தருவோம்: வாகனம் ஓட்டும்போது
கைபேசியைப் பயன்படுத்துதல் கூடாது. நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது,
ஓட்டுநர் மற்றும் பயணிகள் வார்பட்டை அணிய வேண்டும். மது
அருந்திவிட்டு வானகத்தை இயக்கக் கூடாது. முடிவுரை: மக்கள் சாலைப் பாதுகாப்பின்
முக்கியத்துவத்தை உணர்ந்து, சாலை விதிகளைப் பின்பற்ற
வேண்டும். இதன் மூலம் விலை மதிப்பு மிக்க ஆயிரக்கணக்கான உயிர்களைப் பாதுகாக்க
முடியும். (அல்லது) ஆ) நூல் தலைப்பு: கனவெல்லாம்
கலாம் அன்று இந்தியாவை
அறியாதவர்கள் கூட காந்தியடிகளை அறிந்திருந்தார்கள், காந்திதேசத்திலிருந்து
வருகிறீர்களா? என்பார்கள். இன்று இந்தியாவை அறியாதவர்களும்
மாமனிதர் அப்துல்கலாம் அவர்களை அறிந்திருக்கிறார்கள். இந்தியாவின் அடையாளமாக
தமிழர்கள் பெருமையாக அறியப்பட்ட அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான்
இந்த" கனவெல்லாம் கலாம்” என்ற நூலாகும். இதுவே
இந்நூலின் தலைப்புமாகும். நூலின் மையப் பொருள்: இந்நூலாசிரியர்
மிகவும் உன்னிப்பாக உற்றுநோக்கி மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த
தகவல்கள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும்
தொகுத்துள்ளார்.அப்துல் கலாம் பற்றி அறிய வேண்டிய அனைவரும் படிக்க வேண்டிய
நூல்" கனவெல்லாம் கலாம்” வெளிப்படும் கருத்து: மாமனிதர் அப்துல்கலாம்
அவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் எளிமை,
இனிமை, நேர்மை ஆகியவையாகும். அவர் உலகப்
பொதுமறையை ஆழ்ந்து படித்ததோடு நின்றுவிடாமல் அதன்படி வாழ்ந்ததால் உலகப்புகழ்
பெற்றார் என்பதே உண்மை. நூல் கட்டமைப்பு: நூலாசிரியர் இந்நூலில்,1. காணிக்கை
கட்டுரைகள்,2. இரங்கல் செய்திகள், 3.கவிதை
மாலை,4. கலாம் அலைவரிசை,5. கலாம்
கருவூலம் ஆகிய ஐந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார். முன்னணி நாளிதழ்கள்,
வார இதழ்கள், மாத இதழ்கள் மட்டுமின்றி
சிற்றிதழ்கள் வரை களம் பற்றிய தகவல்களை தேடித் தேடித் தொகுத்துள்ளார்.
முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது உண்மையே. சிறப்புக் கூறு: பொதுவாக தொகுப்பு நூலை
உருவாக்க, தகவல்களைத் தேடித் தேடி தொகுப்பது எளிதான
செயலன்று. ஆனால் அவற்றையெல்லாம் வகுத்து முறைப்படுத்துவது அதைவிட அரிய செயலாகும்.
தகவல் தொகுப்பு இந்நூலின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது. நூலாசிரியர்: தமிழ்த்தேனீ முனைவர்.
இரா.மோகன் |
8 |