THIRD REVISION 10 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEY - RANIPET DISTRICT

மூன்றாம் திருப்புதல் தேர்வு - பிப்ரவரி 2024 


இராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர் மாவட்டம்👇👇

வினாத்தாளைப் பதிவிறக்க  

மூன்றாம் திருப்புதல் தேர்வு-2024 பிப்ரவரி , இராணிப்பேட்டை மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. வணிகக்கப்பல்களும், ஐம்பெருங்காப்பியங்களும்

1

2.     

அ.அரும்பு

1

3.     

இ. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு   

1

4.     

ஆ. இறைவனிடம், குலசேகராழ்வார்

1

5.     

ஆ. வினா வழு

1

6.     

ஈ. மன்னன் , இறைவன்

1

7.     

ஈ. அங்கு வறுமை இல்லாததால்

1

8.     

. இராமன்    

1

9.     

இ. வலிமையை நிலைநாட்டல்

1

10.    

. சிலப்பதிகாரம்

1

11.    

ஈ. சிலப்பதிகாரம்

1

12.   

அ. அகவற்பா

1

13.   

ஈ. தலையில் கல் சுமப்பது

1

14.   

அ. கருணையன், எலிசபெத்துக்காக

1

15.   

அ. விளக்கு

1

 

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

17

யாப்புக்கட்டுகளுக்கு அப்பாற்பட்டு செய்யுளும் , உரைநடையும் கலந்து எழுதப்பெறுவது வசன கவிதை.

2

18

வாருங்கள்,நலமா? ,நீர் அருந்துங்கள்

2

19

# பாசவர்- வெற்றிலை விற்பவர்.                                                                                                                     # வாசவர்- நறுமணப் பொருட்களை விற்பவர்கள்.                                                                                               # பல்நிண வினைஞர்- பல்வகை இறைச்சிகளை விலை கூறி விற்பவர்கள்.

# உமணர்உப்பு விற்பவர் 

2

20

சித்தாளுடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்.

2

21

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

2

 

                                                               பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

ü  வேம் + கை என்பது கையைக் குறிக்கும் தொடர்மொழி

ü  சேர்ந்து வரும்போது மரத்தையும், பிரிந்து வரும்போது கையையும் குறித்தது ( பொதுமொழி)

2

23

அ. புயல்  ஆ. குறியீட்டியல்

2

24

. உள்ளளவும் நினை    . மூன்று நாளுக்கு

2

25

கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதும் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

2

26

அ. தஞ்சை  ஆ. உதகை

2

27

அ. கனிமொழி தேர்வுக்கு கண்ணும் கருத்துமாக படித்தாள் வெற்றிப் பெற்றாள்.

ஆ. கோபத்தை ஆறப்போட வேண்டும்.

2

28

அ. நான்கு+ திசை   - 

ஆ. இரண்டு+ திணை  - உ

2

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

    ) நாற்று- நெல் நாற்று நட்டேன்.

     ) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன்

      ) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது                 

      ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன்.

      ) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது.

3

30

   உணவு உண்பதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும் நூல்களையே வாங்குபவர் ம.பொ.சி.

3

31

. மீண்டும் மீண்டும்

. தொடர் மழை

. உள்ளீடு

3

 

                                                                                   பிரிவு-2                                                               2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

 

தமிழ்

கடல்

1

முத்தமிழாக வளர்ந்தது

முத்தினைத் தருகிறது.

2

முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது

முச்சங்கினைத் தருகிறது.

3

ஐம்பெருங்காப்பியங்கள்- அணிகலன்கள்

கடலில் செல்லும் கப்பல்கள்

4

சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

சங்கினைக் காக்கிறது

3

33

ü  காலில் அணிந்த கிண்கிணிகளோடு சிலம்புகள் ஆடட்டும்.

ü  அரைஞாண் மணியோடு அரைவடங்கள் ஆடட்டும்.

ü  தொந்தியுடன் சிறுவயிறும் ஆடட்டும்.

ü  நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும் ஆடட்டும்.

ü  முருகப்பெருமானே செங்கீரை ஆடுக.

3

34

.

    வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்

    மாளாத காதல் நோயாளன்போல் மாயத்தால்

    மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

    ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே

.

 

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் ப􀁈ொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடைஅறியா

வளம்தலைமயங்கியநனந்தலைமறுகும்;

பால்வகைதெரிந்தபகுதிப் பண்டமொடு

     கூலம் குவித்த கூல வீதியும்

3

                                                                                          பிரிவு-3                                                          2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.

35

     'கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர்

      மாமழை பெய்கையிலே- உரிச்சொல் தொடர்

      பாடினேன் தாலாட்டுவினைமுற்றுத்தொடர்

      மாம்பூவே - விளித்தொடர்

      ஆடி ஆடி ஓய்ந்துறங்குஅடுக்குத்தொடர்

3

36

தற்குறிப்பேற்ற அணி:

             இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி.

சான்று:

             “   போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

                 வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட

அணிப்பொருத்தம்:

               கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில் அசைந்தது. இது இயல்பான நிகழ்வு என்றாலும்அக்கொடியானது  கோவலன் கண்ணகியை,”மதுரை நகருக்குள் வரவேண்டாம்எனக் கூறிகையசைப்பதாகக் கம்பர் தனது குறிப்பை ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று

3

37

சீர்

அசை

வாய்பாடு

தேவர்

நேர்+நேர்

தேமா

அனையர்

நிரை+நேர்

புளிமா

கயவர்

நிரை+நேர்

புளிமா

அவருந்தாம்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

மேவன

நேர்+நிரை

கூவிளம்

செய்தொழுக

நேர்+நிரை+நேர்

கூவிளங்காய்

லான்

நேர்

நாள்

3

 

                                                                               பகுதி-4                                                             5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

)

ü  மேகம் மழையைப் பொழிகிறது

ü  திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம்.

ü  கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர்.

ü  இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள்.

ü  தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள்

(அல்லது)

)

ü  குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.

ü  இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

5

39

)

புகார் விண்ணப்பம்

அனுப்புநர்

                        அ அ அ அ அ,

                        100,பாரதி தெரு,

                        சக்தி நகர்,

                        சேலம் – 636006.

பெறுநர்

            உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

            உணவு பாதுகாப்பு ஆணையம்,

            சேலம் – 636001

ஐயா,

பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல்சார்பு

      வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது.இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

 

இணைப்பு:                                                                                                                                  

1. விலை இரசீதுநகல்                                                                                                                             

 

தங்கள் உண்மையுள்ள,

                                                                                                                                                                                            அ அ அ

இடம் : சேலம் 

நாள் : 04-03-2021

உறை மேல் முகவரி

 

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

மேல்நிலை வகுப்புசேர்க்கை விண்ணப்பப் படிவம்

 

சேர்க்கை எண்: 1234  நாள்: 04-03-2024  வகுப்பும் பிரிவும்:  பதினொன்றாம் வகுப்பு/ ஆ பிரிவு

     

1.    மாணவரின் பெயர்                                                    :        கு.தமிழரசன்

2.   பிறந்த நாள்                                                               :        12-10-2009

3.   தேசிய இனம்                                                            :        இந்தியன்

4.   பெற்றோர் / பாதுகாவலர் பெயர்                                 :        குமாரசாமி

5.   வீட்டு முகவரி                                                           :        10, கம்பர் தெரு

6.   இறுதியாகப் படித்த வகுப்பு                                        :        பத்தாம் வகுப்பு

7.   பயின்ற மொழி                                                          :        தமிழ்

8.   இறுதியாகப் படித்த பள்ளியின் முகவரி                     :        அரசு உயர்நிலைப்பள்ளி,

                                                                                                திருச்சி

9.   பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்                   :       

தேர்வின் பெயர்

பதிவு எண் - ஆண்டு

பாடம்

மதிப்பெண் (100)

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு

123456

(2023-2024)

தமிழ்

100

ஆங்கிலம்

99

கணிதம்

100

அறிவியல்

100

சமூக அறிவியல்

100

மொத்தம்

499

 

9.   மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா?                     :     ஆம்

10.  தாய்மொழி                                                                         :     தமிழ்

11.  சேர விரும்பும் பாடப்பிரிவும் பயிற்று மொழியும்                   :     அறிவியல்/தமிழ்

கு.தமிழரசன்

மாணவர் கையெழுத்து

5

42

)

1. புறம் பேசாதிருத்தல்

1. தேவையற்றச் சண்டைகள் நீங்கும்

2. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல்

2. மன அமைதிப் பெறலாம்.

3. உண்மை பேசுதல்

3. நம் வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம்

4. உதவி செய்தல்

4. மன மகிழ்ச்சி கிடைக்கும்

5. அன்பாய் இருத்தல்

5. அனைவரும் நண்பராகிவிடுவர்

 

)

        கலைஞர்களால் தெருவில் இசை நாடகம் போல் நடத்தப்படுவதே தெருக்கூத்து. இதில் இராமாயணம்,மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் இன்னபிற பழங்கால புராணங்களிலிருந்தும் கதைகளை,நிறைய பாடல்களுடன் நாடகமாக்கம் செய்து, சூழ்நிலைக்கேற்ப வசன்ங்களை சேர்த்து கலைஞர்கள் மெருகேற்றி நடிப்பார்கள். பதினைந்திலிருந்து இருபது கலைஞர்கள் ஒரு குழுவாககூத்து குழுஒன்றை அமைத்து இதை நடத்துவர். குழுவுக்கென பாடகர் இருந்தாலும் அனைவருமே தங்கள் குரலில் பாடுவர். கலைஞர்கள் மிக கனமான உடைகளும்,ஆபரணங்களும் அணிந்து கனமாக முகப்பூச்சும் அணிந்து பங்கு கொள்கிறார்கள். இவை கிராமங்களில் புகழ் பெற்றவை

                       

5

 

பகுதி-5                                                             3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

 )  

விருந்தினரை வரவேற்றல்:

     என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்த உறவினரை அகமும் முகமும் மலர்ந்து வரவேற்று நலம் விசாரித்து அவர் குடிப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தேன்.

உணவுண்ண அழைப்பு:

   உணவு உண்ண அழைத்து, கைகழுவ தண்ணீர் கொடுத்தும் அமர வைத்தேன்.

வாழை இலையில் விருந்து:

    தலைவாழை இலை விருந்து என்பது தமிழ் மரபு. அந்த வகையில் தலைவாழை இலையில் உறவினருக்கு உணவிட்டேன். உணவை உண்ணும் உறவினரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை விரித்திருந்தேன்.

     உறவினரின் மனமறிந்து, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறினேன்.

வெற்றிலை பாக்கு:

     உணவு உண்ட உறவினரை ஒரு பாத்திரத்தில் கைகளைக் கழுவுமாறு தண்ணீர் ஊற்றினேன். கைக்குட்டை போன்ற துணியைத் தந்து கைகளைத் துடைத்துக்கொள்ள வைத்தேன். பிறகு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பினை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தேன். அவர் அதை மகிழ்வுடன் உண்டார்.

வழியனுப்புதல்:

    உணவு உண்ட உறவினரிடம் திருப்தியாக உண்டீர்களா? என விசாரித்து வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன் வீட்டிலிருந்த இனிப்புகளையும் கொடுத்து அவரது வீட்டில் உள்ளவர்களிடம் கொடுக்கும்படி அன்புடன் கூறி, வாயில்வரை சென்று வழியனுப்பி வைத்தேன்.

 

(அல்லது)

)

8

44

.

வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்)

 முன்னுரை:

                யாரையும் அலட்சியப்படுத்தாத  ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி  தனதுஒருவன் இருக்கிறான்என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்  ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.

 குப்புசாமியின் குடும்ப நிலை:

              காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை. வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து தாய்மாமனும்  மட்டுமே அவனது உறவினர்கள்.

நோயுற்ற குப்புசாமி:

               சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.

ஆறுமுகம்:

              வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.

 முடிவுரை:

                  “ பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

                    மண்புக்கு மாய்வது மன்”   

 பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு  மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.                                    

(அல்லது)

.

முன்னுரை:

    கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர் ,தனது அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியதே புயலிலே  ஒரு தோணி எனும் குறும்புதினமாகும்.

புயல்:

      கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது.

தொங்கானின் நிலை:

   அதிக மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது.

கரை காணுதல்:

   அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது.கப்பல் அங்கிருந்த பினாங்கு துறைமுகத்தை நெருங்கியது.அங்கிருந்தவர்கள்எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டனர்.

சீட்டு வழங்குதல்:

    பயணிகள் சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர். அங்கிருந்த அலுவலர் அனுமதி முத்திரை இட்டுத்தந்தார்.

முடிவுரை:

    புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன.

8

45

.

நூல் தலைப்பு: கனவெல்லாம் கலாம்

      அன்று இந்தியாவை அறியாதவர்கள் கூட காந்தியடிகளை அறிந்திருந்தார்கள், காந்திதேசத்திலிருந்து வருகிறீர்களா? என்பார்கள். இன்று இந்தியாவை அறியாதவர்களும் மாமனிதர் அப்துல்கலாம் அவர்களை அறிந்திருக்கிறார்கள்.இந்தியாவின் அடையாளமாக தமிழர்கள் பெருமையாக அறியப்பட்ட அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான் இந்த" கனவெல்லாம் கலாம்என்ற நூலாகும். இதுவே இந்நூலின் தலைப்புமாகும்.

நூலின் மையப் பொருள்:

        இந்நூலாசிரியர் மிகவும் உன்னிப்பாக உற்றுநோக்கி மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த தகவல்கள், கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும் தொகுத்துள்ளார்.அப்துல் கலாம் பற்றி அறிய வேண்டிய அனைவரும் படிக்க வேண்டிய நூல்" கனவெல்லாம் கலாம்

வெளிப்படும் கருத்து:

     மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் எளிமை, இனிமை, நேர்மை ஆகியவையாகும். அவர் உலகப் பொதுமறையை ஆழ்ந்து படித்ததோடு நின்றுவிடாமல் அதன்படி வாழ்ந்ததால் உலகப்புகழ் பெற்றார் என்பதே உண்மை.

நூல் கட்டமைப்பு:

     நூலாசிரியர் இந்நூலில்,1. காணிக்கை கட்டுரைகள்,2. இரங்கல் செய்திகள், 3.கவிதை மாலை,4. கலாம் அலைவரிசை,5. கலாம் கருவூலம் ஆகிய ஐந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார். முன்னணி நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் மட்டுமின்றி சிற்றிதழ்கள் வரை களம் பற்றிய தகவல்களை தேடித் தேடித் தொகுத்துள்ளார். முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது உண்மையே.

சிறப்புக் கூறு:

      பொதுவாக தொகுப்பு நூலை உருவாக்க, தகவல்களைத் தேடித் தேடி தொகுப்பது எளிதான செயலன்று. ஆனால் அவற்றையெல்லாம் வகுத்து முறைப்படுத்துவது அதைவிட அரிய செயலாகும். தகவல் தொகுப்பு இந்நூலின் சிறப்புக் கூறாகக் கருதப்படுகிறது.

நூலாசிரியர்:  தமிழ்த்தேனீ முனைவர். இரா.மோகன்

 

(அல்லது)

 

 

 

)

முன்னுரை:

உள்ளம் கொள்ளை போனதே

மக்கள் நிறைந்த பொடுட்காட்சியில்

    குடும்பத்தினருடன் வெளியில் செல்வது யாருக்கு தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன் அரசு பொருட்காட்சிக்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன்.

அறிவிப்பு:

     மகிழுந்தை வெளியில் நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த அரங்குகள் எங்கெங்கே அமைக்கப்பட்டுள்ளன? துறைசார்ந்த அரங்குகளின் திசை உள்ளிட்ட அனைத்தும் ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

அமைப்பு:

அழகு நிறைந்த பொருட்காட்சி

அதன் அரங்குகளே அதற்கு சாட்சி

      பொருட்காட்சியின் தொடக்கத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும் உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் பொருட்காட்சியின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. அந்த வரைபடம் பொருட்காட்சி அமைப்பை மக்களுக்கு எளிதில் விளக்குவதாக அமைந்திருந்தது. மேலும் பொருட்காட்சியின் அமைப்பு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

சிறு அங்காடிகள்:

மெல்ல மெல்ல இருண்டதே!

பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே!”

     பொருட்காட்சியில் விளையாட்டு பொருள்கள், தின்பண்டங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனங்கள், சமையல் கலன்கள், நெகிழிப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.

நிகழ்த்தப்பட்ட கலைகள்:

            சுற்றியது இராட்டினங்கள் மட்டுமல்ல

            அதனோடு சேர்ந்து எங்கள் மனங்களும்தான்

      பொருட்காட்சியின் உள்ளே இருந்த பொழுதுபோக்கு அம்சங்களில் குறிப்பிடத்தக்கது நிகழ்கலை ஆகும். அங்கே மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு அது புதுவித அனுபவமாக இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் சிறுவர்களின் மனம் கவரும் வகையில் பல விளையாட்டு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

பேச்சரங்கம்:

        இலக்கிய விரும்பிகளுக்கு விருந்தளிக்கும் வகையில், பொருட்காட்சியில் பேச்சரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். பொருட்காட்சிக்கு வந்த மக்களில் பலர் மெய்மறந்து பேச்சாளர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு நின்றனர். நாலும் என் குடும்பத்தினரும் கூட பேச்சி அரங்கத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்டு விட்டு வந்தோம்.

அரசின் நலத்திட்டங்கள்:

      பொருட்காட்சிக்கு முத்தாய்ப்பாக அரசின் நலத்திட்டங்களை விளக்கும் துறைவாரியான அரங்குகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தின.அந்த அரங்குகளில் அந்தந்த துறைசார்ந்த வஊழியர்கள் அவர்களது பணிகளையும், மக்களுக்காக அவர்கள் ஆற்றும் சேவைகளையும் விளக்கும் வகையில் அந்த அரங்குகளை அமைத்து இருந்தனர்.

முடிவுரை:

         இறுதியாக எனக்குத் தேவையான சில பொருட்களை அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது.

8

 

 பதிவிறக்கம் செய்ய

 

 


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை