10 TH STD POTHUKATTURAI ARASUPORUTKATCHI அரசுப்பொருட்காட்சி

 7) நீங்கள் சென்று வந்த அரசுப் பொருட்காட்சியில், அறிவிப்பு, அமைப்பு, சிறு அங்காடிகள், நிகழ்த்தப்பட்ட கலைகள், பேச்சரங்கம்,அரசின் நலத்திட்டங்கள் குறித்த விளக்கங்கள் போன்றவற்றைக் குறிப்புகளாகக் கொண்டு ஒரு கட்டுரை வரைக.

தலைப்பு: அரசுப் பொருட்காட்சிக்கு சென்று வந்த நிகழ்வு

முன்னுரை:

உள்ளம் கொள்ளை போனதே

          மக்கள் நிறைந்த பொடுட்காட்சியில்

    குடும்பத்தினருடன் வெளியில் செல்வது யாருக்கு தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன் அரசு பொருட்காட்சிக்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன்.

அறிவிப்பு:

     மகிழுந்தை வெளியில் நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த அரங்குகள் எங்கெங்கே அமைக்கப்பட்டுள்ளன? துறைசார்ந்த அரங்குகளின் திசை உள்ளிட்ட அனைத்தும் ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

அமைப்பு:

அழகு நிறைந்த பொருட்காட்சி

        அதன் அரங்குகளே அதற்கு சாட்சி

      பொருட்காட்சியின் தொடக்கத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும் உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் பொருட்காட்சியின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. அந்த வரைபடம் பொருட்காட்சி அமைப்பை மக்களுக்கு எளிதில் விளக்குவதாக அமைந்திருந்தது. மேலும் பொருட்காட்சியின் அமைப்பு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

சிறு அங்காடிகள்:

மெல்ல மெல்ல இருண்டதே!

                         பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே!”

     பொருட்காட்சியில் விளையாட்டு பொருள்கள், தின்பண்டங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனங்கள், சமையல் கலன்கள், நெகிழிப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.

நிகழ்த்தப்பட்ட கலைகள்:

சுற்றியது இராட்டினங்கள் மட்டுமல்ல

            அதனோடு சேர்ந்து எங்கள் மனங்களும்தான்

      பொருட்காட்சியின் உள்ளே இருந்த பொழுதுபோக்கு அம்சங்களில் குறிப்பிடத்தக்கது நிகழ்கலை ஆகும். அங்கே மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு அது புதுவித அனுபவமாக இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் சிறுவர்களின் மனம் கவரும் வகையில் பல விளையாட்டு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

பேச்சரங்கம்:

        இலக்கிய விரும்பிகளுக்கு விருந்தளிக்கும் வகையில், பொருட்காட்சியில் பேச்சரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். பொருட்காட்சிக்கு வந்த மக்களில் பலர் மெய்மறந்து பேச்சாளர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு நின்றனர். நாலும் என் குடும்பத்தினரும் கூட பேச்சி அரங்கத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்டு விட்டு வந்தோம்.

அரசின் நலத்திட்டங்கள்:

      பொருட்காட்சிக்கு முத்தாய்ப்பாக அரசின் நலத்திட்டங்களை விளக்கும் துறைவாரியான அரங்குகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தின.அந்த அரங்குகளில் அந்தந்த துறைசார்ந்த வஊழியர்கள் அவர்களது பணிகளையும், மக்களுக்காக அவர்கள் ஆற்றும் சேவைகளையும் விளக்கும் வகையில் அந்த அரங்குகளை அமைத்து இருந்தனர்.

முடிவுரை:

         இறுதியாக எனக்குத் தேவையான சில பொருட்களை அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது.

பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்...

You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை