அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். தமிழ்ப்பொழில் வலைதளத்திற்குத் தங்கள் அளித்து வரும் பேராதரவுக்கு மனமார்ந்த நன்றிகள். இந்த கல்வியாண்டு தொடக்கத்திலிருந்து தமிழ்ப்பொழில் வலைதளத்தில் தமிழ் பாடம் சார்ந்த எண்ணற்ற பதிவுகள் பதிவிடப்பட்டன. நமது வலைதளத்தில் ஏற்கனவே பதிவிடப்பட்ட தேர்வு நோக்கிலான சிறப்பு மெல்லக் கற்போர் கையேடு (10.ஆம் வகுப்பு) மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்திருந்தனர். மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு இன்னும் சற்று சுருக்கமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசிரியர்களும் மாணவர்களும் தெரிவித்தனர். அதற்கேற்ப இங்கே மிகவும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு 6 முதல் 10 வகுப்புகளுக்கான சிறப்புக் கையேடுகள் இங்கே பதிவிடப்பட்டுள்ளன. இது மாணவர்களின் 100 சதவீத தேர்ச்சிக்கு நிச்சயம் துணை புரியும் என்பதில் ஐயமில்லை. தேவையான ஆசிரிய பெருமக்களும் மாணவச் செல்வங்களும் அதைப் பதிவிறக்கம் செய்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஆக்கம்:
திரு. சேட்டு மதார்சா,
தமிழாசிரியர்,
ஈ.கே.எம்.அ.க.மதரஸா இஸ்லாமியா பள்ளி
ஈரோடு - 638001
கையேடுகளைப் பதிவிறக்க..