இரண்டாம் அலகுத்தேர்வு - 2024
10.ஆம் வகுப்பு - தமிழ்
இராணிப்பேட்டை மாவட்டம்
அலகுத்தேர்வு-2
2024, இராணிப்பேட்டை மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 8X1=8
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1. |
இ) தமிழர் பண்பாட்டில்
வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. |
1 |
2. |
இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் |
1 |
3. |
இ) குழந்தையே வா! |
1 |
4. |
இ) அன்மொழித்தொகை |
1 |
5. |
ஈ) சிற்றூர் |
1 |
6. |
ஆ)
மலைபடுகடாம் |
1 |
7. |
அ)
பெருங்கௌசிகனார் |
1 |
8. |
இ)
தங்கி |
1 |
பகுதி-2 5X2=10
ஆ) ஐந்தனுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடையளி |
||
9 |
பொருள்: திருமால் இலக்கணக்குறிப்பு:
செய்யுளிசை அளபெடை |
2 |
10 |
தம்பி அழாதே, அப்பா இப்போது வந்துவிடுவார், தின்பண்டம் வருவார் |
2 |
11 |
வாருங்கள்,நலமா? ,நீர் அருந்துங்கள் (மாதிரி) |
2 |
12 |
பொருந்திய
வினாக்கள் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக |
2 |
13 |
பல்லார்
பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார்
தொடர்கை விடல் |
2 |
14 |
|
2 |
15 |
அ. பெருங்காற்று ஆ. நாட்டுப்புற இலக்கியம் |
2 |
16 |
பொருந்திய
விடைகள் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக |
|
பகுதி-3 3X3=9
மூன்றனுக்கு மட்டும் ஓரிரு தொடர்களில் விடையளி |
||||||||||||||||||||||||||
17 |
வீட்டின்
முன் உள்ள பெரிய கதவை இரவில் மூடுவதற்கு முன், உணவு தேவைப்படுபவர்கள் இருக்கிறீர்களா? என்று கேட்கும்
வழக்கம் இருந்ததை , குறுந்தொகை இவ்வாறு கூறுகிறது. |
3 |
||||||||||||||||||||||||
18 |
அ)
முன் பின் அறியாத புதியவர்
ஆ) விருந்தே புதுமை இ) விருந்து (அ) விருந்தினர் |
3 |
||||||||||||||||||||||||
19 அ |
|
3 |
||||||||||||||||||||||||
ஆ |
1.எழுவாய்த்தொடர் 2. விளித்தொடர் 3. வினைமுற்றுத்தொடர் 4.
பெயரெச்சத்தொடர்
5. வினையெச்சத்தொடர் 6.வேற்றுமைத்தொடர் 7.இடைச்சொல் தொடர் 8. உரிச்சொல் தொடர் 9.அடுக்குத்தொடர் |
|
||||||||||||||||||||||||
20 |
சிறுதாம்பு
தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர்
அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு
சுவல் அசைத்த கையள், "கைய கொடுங்கோற்
கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே
வருகுவர், தாயர்" என்போள் நன்னர்
நன்மொழி கேட்டனம் |
|
பகுதி-4
3X5=15
ஈ. மூன்றனுக்கு மட்டும் விரிவான விடையளி
|
||
21 அ |
ü மேகம் மழையைப் பொழிகிறது ü திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம். ü கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர். ü இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள். ü தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள் ஆ) ü கூத்தன்,மற்றொரு
கூத்தனை வழிப்படுத்துகிறான் ü ஒன்றாகப்பயணம் செய்து
நான் கூறும் வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக. ü அந்நாட்டு மக்களிடம்
நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள். ü அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும்
கொடுத்து உபசரிப்பார்கள் என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது. ü தற்காலத்தில் ஆசிரியர்களும்,குறிப்பிட்ட
துறையின் வல்லுநர்களும் மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றனர். |
5 |
22 |
(மாதிரி) அனுப்புநர் அ.எழில்வேந்தன், 12,கம்பர்
தெரு, அரக்கோணம். பெறுநர் உணவுப்
பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர்
அலுவலகம், அரக்கோணம். ஐயா, பொருள்:தரமற்ற உணவு வழங்கிய
உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக. வணக்கம்.
நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு
நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும் இருந்தது.அந்த உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை
எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள அ.எழில்வேந்தன். இடம்:அரக்கோணம், நாள்:08-01-2022. உறைமேல் முகவரி: உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர்
அலுவலகம், அரக்கோணம். |
5 |
23 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
24 |
பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால்
இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான். அழகிய காலை வேளையில்
பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும்
பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும்
பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென
உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. |
5 |
பகுதி-5
1X8=8
உ. ஒன்றுக்கு
மட்டும் கட்டுரை வடிவில் விடையளி |
||
25 அ |
முன்னுரை: கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர்
,தனது அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியதே புயலிலே ஒரு தோணி எனும் குறும்புதினமாகும். புயல்:
கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது
வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது. தொங்கானின் நிலை: அதிக
மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது. கரை காணுதல்: அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ
ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது. கப்பல் அங்கிருந்த பினாங்கு
துறைமுகத்தை நெருங்கியது. அங்கிருந்தவர்கள் ”எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டனர். சீட்டு வழங்குதல்: பயணிகள்
சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர்.
அங்கிருந்த அலுவலர் அனுமதி முத்திரை இட்டுத்தந்தார். முடிவுரை: புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச்
சொற்களும் புயலில், தோணி
படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன. |
8 |
ஆ |
விருந்தினரை
வரவேற்றல்: என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்த உறவினரை அகமும் முகமும் மலர்ந்து
வரவேற்று நலம் விசாரித்து அவர் குடிப்பதற்குத் தண்ணீரைக் கொடுத்தேன். உணவுண்ண அழைப்பு: உணவு உண்ண அழைத்து, கைகழுவ தண்ணீர் கொடுத்தும் அமர
வைத்தேன். வாழை இலையில்
விருந்து: தலைவாழை இலை விருந்து என்பது தமிழ் மரபு. அந்த வகையில் தலைவாழை இலையில்
உறவினருக்கு உணவிட்டேன். உணவை உண்ணும் உறவினரின் இடப்பக்கம் வாழை இலையின்
குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வருமாறு வாழையிலையை
விரித்திருந்தேன். உறவினரின் மனமறிந்து, அவர்கள் விரும்பிச்
சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறினேன். வெற்றிலை பாக்கு: உணவு உண்ட உறவினரை ஒரு பாத்திரத்தில் கைகளைக் கழுவுமாறு தண்ணீர்
ஊற்றினேன். கைக்குட்டை போன்ற துணியைத் தந்து கைகளைத் துடைத்துக்கொள்ள வைத்தேன்.
பிறகு வெற்றிலை பாக்கு சுண்ணாம்பினை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தேன். அவர் அதை
மகிழ்வுடன் உண்டார். வழியனுப்புதல்: உணவு உண்ட உறவினரிடம் திருப்தியாக உண்டீர்களா? என
விசாரித்து வீட்டுத் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளுடன் வீட்டிலிருந்த
இனிப்புகளையும் கொடுத்து அவரது வீட்டில் உள்ளவர்களிடம் கொடுக்கும்படி அன்புடன்
கூறி, வாயில்வரை சென்று வழியனுப்பி வைத்தேன் |
8 |