10.ஆம் வகுப்பு - தமிழ் இரண்டாம் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் 2024

 


இரண்டாம் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள்(2024-2025)

10.ஆம் வகுப்பு                                                தமிழ்                                              50 மதிப்பெண்கள்

) பலவுள் தெரிக:-                                                                                                                              10X1=10

1)”மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்மாலவன் குன்றமும் வேலவன்  குன்றமும் குறிப்பது முறையே

அ) திருப்பதியும், திருத்தணியும் ஆ) திருத்தணியும், திருப்பதியும்

இ) திருப்பதியும், திருச்செந்தூரும் ஈ) திருப்பரங்குன்றமும், பழனியும் 

2)”தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயுமாக இருந்த அரசன்என்னும் தொடர் உணர்த்தும் பொருள்

அ) மேம்பட்ட நிர்வாகத் திறன் பெற்றவர் ஆ) மிகுந்த செல்வம் உடையவர்                                        

இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர் ஈ)நெறியோடு நின்று காவல் காப்பவர் 

3) இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போடுவதன் காரணம்------

அ) நாட்டை கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல் இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்

4) மேன்மை தரும் அறம் என்பது-----------

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது  ஆ) மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம்செய்வது 

இ) புகழ் கருவி அறம் செய்வது ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம்செய்வது

5) உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

அ) உதியன்,சேரலாதன் ஆ) அதியன்,பெருஞ்சாத்தன் இ) பேகன்,கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்,திருமுடிக்காரி

6) சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்

அ) அகவற்பா  ஆ) வெண்பா  இ) வஞ்சிப்பா  ஈ) கலிப்பா 

பாடலைப்படித்து விடையளி:

  கவிஞன் யானோர் காலக் கணிதம்

  கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

  புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

  பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!

7) இப்பாடலை இயற்றியவர் யார்?

.கம்பர்  .கண்ணதாசன்  .வேணுகோபாலன்  .சுரதா

8) புகழுடைத்தெய்வம் யார்? 

. இறைவன்   . மன்னர்   .கவிஞர்   . வணிகர்

9) வைப்பேன் -இலக்கணக்குறிப்பு தருக.

. பெயரெச்சம்  . தன்மை ஒருமை வினைமுற்று  . உருவகம்  . வினைத்தொகை

10) உருப்படபொருள் தருக

. முன்னேறுதல்  . உருவெடுத்தல்   . வெற்றிபெறுதல்   . பொருளீட்டுதல்

) குறு வினா          (5 மட்டும்)                                                                                            5X2=10                                                                                                                                                     

11. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?                                                                                                                              

 12. .மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?                                                                                

 13. வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று.தருக.

14. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.  .புதுக்கோட்டை  .திருச்சிராப்பள்ளி

15. குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி, எடுத்துக்காட்டுத் தருக                                                               16. குறிப்பு வரைக - அவையம்.                                                                                                                       17. காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?                                                                                                                                                                                                      

) சிறு வினா (4 மட்டும்)                                                                                                        4X3=12

18. அவந்தி நாட்டு மன்னன்,மருதநாட்டு மன்னனுடன் போர்புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமா லை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.                                                                                                                          19.“தலையைக்கொடுத்தேனும் தலைநகரைக்காப்போம்”இடம் சுட்டிப்பொருள் விளக்குக.

20) சங்க இலக்கிய அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.                                                                                                                                                    21) அலகிட்டு வாய்பாடு எழுதுக:

     பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க

     நாகரிகம் வேண்டு பவர்                                                                                                                                22) 'சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்' என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.(குறிப்பு-சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)                                                                                                                                                                                                    

) 5 மதிப்பெண் வினாக்கள்:  (2 மட்டும்)                                                                                 2X5=10

23. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.                                

24. உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்துசெல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக

25. . பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக.

(அல்லது)

 . சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக

 

) கட்டுரை வடிவில் விடை தருக:                                                                                                       1X8=8

26) . நாட்டுவிழாக்கள்-விடுதலைப்போராட்ட வரலாறு-நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு - குறிப்புகளைக் கொண்டு ஒருபக்க அளவில் ‘மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்’ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

(அல்லது)

    . குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

    மாணவன் – கொக்கைப் போல,கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும்கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் - மாணவன் மகிழ்ச்சி .

 வினாத்தாளைப் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்

 

You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை