9 TH STD TAMIL QUARTERLY QUESTION PAPER AND ANSWER KEY KANCHIPURAM DIST

9.ஆம் வகுப்பு தமிழ்

காலாண்டுத்தேர்வு வினாத்தாள்

👉காஞ்சிபுரம் மாவட்டம் 

👉 செங்கல்பட்டு மாவட்டம்

👉 கடலூர் மாவட்டம்

👉 திருவாரூர் மாவட்டம்

👉 நாகப்பட்டினம் மாவட்டம்


வினாத்தாளைப் பதிவிறக்க👇

  

காலாண்டுப்பொதுத் தேர்வு-2024 காஞ்சிபுரம் மாவட்டம்

9.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

  1.  

. சிற்றிலக்கியம்

1

  1.  

ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1

  1.  

. கீழே

1

  1.  

ஈ. புலரி

1

  1.  

. வளம்

1

  1.  

) திருவாரூர்- கரிக்கையூர் 

1

  1.  

. தொகைச்சொற்கள்

1

  1.  

. ஆராயாமை , ஐயப்படுதல்

1

  1.  

. ஊரகத் திறனறி தேர்வு

1

  1.  

ஆ. தொடு உணர்வு

1

  1.  

அ. புறநானூறு

1

  1.  

இ. புறநானூறு

1

  1.  

ஆ. குடபுலவியனார்

1

  1.  

இ. பண்புத்தொகை

1

  1.  

ஆ. வளம்

1

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

இரண்டிரண்டு அடிகளால் அமையும் செய்யுள் வகை.

2

17

பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

2

18

உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

2

19

மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருது கட்டி, காளைவிரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு

2

20

புல், மரம்

2

21

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்

2

                                                                        பிரிவு-2                                                                5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

வீணையோடு வந்தாள்வேற்றுமைத்தொடர்      கிளியே பேசுவிளித்தொடர்

2

23

விடை:  தமிழ்மூன்று  

             மலையாளம்மூணு   

             தெலுங்குமூடு 

             கன்னடம்மூரு

             துளு மூஜி

2

24

  • ஐம்பூங்களுள் ஒன்று நீர். அது நிலம், காற்று, நெருப்பு வானம் ஆகிய நான்குடன் தொடர்பு கொண்டு இயங்கவல்லது. நம் முன்னோர் கிடைத்த நீரை அளவோடு பயன்படுத்தினர்.

     அதனால் நாமும், நீரை அளவோடு பயன்படுத்தி வரும் தலைமுறைக்கு பாதுகாத்து வைக்க வேண்டும்.

  • குளம் தொட்டு வளம் பெருக்கி வாழ்ந்தவர்கள் தமிழர். இன்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும்.
  • மழைநீரைப் பயன்படுத்தும் முறை அறியவேண்டும். இளம் தலைமுறையினர்க்கு நீர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும்.

2

25

பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

2

26

அ. நானும் எனது நண்பனும் நகமும் சதையும்போல இருந்தோம்

ஆ. மாறன் கண்ணும் கருத்துமாகப் படித்தான்

2

27

.பேரகராதி  . நீர் மேலாண்மை

2

28

அ. பதவியைவிட்டு நீங்கினான் 

ஆ. மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர்

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

அ) எங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகள்:

      1. கோவிலையும், தெருக்களையும் தூய்மைப்படுத்துவார்கள்

      2.தென்னையோலையால் தெருவெங்கும் பந்தல் கட்டுவார்கள்

      3.வாழை மரங்களைக் கட்டிவைப்பார்கள்

      4. நாடகம், இசைக் கச்சேரி, கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் போன்றவற்றை நடத்திட ஏற்பாடு செய்வார்கள்.

ஆ) இந்திர விழா நிகழ்வுகள்:

      1. தெருக்களிலும், மன்றங்களிலும் பூரணகும்பம், பொற்பாலிகை, பாவை விளக்கு மற்றும் மங்கலப் பொருட்களைமுறையாக அழகுபடுத்திவைப்பார்கள்.

      2.பாக்கு மரம், வாழை மரம், வஞ்சிக் கொடி, பூங்கொடி, கரும்பு போன்றவற்றை நட்டுவைத்தனர்.

      3. வீடுகளின் முன் தெருத்திண்ணையில் இருக்கும் தங்கத் தூண்களில் முத்து மாலைகளைத் தொங்கவிட்டனர்.

      4. விழாக்கள் நிறைந்த மூதூரின் தெருக்களிலும், மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்பினார்கள்.

      5. சொற்பொழிவு, பட்டிமண்டபம் நடத்தினார்கள்.

3

30

அ. மரங்கள்  ஆ. உயிர்வளி  இ. தமிழர் வாழ்வு

3

31

  • குமிழித்தூம்பு என்பது ஏரியில் உள்ள நீரையும் சேறையும் வெறியேற்றுவதற்காகப் பயன்படுத்தப் பட்டன.
  • சோழர்காலத்தில் நீர்நிரம்பி நிற்கும் ஏரிக்குள் நீந்தி கழிமுகத்தை (ஏரி நீர்க்கழிவு) அடைந்து குமிழித் தூம்பைத் தூக்கி விடுவார்கள்.
  • குமிழித்தூம்பில் இரண்டு துளைகள் இருக்கும். மேலே இருக்கும் நீரோடித் துளையிலிருந்து
  • நீர் வெளியேறும். கீழே இருக்கும் சேறோடித் துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும். இதனால் தூர் வாரத் தேவையில்லை .

3

                                                                        பிரிவு-2                                                                2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

v  மொட்டைக் கிளையோடு, வெட்ட ஒரு நாள் வரும் என வருத்தமடைந்தது.

v  இலைகளும் கிளைகளும் வெந்து கருகியதால் இந்த நிலை வந்ததோ என வருத்தமுற்றது.

v  பட்டுக் கருதியதன் காரணமாக கட்டை என பெயர் வந்ததோ என வருத்தமுற்றது.

3

33

:    தமிழக உழவர்கள், தங்களின் உழவு சார்ந்த கருவிகளோடு அறுவடைக்குப் பெரிதும் துணைநின்ற மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப் பொங்கல். அவ்விழாவின்போது, மாடுகளைக் குளிப்பாட்டி, பல வண்ணங்களில் பொட்டிட்டு மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு, பிடிகயிறு அனைத்தையும் புதிதாக அணிவிப்பர். கொம்புகளைப் பிசிறு சீவி, எண்ணெய் தடவி, கழுத்து மணியாரம் கட்டி, வெள்ளை வேட்டியோ துண்டோ கழுத்தில் கட்டுவர். பின்னர் பூமாலை அணிவித்துப் பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர். இதன் தொடர்ச்சியாக வேளாண் குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறுதழுவுதலாகும்.

3

34

 

.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

.

 

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளைவயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்

3

                                                                            பிரிவு-3                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

உவமையணி - உவமை , உவமேயம் ,உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது

3

36

தன்வினை :   வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும்.

                         .கா: பந்து உருண்டது.

   பிறவினை :   வினையின் பயன் எழுவாயை இல்லாமல் அடையாக வருவது பிறவினை எனப்படும்.

                        .கா. பந்தை உருட்டினான்

   காரணவினை :  எழுவாய் தானே வினையை நிகழ்த்தாமல் வினை நிகழ்வதற்குக் காரணமாக இருப்பது

                         .கா. பந்தை உருட்ட வைத்தான்.

3

37

1. துணைவினைகள் பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன.

2. இவை முதல் வினையைச் சார்ந்து அதன் வினைப்பொருண்மைக்கு மெருகூட்டுகின்றன.

3. பேச்சு மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

3

                                                                          பகுதி-4                                                       5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

அ.

ü  அமிழ்தினும் மேலான முத்திக் கனியே ! முத்தமிழே ! உன்னோடு 

ü  மகிழ்ந்து சொல்லும் விண்ணப்பம் உண்டு கேள்.

ü  புலவர்கள் குறம்,பள்ளு பாடி தமிழிடமிருந்து சிறப்பு பெறுகின்றனர். அதனால் உனக்கும் பா வகைக்கும் உறவு உண்டு.

ü  தமிழே ! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும்.

ü  தேவர்கள் கூட மூன்று குணங்கள் தான் பெற்றுள்ளனர். ஆனால் தமிழே! நீ மட்டும் பத்து குணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  மனிதர் உண்டாக்கிய வண்ணங்கள்  கூட ஐந்து தான்,. ஆனால் தமிழே ! நீ மட்டும் நூறு வண்ணங்களைப் பெற்றுள்ளாய்.

ü  உணவின் சுவையோ ஆறு தான். ஆனால், தமிழே ! நீயோ ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்.

ü  மற்றையோர்க்கு அழகு ஒன்று தான். ஆனால் தமிழே! நீயோ எட்டு வகையான அழகினைப் பெற்றுள்ளாய்

 (அல்லது)

)

   1. தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில்காளையைக் கொன்று அடக்குபவனே வீரன் அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.

   2. காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை சிலநாட்டுவிளையாட்டுக்களில் கொல்லப்படுவதும் உண்டு.

   3.அது வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது.

   4. தமிழகத்தில் நடைபெறும் ஏறு தழுவுதலில் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது.

  5.நிகழ்வின் தொடக்கத்திலும்முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு செய்வர்.

  6.எவராலும் அடக்கமுடியாத காளைகள்வெற்றிபெற்றதாகக் கருதப்படும்.

  7. அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையைஅரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.

5

39

.

  • ஐம்பூங்களுள் ஒன்று நீர். அது நிலம், காற்று, நெருப்பு வானம் ஆகிய நான்குடன் தொடர்பு கொண்டு இயங்கவல்லது. நம் முன்னோர் கிடைத்த நீரை அளவோடு பயன்படுத்தினர்.

     அதனால் நாமும், நீரை அளவோடு பயன்படுத்தி வரும் தலைமுறைக்கு பாதுகாத்து வைக்க வேண்டும்.

  • குளம் தொட்டு வளம் பெருக்கி வாழ்ந்தவர்கள் தமிழர். இன்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும்.
  • மழைநீரைப் பயன்படுத்தும் முறை அறியவேண்டும். இளம் தலைமுறையினர்க்கு நீர் மேலாண்மை பயிற்சி வழங்க வேண்டும்.

 (அல்லது)

)

. இணைய வணிகம்

  இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஆல்ட்ரிச் 1979இல் இணைய வரிகத்தைக் கண்டுபிடித்தார்.இன்று இணைய நிறுவனங்கள் விற்காத பொருள்கள் எதுவும் உலகில் இல்லை கரும்பு முதல் கணினி வரை இணைய வழியில் விற்கப்படுகின்றன. இன்று இணைய வணிகம் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது.

இணைய பயன்பாடு :

    தற்காலத்தில் பேருந்து, விமானம், தொடர்வண்டி. தங்கும் விடுதி போன்றவற்றின் முன் பதிவு ஆகியவற்றை இணையம் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.இணையப் பயன்பாட்டால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது .பெரு நகரங்களில் திரைப்படங்களின் இருக்கைகள், முன்பதிவு செய்வது கூட இணையம்  மூலம் நடைபெறுகின்றது.

வரி செலுத்துதல்

       அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, தண்ணீர் வரி ஆகியன இணைய வழியில்செலுத்தப்படுகின்றன. அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் உரிய படிவங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றை நிரப்பி இணையம் மூலம் வழங்கப்படுகின்றன. நடுவண் அரசும் மாநில அரசும் பள்ளி மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கும் இணையம் பயன்படுகிறது.

         ஆண்டுதோறும் பல போட்டித் தேர்வுகளுக்கு இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம். பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்ய வேண்டிய பதிவு ஆண்டுதோறும் அவர்கள் படித்த பள்ளியிலேயே இணையத்தின் வழியாகச் செயல்பட்டு வருகிறது.

5

40

திரண்ட கருத்து :
    இப்பாடலில், கவிமணி ஆறு ஒன்று தன் வரலாறு கூறுவது போல் பாடியிருக்கிறார். கற்களிலும் மலைகளின் உச்சியிலிருந்து குதித்து வந்தேன் காடுகளிலும் செடிகளிலும் கடந்து வந்தேன். சமவெளிகளில் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன். மேட்டுப் பகுதிகளிலும் ஏறி வந்தேன். பல ஏரி, குளங்களை நிரப்பி மக்கள் பயன்பாட்டிற்காக வந்தேன். ஊற்று வராத நிலப்பகுதிகளிலும் உள்ளே புகுந்து வந்தேன். ஓடை மணல்களில் எல்லாம் ஓடிப் பாய்ந்து வந்தேன் என்று குறிப்பிடுகிறார்.

 

மோனை நயம் :   

      சீர்தோறும் அடிதோறும் முதல் எழுத்துகள் ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும். மோனை நயத்தை ஓசையுடன் பாடுவதில் சிறந்து விளங்குகிறார் கவிமணி.

சான்று :     ஏறாதஏறி
                   ஊறாதஊற்றிலும்

                  ஓடைகள்ஓடி வந்தேன்.

எதுகை நயம் :  

      அடிதோறும் இரண்டாம் எழுத்துகள் ஒன்றிவரத் தொகுப்பது எதுகையாகும்.

     சான்று :    கல்லும் …. எல்லை
                      ஏறாத …… ஊறாத

இயைபு நயம் : 

       இச்செய்யுளின் ஈற்றடிகளில்தேன் தேன்என்று முடிந்திருப்பதால் அழகான இயைபு நயம் அமைந்து விளங்குகின்றது.

சொல் நயம் : 

        விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்என்றாற் போல விருத்தப்பா சந்தத்தில் எழுதும் ஆற்றல் பெற்றவர் கவிமணி. ஆறு கடந்து வந்த பாதையை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். ஆற்றின் போக்கிற்கேற்ப யாப்பு வடிவங்களைக் கையாண்டிருக்கிறார்

குதித்து வந்தேன்
கடந்து வந்தேன்
தவழ்ந்து வந்தேன்
ஏறி வந்தேன்
நிரப்பி வந்தேன்
உட்புகுந்தேன்
ஓடி வந்தேன்.

ஆற்றின் நீரோட்டத்திற்கேற்ப சொற்களை நடனமாடச் செய்திருக்கும் கவிஞனின் கவியுள்ளத்தைக் காண முடிகிறது.

5

41

   ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத    

   என்னை எழுது என்று சொன்னது

   இந்தக் காட்சி!          

   முயற்சியைப் பற்றி எழுதினேன்!

   அனைவரும் இதன் அருமை அறிந்து

   நடக்க வேண்டும்!

    வாழ்க்கையில் மேலும் உயர வேண்டும்!

5

42

1. ஒவ்வொரு மாரும் இயற்கையாக மலரும்போது சிறப்பினைப் பெறுகிறது.

2. சூரியன் மறைவு நிறம் எனக்கு மிகவும்பிடித்த நிறமாகும்.வானவில்லின் அழகு இரண்டாவதாகப் பிடிக்கும்

3. அதிகாலையில் நடைபயிற்சி செய்வது அன்றைய நாள் முழுவதும் ஆசியைத் தரும்.

4. வாழ்வது பட்டும் போதுமானதல்ல ஒவ்வொருவருக்கும் ஒளி, ஆற்றல், விடுதலை, மலரின் மென்மை அவசியம்

5. அன்பும் தொண்டுள்ளமும் இல்லாததே மிகப்பெரிய பிரச்சினை

5

 

                                                              

                                                                             பகுதி-5                                                       3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

அ.

தமிழிலிருந்தே "திராவிடர்" - என்னும் சொல்:

    தமிழிலிருந்தே "திராவிடர்” என்னும் சொல் பிறந்தது என்று மொழியியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். "ஹீராஸ் பாதிரியார்" என்பவர் இக்கூற்றை தமிழ் தமிழா தமிலா டிரமிலா * ட்ரமிலா த்ராவிடா திராவிடா என்று விளக்குகின்றார்.

பிரான்சிஸ் எல்லிஸ் கருத்து :

     தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஆய்ந்து ஒப்புமைப்படுத்தி இவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும் இவை "தென்னிந்திய மொழிகள்" என்றும் பெயரிட்டார்.

ஹோக்கன் - மாக்ஸ் முல்லர் கருத்து :

   ஹோக்கன் என்பார் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் "தமிழியன்" என்று பெயரிட்டார். மேலும், இவை ஆரிய மொழிகளினின்று மாறுபட்டவை என்று கருதினார். மாக்ஸ் முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.

திராவிட பொழிகளுக்கான ஒப்பீட்டு அளவுகோல் தமிழே!:

   திராவிட மொழிகளுக்கான அடிச் சொல்லை மாற்றமின்றித் தொடர்ந்து வழக்கில் கொண்டுள்ள பொழிதமிழ் எனவே, திராவிட மொழிகளை ஒன்றுக் கொன்று ஒப்பிட்டு ஆய்வு செய்யும்போது, தமிழே ஒப்பீட்டு அளவுகோவாகவும் கருவியாகவும் பயன்படுகிறது.

   இவற்றின் மூலம் திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாய் இருக்கிறது என்பதை அறியலாம்.

ஆ)

முன்னுரை :

    நீர் இன்றி அமையாது என்னும் கருத்தைத் திருவள்ளுவர் தம் குறள்கள் வாயிலாக தெளிவாக எடுத்துரைத்துள்ளார் அவருடைய கருத்துகளைக் காண்போம்.

வான் சிறப்பு :

   உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே அது மட்டுமின்றி நீரே உணவாகவும் இருக்கிறது என்பதை இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே

         "துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

          துப்பாய தூஉம் மழை"

என்று திருவள்ளுவர் விளக்கியுள்ளார்

மழையே ஆதாரம் :

     மழை நீரே மண்ணை வளம் பெறச் செய்கிறது. பயிர்களை விளைவிக்கிறது. எரி, குளங்கள், வாய்க்கால் வழியாகப் பாசன வசதியை ஏற்படுத்தி வேளாண்மையை வளமடையச்  செய்கிறது.

நீரே ஆதாரம் :

   நீர் இல்லாமல் எத்தகையோர்க்கும் உலக வாழ்க்கை அமையாது. அது போல மழையில்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாது. வானத்திலிருந்து மழைத்துளி மண்ணில் வீழ்ந்தால் அன்றி, உலகில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

முடிவுரை:

   தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாம் எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்.

8

44

முன்னுரை :
            நாகலிங்கம்என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள் சமூக அவலங்கள், மானுட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர். “சாசனம்”, “ஒவ்வொருகல்லாய்”, “கொம்பன்முதலிய வரிசையில்தண்ணீர்சிறுகதையும் சமூக நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.

குடிநீரற்ற ஊரின் நிலை :
           பெண்கள் தலையிலும், இடுப்பிலுமாகக் குடங்களைக் கொண்டு பிலாப்பட்டி வரை சென்று ஊற, ஊற நீர் எடுத்து வரும் அவலநிலைதான் இருந்தது.

           பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன.

           எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவேதண்ணீர்கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை.

இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் :
         இப்படிப்பட்ட வறண்ட ஊருக்கு வரப்பிரசாதமாய், தினமும் வரும் பாசஞ்சர் இரயில் அமைந்தது. இரயில் 3 கி.மீட்டருக்கு முன்பே அருவமாய் எழுப்பும் ஊதல் ஒலி கேட்டு, மக்கள் ஓட்டமும் நடையுமாய் இரயில் நிலையம் செல்வர்.

         அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள்.

இந்திராவின் கனவு :
     அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்த தண்ணியில்லா ஊரில் உள்ள எவனுக்கும் தலை நீட்டக் கூடாது என்றும் கனவு கண்டு கொண்டே இரயில் பெட்டிக்குள் நுழைந்தாள்.

இந்திரா தண்ணீர் பிடித்தல் :
            பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே இந்திரா பெட்டிக்குள் பாய்ந்து, முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேக, வேகமாக அரைச் செம்பும், கால்செம்புமாக பிடித்துக் குடத்தில் ஊற்றினாள்,தொடர்ந்து  பிடித்துக் கொண்டே இருந்தாள் இரயில் நகர்ந்தது.

இந்திரா எங்கே :
        எல்லாம் பதற்றத்துடன் அண்ணான் வீடு, தம்பி வீடு, இராமநாதபுரம் பஸ்ஸில் ஏறி இரயில் நிலையம் சென்றபோது இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் ஈ, எறும்பு கூட இல்லை . குடத்துடன் ஒரு பெண் வந்தாளா என்று அறிந்த, தெரிந்த இடம் பூராவும் தேடியும் இந்திரா எங்கும் கிடைக்கவில்லை.

தாயின் துயரம் :
        எம் புள்ள தண்ணி புடிக்கப் போயி எந்த ஊரு தண்டவாளத்துல விழுந்து கிடக்கோஎன அடக்க முடியாமல் ஓடினாள் இந்திராவின் தாய். ஊர் ஜனமும் பின்னால் ஓடியது. தாய் தண்டவாளத்திலே ஓட ஆரம்பித்தாள். தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! ”பயபுள்ள, இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்தஎன்று தந்தை கேட்டார்.”பின்ன! நாளைக்கு வரைக்கும் குடிக்க என்ன செய்ய?” என்று இந்திரா சொன்னாள்.

முடிவுரை :
       உயிர் நீர்எனப்படும் தண்ணீர் தேவையை, அது இல்லா ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம் உணர்ந்த நாம்,  நீர் மேலாண்மையை கட்டமைப்போம்  மழைநீர் சேகரிப்போம்.”

 (அல்லது)

)  முன்னுரை :

     நாடெல்லாம் நீர் நாடாகச் சோழநாடு திகழ்கிறது. காவிரி நீர்: காவிரி நீர் மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக் கொண்டு வருகிறது. அப்பூக்களில் தேன் நிறைந்திருப்பதால் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன. காவிரி நீர் கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது.

களை பறிக்கும் பருவம்:

     நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதலிலை சுருள் விரிந்தது. அப்பருவத்தைக் கண்ட உழவர் இதுதான் களை பறிக்கும்  பருவம் என்றனர். காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள் உள்ளன. சோலைகள் எங்கும் குழைகளில் மலர் அரும்புகள் உள்ளன.பக்கங்களில் எங்கும் கரிய குவளை மலர்கள் மலர்ந்துள்ளன.

வானவில் :

    அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால், அந்நீர் நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது மாயும். இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும்.

பொன்மாலைச் சாரல் :

     நெல்கற்றைகள் போரை மேலேயிருந்து சாயச் செய்வர். பெரிய வண்டிகளைச் செலுத்தும் கருமையான எருமைக் கூட்டங்கள் வலமாகச் சுற்றிச்சுற்றி மிதிக்கும் இத்தோற்றமானது கரியமேகங்கள் பெரிய பொன்மாலைச் சாரல் மீது வலமாகச் சுற்றுகின்ற காட்சி போல உள்ளது.

செழித்து வளர்ந்துள்ளவை :

    சோழ நாட்டில் தென்னை, செருந்தி, நறுமணமுடைய நரந்தம், அரச மரம், கடம்ப மரம், பச்சிலை மரம், குளிர்ந்த மலரையுடைய குரா மரம், பெரிய அடிப்பாகத்தைக் கொண்ட பனை, சந்தனம், குளிர்ந்த மலரையுடைய நாகம், நீண்ட இலைகளையுடைய வஞ்சி, காஞ்சிமலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கெங்கும் செழித்து வளர்ந்துள்ளன.

முடிவுரை :

     காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிறது பெரியபுராணம். வளங்கெழு திருநாட்டின் சிறப்பை இயற்கை எழிற்கவிதைகளாய்ப் படரச் செய்துள்ளது.

8

45

)

திருத்தணி,
                                                                                                                               09-09-2023.

அன்புள்ள  நண்பன் எழிலனுக்கு,
        முகிலன் எழுதிக் கொள்வது. இங்கு நான், என் குடும்பத்தினர் அனைவரும் நலம், அதுபோல நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

    என் பிறந்தநாளுக்காக நீ எனக்கு ஒரு அனுப்பிய பரிசுப்பொருள் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதியகால் முளைத்த கதைகள்புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

            இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட கருத்துகள், உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப்போல வசீகரமாகியிருக்கின்றன. சிறந்த பரிசு அனுப்பியதற்கு நன்றி!!

                                                                                                                                       அன்புடன்,                                                                                                                                                     

                                                                                                                                         முகிலன்.

 

முகவரி:
          . எழிலன்,

          /பெ மதியரசன்,
          1/3, தெற்குமாட வீதி,

          மதுரை.

 

 (அல்லது)

. வரவேற்பு மடல்

இடம்: அரசு உயர்நிலைப்பள்ளி, தணிகைப்போளூர்,இராணிப்பேட்டை மாவட்டம்.

நாள் : 11-09-2023 , திங்கட்கிழமை

"சுத்தம் சோறு போடும்"

 

"கந்தையானாலும் கசக்கிக் கட்டு"

 

"கூழானாலும் குறித்துக் குடி"

 

    என்னும் பழமொழிக்கு ஏற்ப எங்கள் பள்ளி சிறப்பாக அமைந்துள்ளது. தூய்மையே எங்களின் தாரக மந்திரம். நெகிழிப் பயன்பாடு எங்கள் பள்ளியில் தடைசெய்யப்பட்டுள்ளது. மட்கும் குப்பை, மட்கா குப்பைகளுக்கு என தனித் தனி தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன கழிவுகளுக்கும் தனித் தொட்டிகள் உள்ளன இயற்கை உரம் தயாரித்து எங்கள் பள்ளியில் உள்ள தோட்டங்களைப் பராமரிக்கிறோம். மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக எம் பள்ளியைத் தேர்ந்தெடுத்து விருது பெற்றுள்ள இப்பெரு விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்கும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களே!

 

   நேரிய பார்வையும், நிமிர்ந்த நன்நடையும் கொண்டவரே! கடமை உணர்வுடன், உழைப்பைத் தன் உடைமை ஆக்கியவரே! மாவட்டம் கல்வியில் சிறந்தோங்கிட இராப்பகலாய் உழைத்தவரே! குப்பைகளைப் பக்குவமாய் பிரித்துப் பயன்படுத்த நல்வழி காட்டிய அன்னப் பறவையே! I

 

    ஏழை மாணவர், மெல்லக் கற்கும் மாணவர் வாழ்விலும் ஒளி ஏற்றிட, சிகரம் தொட்டிட சீரிய வழி சமைத்தவரே! எம் மாவட்டக் கல்வி அலுவலரே! உம்மை எங்கள் பள்ளியின் சார்பில் வருக! வருக! என உளம் மகிழ வரவேற்கிறோம்.

 

                                                                  நன்றி.

                                                                                                                                  இவண்,

இரா மணிமாறன்,

(மாணவர் செயலர்

8

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை