குழந்தைகள் தின விழா
சிறப்பு கட்டுரைப்போட்டி முடிவுகள்,
நவம்பர் 2024
அன்பார்ந்த தமிழராசிரியர் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தமிழ்ப்பொழில் வலைதளம் மூலமாக மாநில அளவிலான மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி இணையவழியில் நடைபெற்றது. நம்முடைய இந்த முயற்சியானது, பெருமளவிலான மாணவர்களைச் சென்றடைந்து, பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் அதில் பங்கேற்றது பெரு மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாடு அளவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது கட்டுரைகளை எழுதி அனுப்பினர். அனைத்து கட்டுரைகளும் மதிப்பிடப்பட்டு, மிகுந்த கவனத்துடனும், நேர்மையுடனும், சிறந்த மூன்று கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
# கையெழுத்துத் தெளிவு.
# கருத்துச்செறிவு.
# மேற்கோள்கள்.
# சுருக்கமான முன்னுரை,முடிவுரை
# தலைப்புக்குப் பொருந்திய கருத்துகள்
முதலிய கூறுகளின் அடிப்படையில் , சிறந்த கட்டுரைகள் இரு பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அவ்வைகையில் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:
நிலை 1 (5 முதல் 8 .ஆம் வகுப்புப் வரை)
சிறந்த கட்டுரை: (பரிசு ரூபாய்.500)
(முதல் பரிசு)
செல்வி நா. துய்யதமிழ்நிலா
7.ஆம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
பூசாரிக்காடு, கத்தரிப்புலம்,
நாகப்பட்டிணம் மாவட்டம்
(இரண்டாம் பரிசு)
செல்வி ச. போர்ஷிகா
7.ஆம் வகுப்பு, “ஈ” பிரிவு
அரசினர் மகளிர் மேனிலைப்ப் பள்ளி,
மதுக்கூர்,
தஞ்சாவூர் மாவட்டம்
(மூன்றாம் பரிசு)
செல்வி ரா.ந.கஜஸ்ரீ
7.ஆம் வகுப்பு, “அ” பிரிவு
அரசினர் மகளிர் மேனிலைப்ப் பள்ளி,
தேவப்பாண்டலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்
நிலை 2 (9 முதல் 12 .ஆம் வகுப்புப் வரை)
சிறந்த கட்டுரை: (பரிசு ரூபாய்.500)
(முதல் பரிசு)
செல்வி ஆ.திவ்யா
10. ஆம் வகுப்பு, ”ஈ” பிரிவு,
அரசினர் மகளிர் மேனிலைப்பள்ளி,
இராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் .
(இரண்டாம் பரிசு)
செல்வி ர.பூமிகா
10. ஆம் வகுப்பு, ”உ” பிரிவு,
அரசினர் மகளிர் மேனிலைப்பள்ளி,
ஆற்காடு,
இராணிப்பேட்டை மாவட்டம்.
(மூன்றாம் பரிசு)
செல்வி அ.சுவாதிகா
9. ஆம் வகுப்பு, ”ஆ” பிரிவு,
அரசினர் மேனிலைப்பள்ளி,
பாம்பன் புயல் காப்பகம்,
இராமநாதபுரம் மாவட்டம்.
வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!!
மாணவர்களை ஊக்கப்படுத்தவும் ,தமிழார்வத்தைத்தூண்டவுமே இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகின்றன.எங்கள் முயற்சிக்குப் பேராதரவு அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி!!