10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 02-01-2025 முதல் 04-01-2025
மாதம் : ஜனவரி
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : திருப்புதல்
கற்றல் நோக்கங்கள் :
# முக்கிய வினாக்களைப் பட்டியலிட்டு, மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து தேர்வெழுதச்செய்தல்
திருப்புதல் வினாக்கள்:
( முதல் 3 இயல்களில் உள்ள முக்கிய வினாக்கள்)
2 மதிப்பெண் வினாக்கள்
1) வசன கவிதை என்பது
யாது?
2) மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! இவ்வடிகளில்
இடம்பெற்ற ஐம்பெருங்காப்பியங்களில் எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்கள் யாவை?
3)
'நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் - மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்' - இதுபோன்று
உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
4)
விருந்தினரை
மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
5)
பெற்றோர்
வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும்போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை
எழுதுக
6) வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும்,பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.
7) தேன், நூல், பை, மலர், வா- இத்தனிமொழிகளுடன் சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழிகளாக்குக.
8) சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.
“தேணிலே ஊரிய செந்தமிழின் –
சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லலவும் –
நிதம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே”
9) 'எழுது என்றாள்' என்பது
விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என
அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார் ' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?
10) கீழ்க்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களைக் கண்டுபிடித்து
எழுதுக. அ. கல், ஆ. ஆடு
11) தண்ணீர் குடி, தயிர்க்குடம்
ஆகிய தொகைநிலைத் தொடர்களைவிரித்து எழுதுக; தொடரில் அமைக்க.
3 மதிப்பெண் வினாக்கள்
1)புளியங்கன்று
ஆழமாக நடப்பட்டுள்ளது.
-இது போல் இளம்பயிர்வகை ஐந்தின்
பெயர்களை எழுதுக.
2) “ பலர்புகு
வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ” – வினவுவது ஏன்?
3) தமிழன்னையை
வாழ்த்துவதற்கான காரணமாகப் பாவலரேறு கூறுவன யாவை?
4) கூத்தனைக் கூத்தன்
ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
5) அ)
சிறுதாம்பு…. எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக. (அல்லது)
ஆ) விருந்தினனாக…….
எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.
6) 'கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!' - இத்தாலாட்டுப் பாடலில்
அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
👉 வினாத்தாள் வடிவில் PDF ஆக பதிவிறக்கம் செய்ய