உரிச்சொல் அறிவோம் - தொல்காப்பிய வழியில் - தெளிவான விளக்கங்களுடன்





உரிச்சொற்கள்

         தமிழ் இலக்கணத்தின் நான்கு வகையான இலக்கணச் சொற்களில் ஒன்றுதான் உரிச்சொல்.பெயர், வினை, இடை ஆகிய சொல் வகைகளைப் பற்றி நாம் அனைவரும் ஓரளவுக்கு நன்றாகவே அறிந்து இருப்போம்.ஆனால், நான்காம் வகையான உரிச்சொல்லைப் பற்றி  ஆழ்ந்த புரிதல் அவசியம் என்றே தோன்றுகிறது.
        இலக்கணக்குறிப்பு கூறும் அளவிலேயே நாம் சொற்களைப் பற்றி அறிந்திருத்தலைவிட,  தமிழ் மொழியில் உரிச்சொற்களின் அவசியம் என்ன என்பதைப் பற்றி நாம் அறிதல் வேண்டும்? அகராதியியல், சொற்களஞ்சியப் பெருக்கம் ஆகியவை தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்க வேண்டுமெனில், உரிச்சொற்களைப் பற்றிய புரிதல் அவசியம்.
      அவ்வகையில், தொல்காப்பியம் கூறும் உரியியல் பற்றிய கருத்துக்களின் அடிப்படையில் உரிச்சொற்களைப் பற்றிய விவரங்களை இங்கு காணவிருக்கிறோம்.
உரிச்சொல் என்றால் என்ன?
      பெயர் போலவும் வினை போலவும் அமைந்து இரண்டும் ஆவதற்கு உரிமை உடையதாய் தம்பகுதிகள் திரிந்து தோன்றுவது உரிச்சொல் ஆகும்.
உரிச்சொல்லின் பண்புகள்:
     *உரிச்சொல் இசை, குறிப்பு, பண்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தோன்றும்.
    * ஒரு சொல் பல பொருட்களை உணர்த்துவதாகவும், பல சொற்கள் ஒரு பொருளை உணர்த்துவதாகவும் வரும்.
          (எ-டு) கடி நகர்(காவல் மிக்க நகர்)
                       கடி மலர்(மணம் மிக்க மலர்)
                       கடி நுனி(கூர்மையான நுனி)
       ஒரு சொல்பல பொருளுக்கு உரியது.

            (எ-டு)உறுபசி,தவச்சிறிது,நனி நன்று
       பல சொற்கள் மிகுதி என்ற ஒரே பொருளைத் தந்தன
   * வெளிப்படையாகப் பொருள் விளங்கும் உரிச் சொற்களும் உள்ளன. ஆனால், தொல்காப்பியத்தில் வெளிப்படையாக பொருள் உணர முடியாத உரிச் சொற்களுக்குப் பொருள் தரப்பட்டுள்ளது.
உரிச்சொல்லின் பொருளை எவ்வாறு உணர வேண்டும்?
   * 'இச்சொல்லுக்கு இப்பொருள்' என்று கூறப்பட்ட உரிச்சொற்களை  அவற்றின் முன்னும் பின்னும் வருகின்ற சொற்களை ஆராய்ந்து இடத்திற்கு ஏற்ப பொருத்தமான பொருள் கொள்ள வேண்டும்.
  * அப்போதுதான் அச்சொற்கள் தொன்று தொட்டு வழங்கி வந்த முறைப்படி தத்தமக்குரிய பொருள் விளங்கத் தோன்றும்.
  * இச்சொற்களுக்கு கூறப்பட்ட பொருள்கள் மரபுவழிப்பட்டவை அன்றி, இச்சொல்லுக்கு இதுதான் பொருள் என்பதற்கு வேறு காரணம் எதுவும் இருக்க முடியாது.
   * எழுத்துக்கள் பிரிந்து நின்று வேறுபட்டு பொருள் உணர்த்தும் நிலை உரிச் சொற்களுக்கு முற்றிலும் பொருந்தாது.

தொல்காப்பியத்தில் சொல்லப்பட்ட சில உரிச்சொற்களும், அவற்றின் பொருளும் சான்றுகளுடன் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

இங்கே தரப்பட்ட உரிச்சொற்களில் பல தற்காலப் பேச்சுவழக்கிலும் இடம்பெற்றுள்ளது விந்தைக்குரிய ஒன்று😀.






கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை