9 TH STD TAMIL-
4 TH WEEK MODEL LESSON PLAN
(22-11-21 TO 26-11-21)
நாள் : 22-11-2021 முதல் 27-11-2021
மாதம் : நவம்பர்
வாரம் : நவம்பர்
வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு :1. பெருமாள் திருமொழி 2. பொது - இலக்கணம்
![]() |
கருபொருள் :
Ø அறிவியல் கருத்துகள்
உட்பொதிந்துள்ள்ச் செய்யுள்களின் கருத்து வெளிபாட்டுத் திறனைப் படித்துணர்தல்.
Ø இலக்கணத்தின் பொதுக்கூறுகள்
அறிந்து தொடரமைப்பை அறிதல்.
உட்பொருள் :
Ø பக்தி இலக்கியங்களில்
உள்ள அறிவியல் கருத்துகளை நடைமுறை வாழ்வியலுடன் தொடர்புப்படுத்தல்.
Ø இலக்கணப் பிழையற்ற
தொடரமைப்பு தெரிந்துக் கொண்டு பயன்படுத்துதல்
அறிமுகம்
:
Ø அறிவியல் கருத்துகள்
பொதிந்துள்ள சில செய்யுள்களை கூறி அறிமுகம் செய்தல்.
Ø அன்றாட வாழ்வில்
பயன்படுத்தக் கூடிய சொற்களைக் கொண்டு தொடர் அமைப்பினை அமைத்து அறிமுகம் செய்தல்
கற்றல் விளைவுகள் :
Ø செய்யுள்களில்
உள்ள அறிவியல் கருத்துகள் அன்றாட வாழ்வில் பயன்படும் தொடர்பினை அறிதல்
Ø வழு,வழாநிலை,வழுவமைதி
அறிந்து தொடர்களை பயன்படுத்தும் திறன் பெறுதல்.
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி
முக்கிய
கருத்துகள் மற்றும்
பாடச்
சுருக்கம் :
Ø நாலாயிர திவ்வியப்
பிரபந்தம் நூற் குறிப்பு
Ø குலசேகர ஆழ்வார்
பற்றிய குறிப்பு
Ø பாடலில் உள்ள அறிவியல்
கருத்தான அறுவை மருத்துவத்தின் சிகிச்சைகளைப் பற்றி அறிதல்.
Ø நாலாயிர திவ்விய
பிரபந்ததில் பெருமாள் திருமொழியில் கூறப்பட்டுள்ள அறிவியல் கருத்தினை அன்றாட வாழ்வியல்
நடைமுறையோடு தொடர்பு படுத்துதல்
Ø செய்யுளில் உள்ள உவமை அணி பற்றி விளக்குதல்
Ø செய்யுளில் உள்ள பால் வழுவமைதியை இலக்கணதோடு தொடர்புப்படுத்துதல்
Ø இருதிணை – உயர்திணை, அஃறிணை
Ø ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்
பால்
Ø மூவிடம் – தன்மை, முன்னிலை,படர்க்கை
Ø வழு – இலக்கணமுறையின்றி பேசுவதும், எழுதுவதும்
Ø வழாநிலை – இலக்கண முறையுடன் பேசுவதும், எழுதுவதும்.
Ø வழுவமைதி – பிழையானது இருப்பினும் காரணம் கருதி ஏற்றுக் கொள்வது
Ø வழுவமைதி – திணை வழுவமைதி, பால் வழுவமைதி, இட வழுவமைதி, கால
வழுவமைதி, மரபு வழுவமைதி
ஆசிரியர்
செயல்பாடு :
Ø செய்யுளினை சீர்
பிரித்து வாசித்தல்.
Ø செய்யுளினை இனிய
இராகத்தில் பாடுதல்.
Ø செய்யுளில் உள்ள
கடினச் சொற்களுக்கு பொருள் கூறல்
Ø செய்யுளுக்கான
பொருள் விளக்குதல், அன்றாட வாழ்வியலுடன் எவ்வாறு தொடர்புடன் இருக்கிறது என விளக்குதல்.
Ø செய்யுளில் காணப்படும்
உவமையணியை விளக்குதல்.
Ø திணை, பால் வகைகள்
,பால் பகுப்புகள், மற்றும் மூவிடங்கள் பற்றி விளக்குதல்.
Ø வழு, வழாநிலை – பற்றி விளக்குதல்
Ø வழுவமைதி என்றால் என்ன? என்பதனைப் பற்றியும், அதன் வகைகளை எடுத்துக்காட்டுகளுடன்
விளக்குதல்.
கருத்துரு வரைபடம் : பெருமாள் திருமொழி
பொது
மாணவர்
செயல்பாடு :
Ø செய்யுளினை சீர் பிரித்து படித்தல்
Ø பாடலினை இனிய இராகத்தில் பாடுதல்.
Ø பாடலினை மனனம் செய்யும் திறன் பெறுதல்
Ø பாடலில் உள்ள கடினச் சொற்களுக்கு அகராதியைக் கொண்டு பொருள் காணுதல்.
Ø பாடல் கருத்துகளை நடைமுறை வாழ்வியலுடன் தொடர்புபடுத்தும் திறன்
பெறுதல்.
Ø இலக்கணத்தின் பொதுவான கூறுகளை அறிதல்
Ø வழு, வழா நிலை – இவற்றின் பொருளை எடுத்துக்காட்டுகளுடன் உணர்தல்
Ø வழுவமைதியை எடுத்துக்காட்டுடன் உணர்தல்
வலுவூட்டல் :
Ø பாட நூலில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு பயன்படுத்தி பாடப்பொருளை
வலுவூட்டல்.
குறைதீர்
கற்றல் :
Ø மீத்திற மாணவர்களைக்
கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.
மெல்ல
கற்போர் செயல்பாடுகள்:
Ø வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களை படித்தல்.
Ø எளிய சொற்கள் கொண்டு தொடர் உருவாக்குதல்
Ø செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்
Ø இலக்கணத்தின் பொதுவான பண்புகளை அறிதல்
மதிப்பீடு :
Ø பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
______________
Ø பாடலில் இடம் பெறும் அணி யாது?
Ø பாடலில் இடம் பெறும் வழுவமைதியை அடையாளம் காண்க.
Ø வழுவமைதியின் வகைகள் யாவை? மரபு வழுவமைத்திக்கு எடுத்துக்காட்டுத்
தருக.
தொடர்பணி:
Ø பாடப்பகுதியில்
உள்ள வினாக்களுக்கு விடையளி எழுதி வருமாறுக் கூறல்
____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@----------------------
நன்றி, வணக்கம் – தமிழ்விதைமற்றும் தமிழ்ப்பொழில்