9 TH STD TAMIL-4 TH WEEK MODEL LESSON PLAN(22-11-21 TO 26-11-21)

9 TH STD TAMIL-

4 TH WEEK MODEL LESSON PLAN

(22-11-21  TO 26-11-21)  


நாள்                 :           22-11-2021 முதல்  27-11-2021         

மாதம்               :           நவம்பர்            

வாரம்               :           நான்காம் வாரம்                                    

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                    

பாடத்தலைப்பு     :           1. ஏறுதழுவுதல் 2. மணிமேகலை 3. அகழாய்வுகள்



கருபொருள்                            :

Ø  தமிழர்களின் பண்பாட்டு அசைவுகளை அறிந்து பின்பற்றுதல்

Ø  விழாக்களின் நோக்கம் மற்றும் பண்பாட்டினை உணர்தல்.

Ø  பட்டிமன்றம் என்ற கருத்துப் பரிமாற்ற வடிவத்தை நேர்த்தியுடன் பயன்படுத்துதல்

 

உட்பொருள்                           :

Ø  ஏறுதழுவுதல் பற்றிய பண்பாட்டினை அறிதல்

Ø  மணிமேகலையில் உள்ள இந்திர விழாவினைப் பற்றி அறிதல்

Ø  அகழாய்வுகள் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் கொண்டு முன்னோர்கள் வாழ்ந்த காலத்தினையும், வரலாற்றினையும் அறிதல்

அறிமுகம்                               :

Ø  வீடுகளில் பின்பற்றப்படும் மரபு பழக்க வழக்கங்களைப் பற்றி கேட்டல்.

Ø  நமது ஊர்களில் கொண்டாடப்படும் பண்டிகை கால நிகழ்வினைக் கூறச்செய்தல்

Ø  நமது வீடுகளில் முன்னோர்கள் ஞாபகமாக வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பற்றி வினவுதல்.

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி,வரைபடத்தாள், ஒலிப்பெருக்கி,ஒளிப்பட வீழ்த்தி

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

Ø  இலக்கியங்களில் காணப்படும் ஏறுதழுவுதல் குறித்த செய்திகள்

Ø  ஏறு தழுவுதலுக்கான தொல் சான்றுகள்

Ø  ஏறுதழுவுதல் எவ்வாறு பண்பாட்டின் அடையாளமாக உள்ளது.

Ø  ஏறுதழுவுதலில் தமிழரின் அறம்.

Ø  பண்பாட்டினை பேணிக்காப்பதில் தமிழரின் கடமை

Ø  மணிமேகலை - நூற்குறிப்பு

Ø  இந்திரா விழாப் பற்றி செய்திகள் – மணிமேகலை வாயிலாக அறிதல்

Ø  எண்பேராயம், ஐம்பெருங்குழு – பற்றி அறிதல்

Ø  அகழாய்வு மூலம் தமிழர் வாழ்க்கை முறை

Ø  பட்டிமண்டபம் பற்றிய இலக்கிய செய்திகள்

ஆசிரியர் செயல்பாடு              :

Ø  ஒலி -ஒளி காட்சி மூலம் ஏறுதழுவுதல் பற்றிய படக்காட்சியைக் காண்பித்தல்

Ø  தொல்சான்றுகள், இலக்கிய செய்திகள் பற்றி கூறல்

Ø  செய்யுளினை சீர் பிரித்து படித்தல்

Ø  செய்யுளின் பொருளை விளக்குதல்.

Ø  செய்யுளின் கருத்துகளை அன்றாட வாழ்வியல் நடைமுறைகளுடன் ஒப்பிடல்

Ø   செய்யுளில் இடம் பெற்றுள்ள நயங்களை விளக்குதல்

Ø  பாடல் கருத்துகளை அன்றாட வாழ்வியல் கூறுகளோடு தொடர்புப்படுத்தி கற்பித்தல்

Ø  அகழாய்வு மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களை சேகரித்து மாணவர்களுக்கு தொகுத்து வழங்குதல்.

Ø  பாடப்பகுதி பட்டிமன்றம் அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களை மையமாகக் கொண்டு பட்டிமன்றம் அமைத்து தகவல்களை பரிமாறுதல்

கருத்துரு வரைபடம்                :    ஏறுதழுவுதல்


                                                                     மணிமேகலை


                                                                                அகழாய்வுகள்


மாணவர் செயல்பாடு               :             

Ø  உரைப்பத்தியினை மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  நிறுத்தற்குறியீடு அறிந்து வாசித்தல்

Ø  உரைப்பத்தியில் உள்ள மையக் கருத்தினை உணர்தல்

Ø  மணிமேகலை – நூற் குறிப்பு பிழையின்றி வாசித்தல்

Ø  செய்யுளினை சீர் பிரித்து படித்தல்

Ø  பாடலின் பொருளை வாழ்வியல் நடைமுறைகளோடு தொடர்புபடுத்துதல்.

Ø  பாடலில் காணப்படும் நயங்களை உணர்தல்.

Ø  செய்யுளில் உள்ள இலக்கணக் கூறுகளைக் காணுதல்.

Ø  அகழாய்வு மூலம் கிடைத்த செய்திகளை உணர்தல்

Ø  பட்டிமன்றத்தில் பேசுவதற்கேற்ற நடைமுறைகளை அறிதல்

வலுவூட்டல்                             :

Ø  பாடலை மீண்டும் இனிய இராகத்தில் பாடுதல், தொடர்ந்து மாணவர்களையும் பின் தொடர்ந்து பாட வைத்து வலுவூட்டல்

Ø  பாடல் கருத்துகளை  மீண்டும் கூறி வலுவூட்டல்

குறைதீர் கற்றல்                      :

Ø   மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடப்பொருளை மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றல் மேற்கொள்ளல்.

Ø  மனப்பாடப்பாடலை மீண்டும் இனிய இராகத்தில் பாடுதல்

மெல்ல கற்போர் செயல்பாடுகள்:

Ø  உரைப்பத்தியில் உள்ல வண்ணச் சொற்களைப் படித்தல்

Ø  உரைப்பத்தியின் மையக் கருத்தினை உணர்தல்.

Ø  செய்யுளிணை சீர் பிரித்து வாசித்தல்.

Ø  செய்யுளில் கடினச் சொற்களை கண்டறிந்து அவற்றின் பொருள் காணுதல்

Ø  பட்டிமன்றத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களை உணர்தல்.

மதிப்பீடு                                 :

Ø  மாட்டின் கழுத்தில் கட்டப்படுவது _______________

Ø  ஏறுதழுவுதலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை ?

Ø  எண்பேராயம் என்பது யாது?

Ø  ஐம்பெரும் குழுவில் இடம் பெறுவோர் யாவர்?

Ø  அகழாய்வு என்பது யாது?

Ø  அகழாய்வு மூலம் நாம் எவற்றை அறியலாம்?

தொடர்பணி:

Ø  பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருக.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை மற்றும் தமிழ்ப்பொழில்

































































































































கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை