9 TH STD TAMIL MODEL LESSON PLAN-5 TH WEEK

9 TH STD TAMIL

MODEL LESSON PLAN-5 TH WEEK 

 

நாள்                 :           29-11-2021 முதல்  04-12-2021         

மாதம்               :           நவம்பர்            

வாரம்               :           நவம்பர் இறுதி வாரம்                             

வகுப்பு              :           ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                    

பாடத்தலைப்பு     :   1. வல்லினம் மிகும் இடங்கள்    2. திருக்குறள்


கருபொருள்     :

Ø  தற்கால உரைநடையில் வல்லினம் மிகும் இடங்களை அறிதல்.

Ø  வாழ்வியலுக்குக்கான தேவையான அறக்கருத்துகளை அறிதல்

 

உட்பொருள்      :

Ø  புணர்ச்சி அறிதல்

Ø  புணர்ச்சியில் தோன்றல் விகாரம் பற்றி அறிதல்

Ø  வல்லெழுத்துகள் பற்றி அறிதல்

Ø  பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள திருக்குறள் அதிகாரங்களைப் பற்றி அறிதல்.

அறிமுகம்  :

Ø  சில வல்லினம் மிகும், மிகா இடங்களின் தொடர்களை எழுதி அதன் பொருள் வேறுபாடு கூறி அறிமுகம் செய்தல்.

Ø  திருக்குறள் சிறப்புக் கூறி அறிமுகம் செய்தல்

கற்றல் விளைவுகள்  :

Ø  நடைமுறை வாழ்வில் வல்லினம் மிகும் இடங்களை அறிந்து பயன்படுத்துதல்.

Ø  திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை வாழ்வில் பின்பற்றுதல்.

கற்றல் மாதிரிகள்  :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்    :             

Ø  மொழிக்கு முதலில் வரும் க,ச,த,ப எழுத்துகள்

Ø  தோன்றல் விகாரப்புணர்ச்சியில் வல்லினம் மிகும்

Ø  சுட்டெழுத்து பின் வல்லினம் மிகும்.

Ø  இரண்டாம் வேற்றுமை உருபு வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்

Ø  நான்காம் வேற்றுமை உருபு வேற்றுமை விரியில் வல்லினம் மிகும்

Ø  என,ஆக எனும் சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும்.

Ø  மேலும் சில வல்லினம் மிகும் இடங்கள் அறிதல்

Ø  திருக்குறள் பெருமை,சிறப்பு பற்றி அறிதல்

Ø  பொறையுடைமை,தீவினை அச்சம், கேள்வி, தெரிந்து தெளிதல், ஒற்றாடல், வினைத்தூய்மை, பழைமை, தீ நட்பு, பேதைமை – அதிகார குறள்களின் விளக்கம்

ஆசிரியர் செயல்பாடு   :

Ø  பொருள் வேறுபாட்டை அறிய தொடர்களை எழுதி விளக்குதல்.

Ø  தோன்றல் விகாரம் பற்றி கூறல்

Ø  வல்லினம் மிகும் இடங்களை உதாரணங்களுடன் விளக்குதல்

Ø  திருக்குறள் சிறப்புகள் பற்றி கூறல்.

Ø  திருக்குறளை சீர் பிரித்து வாசித்தல்.

Ø  திருக்குறளுக்கான பொருள் விளக்கம் கூறல்

Ø  மனப்பாடக் குறளை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை அன்றாட வாழ்வியல் நடைமுறையுடன் ஒப்பிடல்.

கருத்துரு வரைபடம்                :              வல்லினம் மிகும் இடங்கள்


                               திருக்குறள்

                                                                                                                                 

மாணவர் செயல்பாடு               :             

Ø  புணர்ச்சி பற்றி அறிந்து கொள்ளுதல்

Ø  புணர்ச்சியின் வகைகள் பற்றி அறிதல்

Ø  வல்லினம் பற்றி அறிதல்

Ø  வல்லினம் மிகும் இடங்கள் குறித்து உதாரணங்களுடன் அறிதல்.

Ø  திருக்குறள் சிறப்பு உணர்தல்.

Ø  திருக்குறளினை சீர் பிரித்து வாசித்தல்

Ø  திருக்குறளின் பொருள் உணர்தல்

Ø  திருக்குறளினை இனிய இராகத்தில் பாடுதல்

வலுவூட்டல்                             :

Ø  பாட நூலில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு பயன்படுத்தி பாடப்பொருளை வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்                      :

Ø   மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மெல்ல கற்போர் செயல்பாடுகள்:

Ø  வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களை படித்தல்.

Ø  திருக்குறளினைச் சீர் பிரித்து வாசித்தல்

Ø  இலக்கணத்தின் பொதுவான பண்புகளை அறிதல்

மதிப்பீடு                                 :

Ø  திருக்குறளைப் போற்றிப்பாடும் நூல் ________________

Ø  திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?

Ø  தொடர் தரும் பொருளைக் கூறுக.

o   சின்னக்கொடி – சின்ன கொடி

o   தோப்புக்கள்  - தோப்புகள்

o   நடுக்கல் – நடுகல்

o   பொய்ச்சொல் - பொய்சொல்

தொடர்பணி:

Ø  பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடையளி எழுதி வருமாறுக் கூறல்

                           @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

நன்றி, வணக்கம்தமிழ்விதைமற்றும் தமிழ்விதை


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை