6 TH STD TAMIL
MODEL LESSON PLAN-5 TH WEEK
நாள் : 29-11-2021 முதல் 04-12-2021
மாதம் : நவம்பர்
வாரம் : நவம்பர்
இறுதி வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு :
1. நீதி வெண்பா 2. வினாவிடை வகை, பொருள்கோள்
![]() |
கருபொருள் :
Ø கல்வியின் சிறப்பு
அறிதல்.
Ø இலக்கண முறைகளை
அறிந்து வினா விடைகளைப் பயன்படுத்துதல்.
Ø பொருள் கொள்ளும்
முறையறிந்து செய்யுளின் பொருளைப் புரிந்துக் கொள்ளுதல்.
உட்பொருள் :
Ø நீதி வெண்பா கூறும்
கல்வியின் பெருமைகளை உணர்தல்
Ø சதாவதானம் பற்றி
அறிதல்.
Ø வினாவின் வகைகள்
– 6
Ø விடையின் வகைகள்
– 8
Ø பொருள்கோள் வகைகள்
– 8
அறிமுகம்
:
Ø கல்வியின் பெருமைகளை
உணர்த்தும் சிறு கதைகள் மூலம் கூறல்.
Ø அன்றாட வாழ்வில்
பயன்படுத்தக் கூடிய சொற்களைக் கொண்டு வினா -விடை அமைப்பினை அமைத்து அறிமுகம் செய்தல்
Ø பாடப்பகுதியில்
உள்ள செய்யுள்களுக்கு பொருள் காணும் முறைகளை அறிந்து பொருள் கொள்ளும் முறையினை அறிமுகம்
செய்தல்.
கற்றல் விளைவுகள் :
Ø கல்வியின் பெருமை
சிறப்பு உணர்தல்
Ø வினாவிடை வகைகள்
அறிந்து வாழ்வில் பயன்படுத்துதல்
Ø செய்யுள்களுக்கு
பொருள் காணும் முறையினை அறிதல்.
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி
முக்கிய
கருத்துகள் மற்றும்
பாடச்
சுருக்கம் :
Ø சதாவதானம் - ஒரே நேரத்தில் நூறு செயல்கள் நினைவில் கொண்டு செய்வது.
Ø கா.ப.செய்கு தம்பி
பாவலர் அவர்களின் நினைவுத்திறன்
Ø பாடலின் பொருள்
Ø கல்வியின் சிறப்பு
Ø எதுகை,மோனை நயம்
Ø வினா – வகைகள் - 6
o அறிவினா
o அறியா வினா
o ஐய வினா
o கொளல் வினா
o கொடை வினா
o ஏவல் வினா
Ø விடை – வகைகள்
-8
o நேர் விடை
o மறை விடை
o சுட்டு விடை
o வினா எதிர் வினாதல்
விடை
o ஏவல் விடை
o உற்றது உரைத்தல்
விடை
o உறுவது கூறல் விடை
o இனமொழி விடை
Ø பொருள் கோள் – செய்யுள்களுக்கு பொருள் கொள்ளும் முறை – இதில்
8 வகை உள்ளது
o ஆற்று நீர்ப்பொருள் கோள்
o நிரல்நிறை பொருள்கோள்
o கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்
ஆசிரியர்
செயல்பாடு :
Ø செய்யுளினை சீர்
பிரித்து வாசித்தல்.
Ø செய்யுளினை இனிய
இராகத்தில் பாடுதல்.
Ø செய்யுளில் உள்ள
கடினச் சொற்களுக்கு பொருள் கூறல்
Ø செய்யுளுக்கான
பொருள் விளக்குதல், அன்றாட வாழ்வியலுடன் எவ்வாறு தொடர்புடன் இருக்கிறது என விளக்குதல்.
Ø செய்யுளில் காணப்படும்
நயங்களைவிளக்குதல்.
Ø வினா விடை வகை
பற்றி விளக்குதல்.
Ø பொருள்கோள் – பற்றி விளக்குதல்
கருத்துரு
வரைபடம் : நீதி வெண்பா
வினா
– வகை
விடை
– வகை
பொருள்கோள்
- வகை
மாணவர்
செயல்பாடு :
Ø செய்யுளினை சீர் பிரித்து படித்தல்
Ø பாடலினை இனிய இராகத்தில் பாடுதல்.
Ø பாடலினை மனனம் செய்யும் திறன் பெறுதல்
Ø பாடலில் உள்ள கடினச் சொற்களுக்கு அகராதியைக் கொண்டு பொருள் காணுதல்.
Ø பாடல் கருத்துகளை நடைமுறை வாழ்வியலுடன் தொடர்புபடுத்தும் திறன்
பெறுதல்.
Ø இலக்கணத்தின் பொதுவான கூறுகளை அறிதல்
Ø வினா-விடை வகைகளை நடைமுறை எடுத்துக்காட்டுகளுடன் உணர்தல்
Ø பொருள்கோள் பற்றி
கூறி அதன் வகைகளில் 3 வகை பொருள் கோளினை உணர்தல்
வலுவூட்டல் :
Ø பாட நூலில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு பயன்படுத்தி பாடப்பொருளை
வலுவூட்டல்.
குறைதீர்
கற்றல் :
Ø மீத்திற மாணவர்களைக்
கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.
மெல்ல
கற்போர் செயல்பாடுகள்:
Ø வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களை படித்தல்.
Ø எளிய சொற்கள் கொண்டு தொடர் உருவாக்குதல்
Ø செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்
Ø இலக்கணத்தின் பொதுவான பண்புகளை அறிதல்
மதிப்பீடு :
Ø சதம் என்பதன் பொருள் யாது?
Ø சதாவதானம் என்பது என்ன?
Ø செய்யுளில் இடம் பெறும் நயங்கள் யாவை?
Ø குறிப்பு விடைகள் யாவை?
Ø கொண்டுக்கூட்டுப் பொருள்கோள் பற்றிக் கூறுக.
தொடர்பணி:
Ø பாடப்பகுதியில்
உள்ள வினாக்களுக்கு விடையளி எழுதி வருமாறுக் கூறல்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை மற்றும் தமிழ்ப்பொழில்