6 TH STD TAMIL-MODEL LESSON PLAN - FEBRUARY 1 ST WEEK

                                       ஆறாம் வகுப்பு தமிழ்- மாதிரி பாடக்குறிப்பு


வகுப்பு: 6.ஆம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: கவிதைப்பேழை(பாரதம் அன்றைய நாற்றாங்கால்)

நாள் : பிப்ரவரி முதல் வாரம்

(01-02-2022 முதல் 05-02-2022 வரை)


1.அறிமுகம்:

     ”உங்களுக்குப் பிடித்த விடுதலைப் போராட்ட வீரர் யார்?” என்ற வினாவை மாணவர்களிடத்தில் கேட்டு,அவர்கள் கூறும்  விடையிலிருந்து, “ஏன் அவரை மிகவும் பிடிக்கும் என்ற வினாவையும் எழுப்பி,சில சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளை அவர்களுக்கு எடுத்துக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல். 


2.படித்தல்:

  • செய்யுள் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் பகுதியைப்  படித்தல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

3.மனவரைபடம்:


4.தொகுத்தலும்,வழங்குதலும்:

  •  பூமியின் கிழக்கு வாசலாகைத் திகழும் நமது இந்தியநாடு

  • இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடை.

  • காளிதாசர் பாடல்கள் கங்கைக் கரை வரை எதிரொலிக்கின்றன.

  • கம்பரின் கவிதை வரிகளுக்கு கங்கையின் அலைகள் இசை அமைக்கின்றன.

  • குமரி ஆகிய பெண்ணின் கூந்தலுக்கு காஷ்மீரத்து மலர்கள் சூட்டப்படுகின்றன.

  • இப்பாடலை இயற்றியவர் கவிஞர் தாராபாரதி ஆவார்.

  • இவர் கவிஞாயிறு என்று போற்றப்படுகிறார்.

5.வலுவூட்டுதல்:

  • ”விடுதலைப் போராட்ட நிகழ்வுகளில் தேசத்தலைவர்கள் எத்தகைய இன்னல்களை அனுபவித்தார்கள்?” என்ற வினாவை எழுப்பி, மாணவர்களைக் கலந்துரையாடச் செய்தல் மூலம் மாணவர்களின் கற்றலுக்கு வலுவூட்டுதல்.

  • ”நமது தாய் நாட்டிற்கு நீங்கள் செய்ய விரும்பும் தொண்டுகள் எவை?’ என்ற வினாவிற்கு விடை களை குறிப்பேட்டில் எழுதி வரச் சொல்லி,

 அதை விவாதித்து  கற்றலுக்கு வலுவூட்டுதல்.

6.மதிப்பீடு:

         பின்வரும் வினாக்களைக் கேட்பதன் மூலம் மாணவர்களை மதிப்பீடு செய்தல்.

  1. பாரதத்தின் அன்றைய நாற்றங்கால் என்ற பாடலை இயற்றியவர் யார்?

  2. தாராபாரதி எவ்வாறு போற்றப்படுகிறார்?

  3. கம்பரின் கவிதை வரிகளுக்கு இசையமைத்த எவை?

  4. பூமியின் கிழக்கு வாசல் எதுவென்று கவிஞர் கூறுகிறார்?

7. குறைதீர் கற்றல்:

  • கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.

  • படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.

  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.

  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,

கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல் 

8.எழுதுதல்:

  • மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.

  • மனப்பாட பாடலை படித்து வீட்டுத் தேர்வு எழுதி வரச் செய்தல்

9.தொடர்பணி:

  •  ”நாட்டிற்கு உழைத்த நல்லவர்கள்” என்ற தலைப்பில் படங்களுடன் கூடிய தகவல் தொகுப்பேடு ஒன்றை மாணவர்கள் ஒவ்வொருவரையும் உருவாக்கி வரச்சொல்லுதல்.

  • ”நாட்டு  முன்னேற்றத்தில் நம் பங்கு என்ற தலைப்பில் பேசுவதற்கு உரைக் குறிப்புகளை உருவாக்கி வரச்சொல்லுதல்.

பயன்படுத்தப்பட்ட கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:

  •  படவீழ்த்தி

  • கணிப்பொறி

  • தேசத்தலைவர்களின் படங்கள்

  • பாடப்புத்தகம்

  • கரும்பலகை     

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை