9 TH STD -TAMIL -MODEL LESSON PLAN -WEEK 2(13-12-21 TO 18-12-21)

www.thamizhvithai.com

நாள்                 :           13-12-2021 முதல்  18-12-2021          

மாதம்               :           டிசம்பர்             

வாரம்               :           டிசம்பர் இரண்டாம் வாரம்                       

வகுப்பு              :         ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                    

பாடத்தலைப்பு     :1. வல்லினம் மிகா இடங்கள்  2. கல்வியிற் சிறந்த பெண்கள்

 


கருபொருள்                            :

Ø  வல்லினம் மிகா இடங்களை அறிதல்.

Ø  கல்வி, பெண்கள் முன்னேற்றத்தில் பெரும் பங்கு ஆற்றியுள்ளமையை அறிந்து பெண்கல்விக்குத் தம் பங்களிப்பை நல்குதல்.

 

உட்பொருள்                           :

Ø  தற்கால உரைநடையில் வல்லினம் எங்கெங்கு மிகாது என்பதனை அறிந்து தொடர்களை எழுதுதல்.

Ø  கல்வியிற் சிறந்து விளங்கிய பெண்களை போற்றுதல்.

அறிமுகம்                               :

Ø  சிலத் தொடர்களை கரும்பலகையில் எழுதி அதில் வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதி அதனால் ஏற்படக்கூடிய பொருள் மாறுபாட்டினைக் கூறி அறிமுகம் செய்தல்.

Ø  ஹெலன் கெல்லர் சாதனை பெண்மணியின் சாதனையைக் கூறி அறிமுகம் செய்தல்.

கற்றல் விளைவுகள்                 :

Ø  வல்லினம் மிகா இடங்களுக்கான இலக்கண விதிகள் அறிந்து தொடர்களை எழுதுதல்.

Ø  பெண்கல்வியின் உன்னதம் அறிந்து பெண்களை போற்றும் மனபாங்கு வளர்த்தல்.

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

Ø  சுட்டுப்பெயர்களின் வல்லினம் மிகாது

Ø  வினாப்பெயர்களின் பின் வல்லினம் மிகாது

Ø  எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது

Ø  மூன்றாம்,ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது

Ø  இரண்டாம், மூன்றாம்,நான்காம்,ஐந்தாம் வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது.

Ø  விளித்தொடரில் வல்லினம் மிகாது.

Ø  பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது.

Ø  வினைத்தொகையில் வல்லினம் மிகாது

Ø  வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது

Ø  உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது.

Ø  அடுக்குத் தொடர்,இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது.

Ø  சங்க கால பெண்பாற் புலவர்கள்

Ø  பெண்மை புரட்சி – முத்து லட்சுமி

Ø  பெண்மை உயர்வு – பண்டித ரமாபாய்

Ø  பெண்மை துணிவு – மூவலூர் இராமாமிர்தம்

Ø  பெண்மை சிறப்பு – ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்

Ø  பெண்மை அறிவு – சாவித்திரிபாய் பூலே

ஆசிரியர் செயல்பாடு              :

Ø  வல்லினம் மிகும் இடங்களான முன்னர் கற்ற பாடத்தினை நினைவுக் கூர்தல்.

Ø  வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதால் ஏற்படும் பொருள் மாறுபாட்டினை அறிதல்

Ø  வல்லினம் மிகா இடங்களுக்கான இலக்கண விதிகள் கூறுதல்

Ø  இலக்கண விதிகளை விளக்குதல்

Ø  பெண்களின் உரிமைப் பற்றி அறிதல்

Ø  பெண்கல்வியின் மகத்துவம் புரிய வைத்தல்

Ø  பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள பெண்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து வழங்குதல்.

 

கருத்துரு வரைபடம்                :              வல்லினம் மிகா இடங்கள்


                                                            கல்வியிற் சிறந்த பெண்கள்     



                                                 

மாணவர் செயல்பாடு               :             

Ø  வல்லினம் குறித்து அறிதல்

Ø  வல்லினம் மிகும் இடங்களை நினைவு கூர்தல்.

Ø  பொருள் மாறுபாட்டில் வல்லினம் பெறும் முக்கியத்துவம் அறிதல்.

Ø  வல்லினம் மிகா இடங்களை அறிதல்

Ø  இலக்கண விதிகளை அறிதல்

Ø  வல்லினம் மிகா இடங்களை அறிந்து அவற்றை தற்கால உரைநடையில் பயன்படுத்துதல்.

Ø  பெண்களை போற்றும் மனப்பாங்கு வளர்த்தல்

Ø  கல்வியிற் சிறந்து விளங்கிய பெண்களின் சாதனைகளை அறிதல்

Ø  வில்லுப்பாட்டின் சிறப்புகள் அறிதல்

Ø  பெண்கல்விக்கு முன்னுரிமை அளித்தல்.

வலுவூட்டல்                             :

Ø  பாட நூலில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு பயன்படுத்தி பாடப்பொருளை வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்                      :

Ø   மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மெல்ல கற்போர் செயல்பாடுகள்:

Ø  வல்லினம் என்றால் என்ன என அறிதல்.

Ø  முன்னர் கற்ற வல்லினம் மிகும் இடங்கள் பற்றி கூற செய்தல்

Ø  வல்லினம் மிகா இடங்களின் இலக்கண விதிகள் அறிதல்

Ø  கல்வியின் பெருமையை உணர்தல்

Ø  கல்வியினால் கிடைக்கக் கூடிய பயன்களைப் பற்றி அறிதல்

Ø  கல்வி என்பது ஆண், பெண் இருவருக்கும் பொது என்பதனை உணர வைத்து பெண்கல்விக்கு மதிப்பளித்தல்.

மதிப்பீடு                                 :

Ø  கீழ்க்கண்டத் தொடர்களில் வல்லினம் மிகுமா என அறிக:-

o   தோழி __ கூற்று

o   பெரிய __ தம்பி

o   எலி __ கடிக்கும்

Ø  சங்க கால பெண்பாற் புலவர்கள் சிலர் பெயரைக் கூறுக.

Ø  உலகின் முதல் பெண் ஆசிரியர் _____________

Ø  அவ்வை இல்லம் யாரால் தொடங்கப்பட்டது?

தொடர்பணி:

Ø  பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடையளி எழுதி வருமாறுக் கூறல்

                  @@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை மற்றும் தமிழ்ப்பொழில் 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை