10 TH STD -TAMIL -MODEL LESSON PLAN -WEEK 2(13-12-21 TO 18-12-21)


நாள்                 :           13-12-2021 முதல்  18-12-2021          

மாதம்               :           டிசம்பர் 

வாரம்               :           இரண்டாம் முதல் வாரம்                          

வகுப்பு              :           பத்தாம் வகுப்பு  

பாடம்                :           தமிழ்                                                    

பாடத்தலைப்பு     :1. திருக்குறள்   2. சிற்றகல் ஒளி – தன் வரலாறு


கருபொருள்                            :

Ø  திருக்குறள் கூறும் அறக்கருத்துகளைப் பின்பற்றுதல்.

Ø  பெரும் தலைவர்களின் தியாக உணர்வுகளைப் போற்றுதல். 

உட்பொருள்                           :

Ø  திருக்குறளில் உள்ள அமைச்சு,பொருள் செயல்வகை, கூடாநட்பு, பகைமாட்சி,குடி செயல்வகை,நல்குரவு,இரவு,கயமை, குடி செயல்வகை அதிகாரங்களின் அறக்கருத்துகளை அறிதல்.

Ø  மா.பொ.சி யின் கல்வி,போராட்டங்கள், தியாகங்கள், தமிழகம் பற்றிய கனவு, வடக்கெல்லை,தெற்கெல்லை பற்றி அறிதல்.

அறிமுகம்                               :

Ø  திருக்குறளின் நிதீ கதையினைக் கூறி அறிமுகம் செய்தல்.

Ø  சரித்திரத்தில் இடம் பெற்ற தலைவர் ஒருவரைப பற்றி கூறி அறிமுகம் செய்தல்.

கற்றல் விளைவுகள்                 :

Ø  நீதி நூல்கள் கூறும் வாழ்வியல் அறக்கருத்துகளைப் பின்பற்றுதல்.

Ø  தன் வரலாறு என்னும் இலக்கிய வகைமையின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினைப் புரிந்து அதுபோல எழுத முற்படுதல்.

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

Ø  பாடப்பகுதியில் உள்ள இடம் பெற்றுள்ள அதிகாரங்கள்

o   அமைச்சு

o   பொருள் செயல் வகை

o   கூடாநட்பு

o   பகை மாட்சி

o   குடி செயல் வகை

o   நல்குரவு

o   இரவு

o   கயமை

Ø  மா.பொ.சி. யின் இளமை காலம்

Ø  வறுமையால் இழந்த கல்வி

Ø  மா.பொ.சி. ஒரு புத்தகப்பித்தன்

Ø  மா.பொ.சி.யின் பேராயக்கட்சியில் பங்கு

Ø  மா.பொ.சி. சென்னையை மீட்ட நிகழ்வு

Ø  வடக்கெல்லை, தெற்கெல்லைப் போராட்டங்கள்

Ø  மா.பொ.சி.யின் தமிழகம் பற்றிய கனவு

ஆசிரியர் செயல்பாடு              :

Ø  திருக்குறளை சீர் பிரித்து வாசித்தல்.

Ø  திருக்குறளை இனிய இராகத்தில் பாடுதல்.

Ø  திருக்குறளுக்கான பொருள் விளக்குதல், அன்றாட வாழ்வியலுடன் எவ்வாறு தொடர்புடன் இருக்கிறது என விளக்குதல்.

Ø  திருக்குறளில் காணப்படும் நயங்களைவிளக்குதல்.

Ø  நிறுத்தற் குறியீடு அறிந்து வாசித்தல்.

Ø  உரைநடையில் உள்ள உணர்வுகளுடன் வாசித்தல்.

Ø  மா.பொ.சி.யின் போராட்டங்கள் பற்றி கூறுதல்.

Ø  மா.பொ.சியின் வடக்கெல்லை,தெற்கெல்லைப் போராட்டங்கள் பற்றிக் கூறுதல்

Ø  மார்ஷ்ல் நேசமணி பற்றி அறிதல்

கருத்துரு வரைபடம்                :              திருக்குறள்

                                                          


 

                                                            சிற்றகல் ஒளி

                                                           


மாணவர் செயல்பாடு               :             

Ø  திருக்குறளினை சீர் பிரித்து படித்தல்

Ø  திருக்குறளினை இனிய இராகத்தில் பாடுதல்.

Ø  மனப்பாடக் குறளை மனனம் செய்யும் திறன் பெறுதல்

Ø  திருக்குறளில் உள்ள கடினச் சொற்களுக்கு அகராதியைக் கொண்டு பொருள் காணுதல்.

Ø  திருக்குறள் கூறும் கருத்துகளை நடைமுறை வாழ்வியலுடன் தொடர்புபடுத்தும் திறன் பெறுதல்.

Ø  தன் வரலாறு உரைநடை பகுதிகளை நிறுத்தற் குறியீடு அறிந்து படித்தல்

Ø  உரைநடையை பிழையின்றி படித்தல்

Ø  உரைநடையில் காணும் புதிய சொற்களை அடையாளம் காணுதல்.

Ø  மா.பொ.சி. யின் போராட்டங்களை மதித்தல்

வலுவூட்டல்                             :

Ø  பாட நூலில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு பயன்படுத்தி பாடப்பொருளை வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்                      :

Ø   மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மெல்ல கற்போர் செயல்பாடுகள்:

Ø  குறளை சீர் பிரித்து படித்தல்.

Ø  குறளை இசை இராகத்துடன் படித்தல்.

Ø  உரை நடையில் காணும் புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்.

Ø  படித்துப் பொருள் உணர்தல்.

மதிப்பீடு                                 :

Ø  வறுமையைப் போல் துன்பம் தருவது எது ?

Ø  பகைவரின் பண்புகள் யாவை?

Ø  தமிழனத்தை ஒன்றுப்படுத்தும் காவியமாக மா.பொ.சி. கருதியது எது?

Ø  மா.பொ.சியின் இளமை கால வறுமைக் குறித்து கூறுக.

தொடர்பணி:

Ø  பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடையளி எழுதி வருமாறுக் கூறல்



 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை