9TH - NOTES OF LESSON - DECEMBER - WEEK - 1

   www.thamizhvithai.com


 

நாள்                 :           06-12-2021 முதல்  11-12-2021          

மாதம்                           டிசம்பர்            

வாரம்               :           டிசம்பர் - முதல் வாரம்                                     

வகுப்பு              :            ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. ஓ என் சமகாலத் தோழர்களே!

                                              2. உயிரின் வகை - தொல்காப்பியம்

கருபொருள்                            :

Ø  இலக்கியங்கள் காட்டும் தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள்,சமூகத் தேவைகளுக்கு ஏற்ப மேம்பட்டு வருவதை உணர்தல்.

Ø  தொல்காப்பியம் குறிப்பிடும் உயிர்களின் வகைப்பாட்டினை அறிவியல் செய்திகளோடு ஒப்பிடல்

உட்பொருள்                           :

Ø  அறவியலோடு அறிவியல் கண்ணோட்டமும் வளர வேண்டும்.

Ø  அறிவியல் துறையில் தமிழர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற விழைவை பாடல் வழியாக விளக்குதல்.

Ø  உயிரின வகைப்பாட்டினை தொல்காப்பியத்தின் வழியே அறிதல்

அறிமுகம்                               :

Ø  தற்கால விண்வெளி தகவல்கள்  குறித்து கலந்துரையாடி பாடப்பொருளை அறிமுகம் செய்தல்.

Ø  வீட்டின் அருகில் காணப்படும் உயிரினங்களின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடி அறிமுகம் செய்தல்.

கற்றல் விளைவுகள்                 :

Ø  தமிழ் மொழி மூலமாக அறிவியல் துறையில் சாதிக்க முடியும் என்பதனை உணர்தல்.

Ø  தமிழ் எல்லா இடங்களிலும் உள்ளது என்பதனை அறிந்து மேலும் அதனை இணையம் வழியாக பரவச் செய்தல்.

Ø  உயிரின வகைப்பாட்டில் அவற்றின் அறிவுகளை அறிதல்.

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

Ø  வைரமுத்து அவர்களின் குறிப்பு

Ø  பாடலில் காணப்படும் கருத்துகளின் பொருள் விளக்கம்

Ø  கடின சொற்கள் : கழனி – வயல் , முதுமொழி – மூத்தோர் மொழி

Ø  பாடலில் காணப்படும் எதுகை,மோனை நயங்களை அறிதல்

Ø  அறிவியல் என்னும் வாகன மீதில் – என்னும் மனப்பாடப்பாடலை இனிய இராகத்தில் பாடுதல்.

Ø  தொல்காப்பியம் நூற் குறிப்பு அறிதல்

Ø  உயிரின வகைப்பாடு.

o   ஓரறிவு    –            உற்றறிதல்                             –            புல்,மரம்

o   ஈரறிவு     -             உற்றறிதல் + சுவைத்தல்          -               சிப்பி,நத்தை

o   மூவறிவு   -             உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் -               எறும்பு, கரையான்

o   நாலறிவு  -             உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் – நண்டு

o   ஐந்தறிவு  -             உற்றறிதல் + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல்  - பறவை, விலங்கு

o   ஆறறிவு   -             உற்றறிதல் + சுவைத்தல்  + நுகர்தல் + காணல் + கேட்டல் + பகுத்தறிதல் - மனிதன்

ஆசிரியர் செயல்பாடு              :

Ø  பாடலை சீர்ப் பிரித்து படித்தல்

Ø  பாடலின் பொருளை அறிதல்

Ø  மனப்பாடப்பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  பாடலை அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளுடன் தொடர்புப்படுத்துதல்

Ø  உயிரின் வகைகளை அறிதல்

Ø  உயிரின வகைப்பாட்டினை தகுந்த படங்கள் கொண்டு அவற்றின் செயல்பாட்டு அறிவினை விளக்குதல்

 

கருத்துரு வரைபடம்                :              ஓ என் சமகாலத் தோழர்களே

www.thamizhvithai.com

                                                        உயிரின் வகை – தொல்காப்பியம்

                                                                                     

www.thamizhvithai.com         

மாணவர் செயல்பாடு               :             

Ø  பாடலைச் சீர் பிரித்து படித்தல்

Ø  பாடலின் பொருளை அறிதல்

Ø  செய்யுள் கூறும் கருத்தினை அன்றாட வாழ்வியல் நடைமுறைகளுடன் ஒப்பிடல்

Ø  மனப்பாடப் பகுதியினை மனனம் செய்தல்\

Ø  உயிரின வகைப்பட்டினை பாடல் மூலம் அறிதல்

வலுவூட்டல்                             :

Ø  பாட நூலில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு பயன்படுத்தி பாடப்பொருளை வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்                      :

Ø   மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மெல்ல கற்போர் செயல்பாடுகள்:

Ø  வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களை படித்தல்.

Ø  மனப்பாடப்பகுதியினை இரண்டு இரண்டு அடிகளாக வாசித்தல்

Ø  மனனம் செய்யும் திறன் பெறுதல்

மதிப்பீடு                                 :

Ø  வைரமுத்து-வின் எந்த நூலுக்கு சாகெத்திய அகாதெமி விருது கிடைத்தது ________________

Ø  தமிழை எதன் மீது ஏற்றி உலகம் முழுவதும் பரப்பச் சொல்லி கவிஞர் கூறுகிறார்?

Ø  ஈரறிவு உயிரினங்களின் ஆற்றல் யாது?

தொடர்பணி:

Ø  பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடையளி எழுதி வருமாறுக் கூறல்

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@--------------------

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை