10TH - NOTES OF LESSON - DECEMBER - WEEK -1

  www.thamizhvithai.com

நாள்                 :           06-12-2021 முதல்  11-12-2021          

மாதம்               :             டிசம்பர்            

வாரம்               :           டிசம்பர் -  முதல்  வாரம்                                       

வகுப்பு              :            பத்தாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :1. கம்பராமாயணம்

                                   2. அகப்பொருள் இலக்கணம்

கருபொருள்                            :

Ø  சந்த நயமும்,தொடை நயமும் கொண்ட பாடல்களை மனனமாக பாடுதல், நா நெகிழ்,நா பிறழ் பயிற்சிகளில் ஆற்றல் பெறுதல்.

Ø  தமிழரின் அகப்பொருள் இலக்கணம் அறிதல், இயற்கையுடன் ஒன்றிணைந்த வாழ்க்கை முறைகளைப் புரிந்து கொள்ளுதல்.

 

உட்பொருள்                           :

Ø  கம்பரின் அழகுணர் கற்பனைத் திறனை கம்பராமாயண வழி மூலம் அறிதல்.

Ø  அகப்பொருள் இலக்கணம் கூறும் முதற் பொருள்,கரு பொருள், உரி பொருள் பற்றி அறிதல்

அறிமுகம்                               :

Ø  இயற்கை அமைப்பு படங்கள் கொண்டு மாணவர்களுக்கு எழக் கூடிய கற்பனைத் திறனை கூற வைத்து ஆயப்படுத்துதல்.

Ø  மக்கள் வாழும் நிலப்பகுதியினைக் குறிக்கும் படங்களைக் காட்டி ஆயத்தப்படுத்துதல்.

கற்றல் விளைவுகள்                 :

Ø  இயற்கையினை போற்றும் திறன் அறிதல்

Ø  நிலப்பகுதியினையும், ஆண்டுகளின் கூறுகளையும், நாட்களின் கூறுகளையும் அறிதல்.

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

Ø  கம்ப ராமாயண குறிப்புகள் மற்றும் கம்பர் பற்றிய பெருமைகள்

Ø  பால காண்டம் – ஆற்றுப்படலம் – சரயு ஆற்றின் தோற்றத்தை வருணித்தல

Ø  பால காண்டம் – நாட்டுப்படலம் – இயற்கைக் காட்சியினை கலை நிகழ்வாக காணுதல்

Ø  நாட்டின் பெருமையினை மெய்யியல் வாயிலாக அறிதல்.

Ø  அயோத்தியா காண்டம் – கங்கை படலம் – இராமனின் அழகை வருணித்தல்

Ø  கங்கை காண் படலம் – குகனின் இயலாமையை அழகிய சந்த நயத்துடன் பாடுதல்

Ø  யுத்த காண்டம் – கும்ப கருணன் வதை படுவது

Ø  அகப்பொருள்

o   முதற் பொருள் – நிலம்,பொழுது

o   நிலம் – குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை

o   பொழுது – சிறு பொழுது, பெரும் பொழுது

o   பெரும்பொழுது – ஓர் ஆண்டின் ஆறு கூறுகள்

o   சிறு பொழுது – ஒரு நாளின் ஆறு கூறுகள்

ஆசிரியர் செயல்பாடு              :

Ø  செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்.

Ø  செய்யுளினை இனிய இராகத்தில் பாடுதல்.

Ø  செய்யுளில் உள்ள கடினச் சொற்களுக்கு பொருள் கூறல்

Ø  செய்யுளுக்கான பொருள் விளக்குதல், அன்றாட வாழ்வியலுடன் எவ்வாறு தொடர்புடன் இருக்கிறது என விளக்குதல்.

Ø  செய்யுளில் காணப்படும் நயங்களைவிளக்குதல்.

Ø  அகப்பொருள் கூறும் முதற் பொருளை அன்றாட வாழ்வியலுடன் தொடர்புப்படுத்துதல்.

Ø  ஆண்டின் கூறுகளைக்கூறி அவற்றை முதற்பொருளோடு ஒப்பிடல்.

Ø  நாளின் கூறுகளைக்கூறி அவற்றை முதற்பொருளோடு ஒப்பிடல்.

கருத்துரு வரைபடம்                :              கம்பராமாயணம்

                                                             

www.thamizhvithai.com


                                                            அகப்பொருள் இலக்கணம்,

www.thamizhvithai.com


                                                           

மாணவர் செயல்பாடு               :             

Ø  செய்யுளினை சீர் பிரித்து படித்தல்

Ø  பாடலினை இனிய இராகத்தில் பாடுதல்.

Ø  பாடலினை மனனம் செய்யும் திறன் பெறுதல்

Ø  பாடலில் உள்ள கடினச் சொற்களுக்கு அகராதியைக் கொண்டு பொருள் காணுதல்.

Ø  பாடல் கருத்துகளை நடைமுறை வாழ்வியலுடன் தொடர்புபடுத்தும் திறன் பெறுதல்.

Ø  இலக்கணத்தின் பொதுவான கூறுகளை அறிதல்

Ø  அன்பின் ஐந்திணைகள் பற்றி அறிதல்

Ø  பெரும்பொழுதின் கூறுகளை அறிதல்

Ø  சிறு பொழுதின் கூறுகளை அறிதல்

Ø  கருபொருள் பற்றியவற்றை அட்டவணை வாயிலாக அறிதல்.

வலுவூட்டல்                             :

Ø  பாட நூலில் உள்ள விரைவுத் துலங்கல் குறியீடு பயன்படுத்தி பாடப்பொருளை வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்                      :

Ø   மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மெல்ல கற்போர் செயல்பாடுகள்:

Ø  வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களை படித்தல்.

Ø  எளிய சொற்கள் கொண்டு தொடர் உருவாக்குதல்

Ø  செய்யுளினை சீர் பிரித்து வாசித்தல்

Ø  அகத்திணையைப் பற்றி அறிதல்

மதிப்பீடு                                 :

Ø  கம்பரை ஆதரித்த வள்ளல் _____________

Ø  கம்பராமாயணத்தில் உள்ள காண்டகள் ______________

Ø  தண்டலை என்னும் செய்யுளில் இடம் பெறும் நயங்களை கூறுக.

Ø  அன்பின் ஐந்திணை யாவை?

Ø  ஆறு பெரும் பொழுதும் வரும் திணைகள் எவை?

தொடர்பணி:

Ø  பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடையளி எழுதி வருமாறுக் கூறல்

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@-----

 


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை