தடுப்பூசி சான்றிதழ்
கொரோனா பெருந்தொற்று காரணமாக,பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி போடும் பணியும் விரைவுவுபடுத்தப்பட்டுள்ளது. முக்கிய பணிகளுக்காக வெளியில் செல்லும் மக்களே அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வழிபாட்டுத் தளங்களிலும் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் இடங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் காண்பித்தல் அவசியமாகிறது. சான்றிதழ்களை WHATSAPP மூலம் எவ்வாறு எளிமையாகப் பெறுவது என்பதே இங்கு காணவிருக்கிறோம் .பின்வரும் எதிரியாக வழிமுறையை பின்பற்றி கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை WHATSAPP மூலம் எளிமையாகப் பெறமுடியும்.
(தடுப்பூசி போடும்போது தரபப்பட்ட எண்ணையே பயன்படுத்த வேண்டும்)
படிநிலை 1: 9013151515 என்ற எண்ணை SAVE செய்க.
படிநிலை 2 : அந்த எண்ணிற்கு certificate என செய்தி அனுப்புக
படிநிலை 3 : உங்கள் பெயர் வரும்.அதைச் சரிபார்த்து “1” என TYPE செய்து
அனுப்பவும்.உடனே உங்களுக்கான கொரோனா தடுப்பூசி
செலுத்தியதற்கான சான்றிதழ் கிடைக்கும்