THIRUPPUR KUMARAN MEMORY DAY -SPECIAL QUIZ WITH E-CERTIFICATE

 திருப்பூர் குமரன் 


        (அக்டோபர் 41904 – ஜனவரி 111932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜனவரி 11 இல் உயிர் துறந்தார் திருப்பூர் குமரன் . இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

       காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கு ஆதரவாக, காவல்துறை தடையை மீறி ஆர்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமையேற்று ஆர்வமுடன் அணி வகுத்துச் சென்றான் அந்த இளைஞன்.திருப்பூர் குமரனுடைய நினைவு நாள் ஆண்டுதோறும்  ஜனவரி 11 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.அவரை நினைவுகூறும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா தேர்வு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வினாடி வினாவில் பங்கேற்க

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை