NATIONAL ARMY DAY SPECIAL QUIZ -WITH E-CERTIFICATE

இந்திய இராணுவம்-சிறப்புக்கட்டுரை


இந்திய இராணுவம்    

       இன்று 66வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து நம் நாடு எதிரிகளிடம் சிக்கி விடாமல் இன்னும் கட்டுகோப்பாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நம் ராணுவம். எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில் நாட்டை காக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

      இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த போதே ராணுவம் தொடங்கப்பட்டது. இந்தியர்கள் படை வீரர்களாகச் சேர்க்கப்பட்டனர். தலைமை பொறுப்பு ஆங்கிலேய அதிகாரிகளிடம் தான் இருந்தது. ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட பல தலைவர்கள் போராடினர். ஒரு புறம் மகாத்மா காந்தி தலைமையில் அகிம்சை முறையில் போராட்டம் நடந்தது. மற்றொரு புறம், ஆங்கிலேயர்களுக்கு அவர்களது வழியிலேயே பதிலடி தரும் விதமாக, 1941ல் 2ம் உலகப் போரின்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜப்பானின் உதவியோடு இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி னார். இதில் தமிழர்கள் அதிகம் இடம்பெற்றனர்.சுதந்திரம் வழங்க முடிவு செய்து, இந்தியா--பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. அப்போது ஆங்கிலேய ராணுவமும் 2 பகுதியாக பிரிக்கப்
பட்டது. பெரும்பாலான வீரர்கள் இந்தியாவுக்கும், மீதி பாகிஸ்தானுக்கும் வழங்கப்பட்டனர்.

     இந்தியா சுதந்திரம் பெற்ற பின் பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கப்பட்டது. அதன் கீழ் இந்திய தேசிய ராணுவம் உருவாக்கப்பட்டது. ஆனாலும் தலைமை பொறுப்பை ஆங்கிலேயர் தான் கவனித்தனர். இந்நிலையில், 1948 ஜன., 15ல், ராணுவ தளபதி பொறுப்பை, ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து, இந்தியாவின் கரியப்பா ஏற்றார்.1955ல் ராணுவ தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது. 1962ல் பாதுகாப்புக்கான தயாரிப்புத்துறை நிர்மாணிக்கப்பட்டது. 1980ல் டி.ஆர்.டி.ஓ., தொடங்கப்பட்டது. 2004ல் முன்னாள் வீரர்களுக்கான நலவாரியம் ஏற்படுத்தப் பட்டது.1947ல் கட்டமைக்கப்பட்ட இந்திய ராணுவம், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நவீனப்படுத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும்ஏவுகணைகள், நவீன பீரங்கிகள், ஆளில்லா போர் விமானங்கள், அணு ஆயுதம் சுமந்து செல்லும் கப்பல்கள், உளவு விமானங்கள் ஆகியவற்றை
கொண்டுள்ளது.

இந்திய இராணுவம்-முக்கியப்போர்கள்:

 * 1947: காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்காக பாகிஸ்தான் ராணுவத்துடன்,இந்திய ராணுவம் போரிட்டது.
* 1948: ஐதராபாத் மாகாணத்தைஇந்தியாவுடன் இணைப்பதற்காகஇந்திய ராணுவம் சண்டை.
* 1950: நடந்த கொரிய போரின் போது, தென்கொரியாவுக்குஆதரவாக போரிட்ட ஐ.நா., அமைதிப்
படையில் இந்திய ராணுவம் சேர்ந்துபங்கேற்றது.
* 1961: ஆங்கிலேயர் மற்றும் பிரஞ்சுப் படைகள் வெளியேறிய பின்பும் போர்த்துகீசிய படைகள் வெளியேறாமல் இருந்தன. இதையடுத்து ராணுவம் அவர்களுடன் சண்டையிட்டு, கோவா மற்றும் டையூ டாமன் ஆகியவற்றை இந்தியாவுடன் இணைத்தது.
* 1962: இந்தியா - சீனா இடையே போர் ஏற்பட்டது. இந்திய ராணுவம் தோல்வியைத் தழுவியது. போரின் போது சில பகுதிகளையும் சீனாவிடம் இழந்தது. அப்போது முதல் சீன ராணுவம் அவ்வப்போது இந்திய பகுதிக்குள் ஊடுருவல் செய்து வருகிறது.
* 1965: பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி.
* 1971: பாகிஸ்தானுடன் மீண்டும் போர் ஏற்பட்டது. போரின் முடிவில் இந்தியாவின் முயற்சியால் கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசம் என்ற புதிய நாடாக உருவானது.
* 1999: காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவினர். இதையடுத்து கார்கில் போர் ஏற்பட்டது. இதில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து போரில் வெற்றி பெற்றது.

தலைமையகங்கள்:

       ராணுவத்தின் தலைமையகம் டில்லி. இதன் கீழ் 6 மண்டலங்கள் உள்ளன. மத்திய மண்டலம் (லக்னோ), கிழக்கு மண்டலம் (கோல்கட்டா), வடக்கு மண்டலம் (உதம்பூர்), தென் மண்டலம் (புனே), தென் மேற்கு மண்டலம் (ஜெய்ப்பூர்), மேற்கு மண்டலம் (சந்திமந்திர்).4வது பெரியதுஇந்திய ராணுவம் உலகின் 4வது பெரியது. இதன் தலைமையகம் டில்லி. தரைப்படை, விமானப்படை, கப்பல்படை என்ற முப்படைகளின் தளபதியாகஜனாதிபதி இருக்கிறார். தற்போதைய ராணுவ தலைமை தளபதியாக தல்பீர் சிங் பதவி வகிக்கிறார். ராணுவத்துக்கான கட்டளையை பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு மற்றும் ராணுவஅமைச்சகம் மட்டுமே வெளியிடுகிறது.இந்திய ராணுவத்தில் தரைப்படை, கப்பல்படை, விமானப்படை, கடலோர காவல்படை, துணைராணுவப்படை என ஐந்து பிரிவுகள் உள்ளன. இதில் தரைப்படையே பெரியது. இதில் 13,25,000 வீரர்கள் பணியாற்றுகின்றனர்.


சிறப்பு வினாடி வினாவில் பங்கேற்க

2 கருத்துகள்

நன்றி

புதியது பழையவை