வகுப்பு: 10.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: உரைநடை உலகம்- ஜெயகாந்தம் - நினைவு இதழ்
நாள்: 28-02-2022 முதல் 05-03-2022 வரை
பொது நோக்கம்:
@ மாற்றுச் சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுவதை உணர்ந்து அது போன்று சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல்.
@ ஓர் ஆளுமையை மையமிட்ட கருத்துகளைத் தொகுத்து முறைப்படுத்தி, சீர்மையுடன் இதழ் வடிவில் வெளிப்படுத்தும் திறன் பெறுதல்.
சிறப்பு நோக்கம்:
# கருத்தாழமும் வாசகர் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன், சமகாலக் கருத்துக்களையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில் தந்தவர் ஜெயகாந்தன் என்பதை மாணவர் அறிந்து கொள்ளுதல்.
பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)
Ø தமிழக எழுத்தாளர்களில் மனிதம் தோய்ந்த எழுத்தாளர் ஜெயகாந்தன். அவரது காந்தத் தன்மை உடைய எழுத்தை நினைவூட்டும் வகையில் அவரது படைப்புகளில் இருந்து சில மணிகளைத் தொகுத்து ஜெயகாந்தனின் நினைவு இதழாக இப்பாடத்தில் காணவிருக்கிறோம்.என்ற கருத்தைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், , கரும்பலகை,கல்வியிற் சிறந்த பெண்களின் புகைப்படங்கள் முதலியன.
பாடப்பொருள் சுருக்கம்:
ஜெயகாந்தன் -நினைவு இதழ்
@ படைப்பாளர் ஜெயகாந்தன் அவர்கள் பல வெளிநாட்டு விருதுகள் உட்பட இந்தியாவின் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
@ படைப்புச் செம்மை காரணமாக அவரது பல படைப்புகள் திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன.
@ அவரது எழுத்துப் பணி எதை நோக்கியது என்பதை விளக்க அவரே சில காரணங்களைக் கூறுகிறார்.பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் ஜெயகாந்தன் அவர்களைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.
”தர்க்கத்திற்கு அப்பால்” என்ற அவருடைய சிறுகதையானது அவரது ஆகச் சிறந்த படைப்புத் திறமைக்குப் பெரிய சான்றாகும்.
ஆசிரியர் செயல்பாடு:
§ தர்க்கத்திற்கு அப்பால் என்ற ஜெயகாந்தனின் சிறுகதையைக் கூறி, அவரது படைப்பாற்றல் திறத்தை மாணவர்க்கு உணர்த்துதல்
§ விருது பெற்ற ஜெயகாந்தனின் படைப்புகள்,திரைப்படமாக்கப் பட்ட படைப்புகள்,அவர் பெற்ற விருதுகள் உள்ளிட்டவற்றை ஆசிரியர் பட்டியலிட்டு விளக்குதல்
மாணவர் செயல்பாடு:
Ø படைப்புத்திறன் இச்சமூகத்திற்கு மிகவும் அவசியம் என்பதை மாணவர்கள் உணர்ந்து கொள்ளுதல்
Ø சிறந்த படைப்பாளி சமூகத்தின் நலனுக்காக எவ்வாறெல்லாம் சிந்திப்பார் ?என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளுதல்.
கருத்துரு வரைபடம்:
ஜெயகாந்தம்-நினைவு இதழ்
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.
மதிப்பீடு:
Ø ஜெயகாந்தனின் எந்த படைப்புக்கு குடியரசுத் தலைவர் விருது கிடைத்தது?
Ø இமயத்துக்கு அப்பால் என்ற படைப்புக்கு கிடைத்த விருது என்ன?
Ø படைப்பாளர் அசோகமித்திரன் ஜெயகாந்தனைப் பற்றி கூறுவது என்ன?
Ø சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?
தொடர்பணி:
# ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகளை சிறுகதை, புதினம் என்று இலக்கியவகை வாயிலாகப் பிரித்து அட்டவணை தயார் செய்யச்சொல்லுதல்.