வகுப்பு:6.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: உரைநடை உலகம் (தமிழ்நாட்டில் காந்தி)
நாள் : பிப்ரவரி இரண்டாம் வாரம்
(07-02-2022 முதல் 12-02-2022 வரை)
1.அறிமுகம்:
இந்திய நாட்டின் விடுதலைக்கு உழைத்த சில முக்கிய தலைவர்கள் பெயர்களை குறிப்பிடுக என்று மாணவர்களிடம் கூறி, அவர்கள் கூறும் விடைகளுக்கு ஆசிரியர் விளக்கமளித்து,அதன் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்
2.படித்தல்:
உரைநடைப் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப் படித்தல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
3.மனவரைபடம்:
4.தொகுத்தலும்,வழங்குதலும்:
காந்தியடிகள் இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர் என்பதை நாடு நன்கு அறியும். பெண்கள் முன்னேற்றம் சமுதாய மறுமலர்ச்சி தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றிற்கும் அவர் பாடுபட்டார். எளிமையை ஓர் அறமாகப் போற்றினார். இந்தியாவில் அவர் காலடி படாத இடமே இல்லை. தமிழ் நாட்டின் மீதும் தமிழ் மொழியின் மீதும் காந்தியடிகள் அளவற்ற பற்று கொண்டிருந்தார்.
காந்தியடிகளுக்குத் தமிழ் நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு உண்டு. அவர் பலமுறை தமிழ்நாட்டில் பயணம் செய்துள்ளார். அப்போது சுவையான பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்த போதெல்லாம் அவரை சந்தித்த மிகச்சிறப்பான நபர்கள் மகாகவி பாரதியார், ராஜாஜி, உ.வே.சா முதலியோர் ஆவர்.
5.வலுவூட்டுதல்:
காந்தியடிகள் எதற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்தார்? என்ற வினாவை கேட்டு கற்றலுக்கு வலுவூட்டுதல்.
6.மதிப்பீடு:
மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.
1919 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் எது?
மகாகவி என்று அழைக்கப்படுபவர் யார்?
காந்தியடிகள் காரைக்குடிக்கு வந்தபோது எங்கு தங்கினார்?
சென்னையில் இலக்கிய மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
7. குறைதீர் கற்றல்:
கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,
கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்
8.எழுதுதல்:
மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.
மனப்பாட பாடலை படித்து வீட்டுத் தேர்வு எழுதி வரச் செய்தல்
9.தொடர்பணி:
காந்தியடிகள் நடத்திய அறவழிப் போராட்டங்களில் பெயர்களைத் தொகுத்து வரச் செய்தல்
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:
படவீழ்த்தி
கணிப்பொறி
பாடப்புத்தகம்
கரும்பலகை