7 TH STD TAMIL MODEL LESSON PLAN(FEBRUARY 2 ND WEEK)

 

வகுப்பு: 7.ஆம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: விரிவானம் (திருநெல்வேலிச் சீமையும்,கவிகளும்)

நாள் : பிப்ரவரி இரண்டாம் வாரம்

             (07-02-2022 முதல் 12-02-2022 வரை)


1.அறிமுகம்:

  • குற்றால அருவி எந்த மாவட்டத்தில் உள்ளது  என்று உங்களுக்குத் தெரியுமா? என்ற வினாவை மாணவர்களும் கேட்டு, திருநெல்வேலியின் சில சிறப்புகளைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

2.படித்தல்:       

           விரிவானம்பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே  விரிவானப் பகுதியைப்  படித்தல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

3.மனவரைபடம்:

திருநெல்வேலிச் சீமையும்,கவிகளும்



4.தொகுத்தலும்,வழங்குதலும்:

  • வானத்தில் விளைந்த சுடர்கள்போல இயற்கையில் விளைந்த கவிகளைத்தான் கவிகள் என்று சொல்ல வேண்டும். மின்மினிப் பூச்சியையும் ‘காக்காப்’ பொன்னையும் பார்த்து ஏமாந்து போகக் கூடாது. திருநெல்வேலி மாவட்டம் நெடுகிலும் உண்மையான கவிஞர்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்களுடைய பாடல்களை யும் மக்கள் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.

  • அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் மகாகவி பாரதியார், கவிமணி, கடிகைமுத்துப் புலவர், சொக்கநாதப்புலவர், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், முத்தொள்ளாயிரம் ஆசிரிய,ர் சீதக்காதி ஆகியோர் ஆவர்

5.வலுவூட்டுதல்:

  • மாணவர்களுக்குப் பிடித்த பாரதியார் பாடல் எது?என்ற வினாவை கேட்டும் கவிமணி என்று அழைக்கப்படுபவர் யார்? என்ற வினாவைக் கேட்டும்  மாணவர்கள் கூறும் விடைகளை வைத்து, சில விளக்கங்களைக் கொடுத்து கற்றலுக்கு வலுவூட்டுதல்.

6.மதிப்பீடு:

      மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.

  1.  எட்டையபுரத்தில் பிறந்தவர் யார்?

  2.  தேசிக விநாயகனார் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

  3.   குற்றாலம் தற்போது எந்த மாவட்டத்தில் உள்ளது?

  4.  காயல்பட்டினத்தில் வாழ்ந்த வள்ளல் பெயர் என்ன?

  5.  திருச்செந்தூர் முருகனைப் புகழ்ந்து பாடிய புலவர் யார்?

7. குறைதீர் கற்றல்:

  • கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.

  • படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.

  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.

  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,

கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல் 

8.எழுதுதல்:   

  • மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.

  • மனப்பாட பாடலை படித்து வீட்டுத் தேர்வு எழுதி வரச் செய்தல்

9.தொடர்பணி:

  •  திருநெல்வேலியில் வாழ்ந்த பழங்குடிகளின் பெயர்களையும் அவர்கள் பிறந்த ஊர்களையும் தொகுத்து வரை செய்தல்.

  கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:

  •  படவீழ்த்தி

  • கணிப்பொறி

  • பாடப்புத்தகம்

  • கரும்பலகை  


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை