வகுப்பு: 9.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: உரைநடை உலகம்-இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர் பங்கு
கவிதைப்பேழை -சீவக சிந்தாமணி
நாள்: 07-02-2022 TO 12-02-22வரை (பிப்ரவரி இரண்டாம் வாரம்)
பொது நோக்கம்:
விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய தொண்டினை உணர்ந்து நாட்டுணர்வு பெறுதல்.
இலக்கியங்கள் காட்டும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்.
சிறப்பு நோக்கம்:
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுடன் இணைந்து இந்திய தேசிய இராணுவப் படையில் போராடிய தமிழர்களின் பங்கு வியந்து போற்றத்தக்கது என்பதை அறிதல்.
இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.
காப்பியங்கள் தரும் வருணனைச் சுவையைச் சுவைத்து மகிழ்தல்.
பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)
Ø ராணுவ வீரர்களை யாருக்கெல்லாம் பிடிக்கும் என்ற வினாவை கேட்டு மாணவர்களை விடை கூறச் செய்து அதிலிருந்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
Ø மாணவர்களை அவர்களது ஊரில் உள்ள இயற்கைக் காட்சிகளைக் பற்றிக் கூறச் சொல்லி, அவர்கள் கூறும் விடைகளுடன் சீவக சிந்தாமணியில் வரும் இயற்கைக் காட்சி வர்ணனைகளை ஒப்பிட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை முதலியன.
பாடப்பொருள் சுருக்கம்:
இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு:
இந்திய தேசிய இராணுவம் இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் நம் தமிழர்கள். விடுதலைப் போராட்டத்தை ஒளி மங்காமல் பாதுகாத்தவர்களுள் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுடன் இணைந்து இந்திய தேசிய இராணுவப் படையில் போராடிய தமிழர்களின் பங்கு வியந்து போற்றத்தக்கது.
நேதாஜி தலைமையில் இருந்த இந்திய தேசிய இராணுவப்படை பிரித்தானிய அரசை எதிர்த்தது. அப்போது தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர் பசும்பொன் முத்துராமலிங்கனார். இந்திய தேசிய இராணுவப் படைத் தலைவராக இருந்த தில்லான், ”இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்றார்.
சீவக சிந்தாமணி:
சீவக சிந்தாமணி ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. இது விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியமாகும். ‘இலம்பகம்’ என்ற உட்பிரிவுகளைக் கொண்டது. 13 இலம்பகங்களைக் கொண்டுள்ள இந்நூல், ’மணநூல்’ எனவும் அழைக்கப்படுகிறது. நாமகள் இலம்பகத்தில் நாட்டுவளம் என்னும் பகுதி பாடமாக அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் திருத்தக்கதேவர்.
ஆசிரியர் செயல்பாடு:
§ இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர் ஆற்றிய பங்கினைத் தகுந்த படங்கள் மூலமும் காணொளிகள் மூலம் ஆசிரியர் விளக்க முற்படுதல்.
§ முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பங்கு இந்த அளவுக்கு இந்திய ராணுவத்தை உருவாக்குவதில் இருந்தது என்பதை விளக்குதல்.
§ சீவகசிந்தாமணியில் குறிப்பிடப்படும் இயற்கை வளங்களை, நிகழ்கால இயற்கை வளங்கள் ஒன்று ஒப்பிட்டு ஆசிரியர் பாடத்தை விளக்குதல்.
§ இலக்கணக்குறிப்பு,பகுபத உறுப்பிலக்கணம் உள்ளிட்டவற்றைத் தெளிவாக விளக்குதல்.
மாணவர் செயல்பாடு:
Ø இந்திய தேசிய ராணுவம் உருவாவதிலும் அது செயல்பட்டதிலும் தமிழர் எத்தகைய பங்காற்றினர் என்பதைப் புரிந்து கொள்ளுதல்.
Ø இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.
கருத்துரு வரைபடம்
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.
மதிப்பீடு:
Ø இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியவர் யார்?
Ø இரண்டாம் உலகப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
Ø இந்திய தேசிய ராணுவத்துக்காக தமிழகத்தில் இளைஞர்களைத் திரட்டியவர் யார்?
Ø இந்திய தேசிய ராணுவத்தில் மகளிர் படைக்குத் தலைமை தாங்கியவர் யார்
Ø ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?
Ø சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?
தொடர்பணி:
· பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதிவரச்செய்தல்.