8 TH STD TAMIL MODEL LESSON PLAN(FEBRUARY 2 ND WEEK)

 

வகுப்பு: 8.ஆம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: கவிதைப்பேழை -ஓடை

                  கற்கண்டு  - வினைமுற்று

நாள் :     பிப்ரவரி( இரண்டாம் வாரம்)

             (07-02-2022 முதல் 11-02-2022 வரை)


1.அறிமுகம்:

  • மனித வாழ்வு இயற்கையோடு இயைந்தது. கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப் பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடையும், பாயும் ஆறும், கத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை. அவ்வா று மனத்திற்கு இன்பமூட்டும் கவிதை ஒன்றைக் கற்போம் வாருங்கள்

  • எழுவாய் செய்யும் செயலைக்குறிப்பது வினைச்சொல் என்று நீங்கள் அறிவீர்கள். முடிவு பெற்ற வினைச்சொல் பற்றி உங்களுக்கு தெரியுமா?

      மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

2.படித்தல்:

                   விரிவானம் மற்றும் இலக்கண வரையறைகளை ஆசிரியர், சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே விரிவானம் மற்றும் இலக்கண வரையறைகளைப் படித்துக்காட்டுதல். 

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

3.மனவரைபடம்:


வினைமுற்று



4.தொகுத்தலும்,வழங்குதலும்:

    ஓடை:

  • கவிஞர் வாணிதாசன்  தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுகிறார்.

  • இவரது இயற்பெயர் எத்திராசலு.இவர் பாரதிதாசனின் மாணவர்.

  • பல மொழிகளில் வல்லவரான இவர் கவிஞரேறு பாவலர்மணி என்று புகழப்படுகிறார்.

  • இவருக்குப் பிரென்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது.

  • ஓடை எனும் பாடல் தொடுவானம் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

வினைமுற்று

  • ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் ஆகும்.

  • வினைச்சொல் வினைமுற்று, எச்சவினை என இருவகைப்படும்.

  • ஒரு செயல் முடிவு பெற்றதைக் குறிப்பது வினைமுற்று ஆகும்.இது தெரிவிலை, குறிப்பு என இருவகைப்படும்.

  •  ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று ஏவல் வினைமுற்று.

  • வாழ்த்துதல்,வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும்

6.மதிப்பீடு:

      மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.

  • ஓடை என்ற பாடலை இயற்றியவர் யார்?

  • எ த்திராசலுவின் புனைபெயர் என்ன?

  • வினைச்சொல் என்றால் என்ன?

  • வினைமுற்று என்றால் என்ன?

  • குறிப்பு வினைமுற்றிற்குச் சான்று தருக.

7. குறைதீர் கற்றல்:

  • கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.

  • படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.

  • எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.

  • பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,

கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல் 

8.எழுதுதல்:   

  • மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.

  • மனப்பாட பாடலை படித்து வீட்டுத் தேர்வு எழுதி வரச் செய்தல்.

9.தொடர்பணி:

  • மலை ,அருவி, ஓடை, மரங்கள், வயல்கள் ஆகியன இடம் பெறுமாறு ஒரு இயற்கைக் காட்சியை வரைந்து வரச் செய்தல்.

  • வினைச்சொல் மற்றும் வினைமுற்று வகைகளுக்குச் சான்றுகளை எழுதி வரச்செய்தல்.

 கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:

  •  படவீழ்த்தி

  • கணிப்பொறி

  • பாடப்புத்தகம்

  • கரும்பலகை

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை