மனப்பாடப்பாடல்கள்-இசைக்காணொளி
வகுப்பு(9 முதல் 12)
அன்பார்ந்த தமிழாசிரியப்பெருமக்களுக்கும்,மாணவச்செல்வங்களுக்கும் வணக்கம்.நீண்ட விடுமுறைக்குப் பிறகு,பள்ளிகள் தொடங்கப்பட்டு, மாணவர்களுக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.அனைத்து வகுப்புகளுக்குமே தமிழ்ப்பாடத்தில் மனப்பாடப்பகுதி பாடல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.ஆனால் சிற்சில மாணவர்கள் அம்மனப்பாடப் பாடல்களை மனனம் செய்வதில் சிரமப்படுகின்றனர்.
மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு வகுப்பு 9 முதல் 12 வரையிலான தமிழ் மனப்பாடப்பாடல்கள் இனிய இசை சேர்க்கப்பட்டு, குரல்வளம் மிக்க ஆசிரியர்களால் பாடப்பட்டு,காணொளி வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன.இசைக்காணொளி வடிவில் உள்ள பாடல்களை ஓரிரு முறை கவனித்தாலே மனப்பாடப்பாடல்களை எளிதில் மனனம் செய்து விடலாம்.
அனைத்து மனப்பாடப்பாடல் காணொளிகளும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு,அவற்றுக்கான இணைப்புகள் தனித்தனி வகுப்புகளுக்கு தனித்தனி PDF ல் இணைக்கப்பட்டுள்ளன.தேவையான பாடலுக்கான தலைப்பைத் தொட்டவுடன் மனப்பாடப் பாடலுக்கான இசைக்காணொளியைக் காணலாம்.
மனப்பாடப்பாடல்கள் இணைப்பு👇👇
10.ஆம் வகுப்பு-தமிழ்👇👇
11.ஆம் வகுப்பு-தமிழ்👇👇
12.ஆம் வகுப்பு-தமிழ்👇👇
9.ஆம் வகுப்பு-தமிழ்👇👇