NMMS EXAM(2021-2022)
ஆசிரியப் பெருமக்களுக்கும் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைக்கவிருக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம்.
எந்த ஒரு போட்டித் தேர்வு எழுதுவது தயாராகும் போதும் அதைப் பற்றிய முழு அறிவு பெற்றிருத்தல் அவசியம். எனவே, தேசிய வருவாய்வழி மற்றும் திறனறி தேர்விற்குத் (NMMS) தயாராகும் முன்னர் தேர்வைப் பற்றிய முழு விவரங்களையும் அதைச்சார்ந்த கற்றல் கட்டடங்களையும் மாதிரி வினாத்தாட்களையும் இப்பதிவில் பெற இருக்கிறோம்.
தேர்வின் பகுதிகள்:
NMMS தேர்வானது இரு பகுதிகளை (தேர்வுகளை) உள்ளடக்கியது
பகுதி 1 ( மனத்திறன் தேர்வு-MAT)
பகுதி 2 ( படிப்பறிவுத் திறன் தேர்வு -SAT)
பகுதி 1 ( மனத்திறன் தேர்வு-MAT)
மனத்திறன் தேர்வானது மாணவர்களின் பகுத்தறியும் திறன், காரணம் அறியும் திறன், சிந்திக்கும் திறன், முப்பரிமாண வெளியில் காட்சிப்படுத்தி கண்டறியும் திறன், எண்ணியல் திறன் போன்றவற்றை சோதித்து அறிவது அவசியம்.
மனத்திறன் தேர்வில் எண் தொடர்கள், எழுத்து தொடர்கள், ஆங்கில அகராதி படி எழுத்துக்களை வரிசைப்படுத்துதல், தனித்த எண்ணைக் கண்டறிதல், படங்கள், ஒத்த உருவங்கள், கண்ணாடி பிம்பங்கள், போன்ற வினாக்கள் கேட்கப் பட்டிருக்கும்.
மனத்திறன் தேர்வில் 90 வினாக்கள் கேட்கப்படும். மனத்திறன் தேர்வு க்கு 90 நிமிடங்கள் ஒதுக்கப்படும். தவறான விடைக்கு எதிர் மதிப்பெண் (NEGATIVE) கிடையாது.
பகுதி 2 ( படிப்பறிவுத் திறன் தேர்வு -SAT)
படிப்பறிவுத் திறன் தேர்வானது மாணவர்கள் பாடப் பொருளில் பெற்றுள்ள அறிவைச் சோதிப்பதாக அமையும்.
இத்தேர்வில் ஏழாம் வகுப்பு அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களில் (மூன்று பருவங்கள்) இருந்தும்,எட்டாம் வகுப்பு கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் (முதல் இரு பருவங்கள்) இருந்தும் வினாக்கள் கேட்கப்படும்.
படிப்பறிவு திறன் தேர்விற்கும் 90 வினாக்கள் கேட்கப்படும். 90 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
மதிப்பெண் பங்கீடு:
கணக்கு- 20 மதிப்பெண்கள்
அறிவியல் - 35 மதிப்பெண்கள்
சமூக அறிவியல் -35 மதிப்பெண்கள்