10 TH STD TAMIL ONLINE REVISION EXAM (UNIT -6) REDUCED SYLLABUS

 இயல்-6 வினாக்கள்

1)குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்

அ)முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்  ஆ)குறிஞ்சி, பாலை,நெய்தல் நிலங்கள் 

இ)குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள் ஈ)மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

2)கோசல நாட்டில் குறையில்லாத காரணம் என்ன?

அ)நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்ஆ)ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ)அரசன் கொடுங்கோலாட்சி புரிவதால் ஈ)அங்கு வறுமை இல்லாததால்

3)ஆறு ஒரு ஓவியமாக விரிந்து, உயிரெனக் காட்சியளிப்பதாக உணர்வது------

அ) ஓவியக்கலை  ஆ) அழகுணர்ச்சி  இ)மெய்யுணரச்சி  ஈ)நுண்கலை 

4)கொடிவேலி உடைய கமுகந்தோட்டங்கள்,நெல்வயல்களில் பரவி பாய்வது

அ)காவேரி ஆறு  ஆ)சரயு ஆறு  இ)பாலாறு  ஈ)வைகை ஆறு

5)கீழ்கண்டவற்றுள் கொடிவகையைச் சார்ந்தது எது?

அ)செண்பகம் ஆ)கமுகு  இ)குருக்கத்தி   ஈ)கொன்றை 

6) ஓசை தரும் இன்பம் உவமை இல்லா இன்பமடா - எனப் பாடியவர்

அ)பாரதிதாசன்  ஆ)பாரதியார்  இ)கவிமணி  ஈ)நாமக்கல் கவிஞர்

7)கம்பன் இசைத்த கவி எல்லாம் நான் என்று பெருமைப் படுபவர்

அ)பாரதியார்  ஆ)பாரதிதாசன் இ)கவிமணி  ஈ)நாமக்கல் கவிஞர் 

8)மையோ? மரகதமோ? மறிகடலோ? மழை முகிலோ? -  இவ்வடியில் இடம்பெறும் நயம்

அ)எதுகை நயம்  ஆ)மோனை நயம்  இ)இயைபு நயம் ஈ)முரண் நயம்

9)”ஏழைமை   வேடன் இறந்திலன்என்று எனை ஏசாரோ? இவ்வடியில் வேடன் என்பது

அ)இராமன் ஆ)இலக்குவன்  இ)துரியோதனன்  ஈ)குகன் 

10)நீர்நிலைகள் எழுப்பும் திரைச்சீலைகள் என்று கம்பர் குறிப்பிடுவது

அ)மீன்கள்  ஆ)அலைகள்  இ)தாவரங்கள்  ஈ)கதிரொளி 

11)வண்டுகளின் ரீங்காரத்திற்கு கூறப்பட்ட உண்மை

அ)மகரயாழ்  ஆ)விளரியாழ்   இ)முல்லை யாழ்  ஈ)பாலையாழ்

12)உறங்குகின்ற கும்பகன்ன  - இத்தொடரில் இடம் பெற்ற தொகாநிலைத் தொடர்கள் முறையே

அ)விளித்தொடர்,பெயரெச்சத் தொடர்  ஆ)எழுவாய் தொடர்,விளித்தொடர் 

இ)பெயரெச்சத் தொடர்,விளித்தொடர்  ஈ)வினையெச்சத் தொடர்,பெயரெச்சத் தொடர்

13)கம்பர் இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி……….எனப் பெயரிட்டார்

அ) பெரியபுராணம்  ஆ)இராமாவதாரம் இ) இராமாயணம் ஈ)இராம காதை 

14)கம்பராமாயணம்--------- காண்டங்களை உடையது

அ)நான்கு   ஆ)ஏழு   இ)எட்டு   ஈ)ஆறு

15)கம்பர் பிறந்த ஊர்

அ)மயிலாடுதுறை  ஆ)திருவாரூர்  இ)தேரழுந்தூர்  ஈ)திருக்கோவிலூர் 

16)கம்பரை ஆதரித்தவர்

அ)சீதக்காதி  ஆ)குமண வள்ளல்  இ)சடையப்ப வள்ளல்  ஈ)பாண்டித்துரை 

17)பொருள் என்பது----------

அ)ஆயுதம்  ஆ)ஒழுக்க முறை  இ)கடையில் இருப்பது  ஈ)பயன்படுத்துவது

18) தமிழர் வாழ்வியலை--------- , ------------  என வகுத்தார்கள்

அ)அகம், புறம்  ஆ)இன்பம், துன்பம்   இ)உயர்வு, தாழ்வு  ஈ)நிகழ்வு, எதிர்வு

19) அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளைக் கூறுவது

அ)குடும்பம் ஆ) புறத்திணை    இ) அகத்திணை  ஈ) இல்லறம்

20)நிலமும் பொழுதும்----------- எனப்படும்.

அ)உரிப்பொருள்  ஆ)கருப்பொருள்  இ)திறைப்பொருள்  ஈ)முதற்பொருள்

21)பொழுதின் இரு வகைகள்---------,-----------

அ)சிறுபொழுது,பெரும் பொழுது ஆ)காலை,மாலைஇ)இரவு,பகல்  ஈ)அந்தி,சந்தி 

22)ஓராண்டின் ஆறு கூறுகளை---------- எனவும், நாளின் ஆறு கூறுகளை-------- எனவும் அழைப்பர்

அ)சிறுபொழுது,பெரும்பொழுது  ஆ)பெரும்பொழுது,சிறுபொழுது

இ)மாதம், வாரம்      ஈ) வாரம்,மாதம்

23)வயலும் வயல் சார்ந்த இடமும்---------

அ)குறிஞ்சி ஆ)முல்லை   இ)மருதம்    ஈ)நெய்தல்

24) பொருத்துக

      அ) கார்காலம்            - 1. மாசி, பங்குனி

      ஆ) குளிர்காலம்          -  2 .மார்கழி, தை

      இ) முன்பனிக்காலம்     -  3. ஐப்பசி, கார்த்திகை

      ஈ) பின்பனிக்காலம்      -  4. ஆவணி, புரட்டாசி

அ)4 3 2 1      ஆ) 3 4 1 2    இ)4 2 3 1     ஈ)3 4 2 1

25) சித்திரை, வைகாசி  ஆகிய மாதங்கள் இரண்டும்---------- காலத்துக்குரியன

அ)குளிர்காலம்   ஆ)முன்பனிக்காலம் இ)முதுவேனில்   ஈ)இளவேனில்

26)பிற்பகல் 2 மணி முதல்  6 மணி வரை 6 மணி வரை உள்ள சிறுபொழுது சிறுபொழுது

அ)வைகறை  ஆ)எற்பாடு   இ)மாலை   ஈ)யாமம்

27)ஆறு பெரும் பொழுதுகளையும் உடைய திணைகள்

அ)குறிஞ்சி ,மருதம்  ஆ)மருதம் ,பாலை இ)மருதம்,நெய்தல்  ஈ)பாலை,குறிஞ்சி

28)நெய்தல் நிலத்திற்குரிய சிறுபொழுது

அ)ஏற்பாடு   ஆ)காலை    இ)மாலை    ஈ)வைகறை

29)குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும்பொழுதுகள்

அ)ஆறும் ஆ)குளிர்காலம்,முன்பனிக்காலம்  இ)கார்காலம் ஈ)இளவேனில்,முதுவேனில்

30)குறிஞ்சி,மருதம்,நெய்தல்  ஆகிய நிலங்களின் தெய்வங்கள் முறையே

அ)வருணன்,இந்திரன்,முருகன்  ஆ)இந்திரன்,முருகன்,கொற்றவை 

இ)முருகன்,திருமால்,கொற்றவை  ஈ)முருகன்,இந்திரன்,வருணன் 

31)முல்லை நிலத்துக்குரிய உணவு அ)மலைநெல்,தினை  ஆ)வரகு,சாமை  இ)செந்நெல்,வெண்ணெல்  ஈ)மீன்


TO ATTEND ONLINE EXAM

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை