ஆண்டு இறுதித் தேர்வு-மாதிரி வினாத்தாள்
9.ஆம் வகுப்பு தமிழ் 100 மதிப்பெண்கள்
பகுதி-1(மதிப்பெண்கள்:15)
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
1)
தமிழ் விடு தூது ……………. என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
அ. தொடர்நிலைச் செய்யுள் ஆ.
புதுக்கவிதை இ . சிற்றிலக்கியம் ஈ. தனிப்பாடல்
2)தெற்கு
ஆசியாவின் சாக்ரடீஸ் யார்?
அ)அம்பேத்கர் ஆ)பெரியார் இ)அயோத்திதாசர் ஈ)திராவிடமணி
3)’பொதுவர்கள் பொ லிஉறப் போ ர்அடித்திடும்’ நிலப்பகுதி _______
அ) குறிஞ்சி ஆ) நெய்தல் இ) முல்லை ஈ)
பாலை
4)’அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ -யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?
அ) கண்ணனின் கனவில் ஆண்டாள்
புகுந்தாள் ஆ)தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
இ) ஆண்டாளின் கனவில் தோ ழி புகுந்தாள் ஈ)
ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்
5) ஐந்து சால்புகளில்
இரண்டு
அ)வானமும் நாணமும் ஆ)நாணமும்
இணக்கமும் இ)இணக்கமும் சுணக்கமும் ஈ)இணக்கமும் பிணக்கமும்
6) இந்திய தேசிய இரா
ணுவத்தை ..........இன் தலைமையில் ..........உருவாக்கினர்.
அ)சுபாஷ் சந்திரபோஸ், இந்தியர் ஆ)சுபாஷ் சந்திரபோஸ், ஜப்பானியர்
இ)மோகன்சிங், ஜப்பானியர் ஈ)மோகன்சிங், இந்தியர்
7) இளங்கமுகு, செய்கோலம் – இலக்கணக்குறிப்புத் தருக.
அ) உருவகத்தொட ர், வினைத்தொ கை ஆ) பண் புத்தொ கை, வினைத்தொ கை
இ) வினைத்தொ கை, பண்புத்தொ கை ஈ) பண்புத்தொ கை, உருவகத்தொடர்
8)பாரதிதாசனின் --------- நாடக நூலுக்குச் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.
அ)குடும்பவிளக்கு ஆ)இருண்டவீடு இ_பிசிராந்தையார் ஈ)கண்ணன்பாட்டு
9) ஒன்றறிவதுவே
உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே - இவ்வடிகளில் அதனொ டு என்பது
எதைக் குறிக்கிறது?
அ) நுகர்தல் ஆ) தொடு உணர்வு இ) கேட்டல்
ஈ) காணல்
10) தீரா
இடும்பை தருவது எது?
அ. ஆராயாமை, ஐயப்படுதல் ஆ.குணம், குற்றம் இ.பெருமை, சிறுமை ஈ.
நாடாமை, பேணாமை
11) மல்லல் மூதூர்
வயவேந்தே- கோடிட்ட சொல் லின் பொருள் என்ன?
அ) மறுமை ஆ) பூவரசு மரம் இ) வளம் ஈ)
பெரிய
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
நீரின்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்
கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
12.இப்பாடல்
இடம்பெற்ற நூல்
அ.பெரியபுராணம் ஆ.புறநானூறு
இ.தமிழ்விடு தூது ஈ.தமிழோவியம்
13.இப்பாடலை
இயற்றியவர்
அ.நன்னாகனார் ஆ.ஔவையார்
இ.மருதனார் ஈ.குடபுலவியனார்
14.யாக்கை
என்பதன் பொருள்
அ.உடல்
ஆ.உலகம் இ.காற்று ஈ.வானம்
15.அமையா என்பதன் இலக்கணக்குறிப்பு
அ.வினையெச்சம்
ஆ.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் இ.பெயரெச்சம் ஈ.முற்றெச்சம்
பகுதி-2(மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய
விடையளிக்க:(21 கட்டாயவினா)
16)விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:
அ)திருவள்ளுவர்
திருக்குறளை இயற்றினார்.
ஆ)சதம் என்ற
சொல்லின் பொருள் நூறு என்பதாகும்
17) தமிழோவியம்
கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.
18)தென் திராவிட மொழிகள்
நான்கனை எழுதுக.
19)நிலையான
வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?
20)சாரதா சட்டம் எதற்காக
இயற்றப் பட்டது?
21)விடல் என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு-2 5X2=10
ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய
விடையளிக்க:
22)செய்வினையைச்
செயப்பாட்டு வினையாக மாற்றும் துணைவினை இரண்டை எடுத்துக்காட்டுடன்
எழுதுக.
23)வீணையோடு வந்தாள்,கிளியே
பேசு-தொடரின் வகையைச் சுட்டுக.
24)மொழிபெயர்க்க: அ. LINGUISTICS, ஆ.PHONETICS
25).அகராதியில் காண்க : அ.இயவை
ஆ.சிட்டம்
26) ஒரு
தொடரில் இருவினைகளை அமைத்து எழுதுக. - குவித்து; சேர்ந்து - சேர்த்த
27) உவமைத்
தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.
மலர்விழி வீணைவாசித்தாள் ;
கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்
28) பொருத்தமான
இடங்களில் அடைமொழியிட்டு, சொற்றொடரை விரிவாக்குக.
புத்தகம் படிக்கலாம் (
நல்ல, ஆழ்ந்து, நாளும், தேர்ந்து, மகிழ்ந்து, உணர்ந்து).
பகுதி-3(மதிப்பெண்:18)
பிரிவு-1 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
29) மூன்று
என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு
இடம்பெற்றுள்ளது?
30)குறிப்பு வரைக: டோக்கியோ
கேடட்ஸ்
31)
பத்தியைப் படித்துப் பதில் தருக:-
பருப்பொருள்கள்
சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்து
சென்றன.புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது.
பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த
ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி
வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக
ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில்
மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.
1.உயிர்கள்
வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
2.பெய்மழை,பெய்த மழை-இலக்கணக்குறிப்பு தருக.
3.இப்பத்தி
உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
பிரிவு-2 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)
32)புதுக்கோலம் புனைந்து
தமிழ் வளர்ப்பாய்-உங்கள் பங்கினைக் குறிப்பிடுக..
33'என் சம காலத் தோழர்களே' கவிதையில் கவிஞர்
விடுக்கும் வேண்டுகோள் யாது?
34)அ.ஒன்றறிவதுவே-
எனத்தொடங்கும் பாடலை அடி மாறாமல் எழுதுக
(அல்லது)
ஆ.கல்லிடை- எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக
பிரிவு-3 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
35)அலகிட்டு வாய்பாடு
எழுதுக:
அருளொடும் அன்பொடும்
வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்
36) பத்தியில் இடம்பெ ற்றுள்ள இடைச்சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
அ)பெண்ணடிமை போகவேண் டும்;
பெண், கல்வி பெறவேண்டும். பெண்கள் படித்தால்தான்
தம் சொந்தக் காலில் நிற்கலாம். பெண், கல்வி கற்றால் வீடும்
நாடும் முன்னேறும். சமுதாயத்தின் சரிபாதியான பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு.
37)உருவக அணியைச் சான்றுடன்
விளக்குக.
பகுதி-4(மதிப்பெண்:25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க:
38)அ)பெரிய புராணம் காட்டும்
திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக
(அல்லது)
ஆ) குடும்ப
விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல் விக்கான கருத்துகளை இன்றைய
சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.
39) அ. உங்கள் பள்ளி
நூலகத்திற்குத் தமிழ்- தமிழ் -ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப்
பதிவஞ்ச லில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக
(அல்லது)
ஆ. உங்களின்
நண்பர்,
பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தா ளர் எஸ். இராமகிருஷ்ணனின்,
"கால்முளைத்த கதை கள்" என்னும் நூல் குறித்த கருத்துகளைக்
கடிதமாக எழுதுக
40)அ)நயம் பாராட்டுக:-
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடிதொரு
கோல வெறிபடைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர்
வண்டு
பாடுவதும் வியப்போ? - பாரதியார்
(அல்லது)
ஆ) மொழிபெயர்க்க.
1. Strengthen
the body
2. Love your
Food
3. Thinking
is great
4. Walk like
a bull
5. Union is
Strength
6. Practice
what you have learnt
(- Putiya Athichoti by
Bharathiyar)
41) “மூட நம்பிக்கை”
எனும் தலைப்பில் கவிதை படைக்க
42)காட்சியைக்
கண்டு கவினுற எழுதுக.
பகுதி-5 (மதிப்பெண்:24)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க:
3X8=24
43)அ) திராவிட
மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக
இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க .
(அல்லது)
ஆ) இந்தியதேசிய இராணுவத்தின்
தூண்களாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் கட்டுரைவழி நிறுவுக.
44)அ)இந்திய விண்வெளித்துறை
பற்றிய செய்திகளை விவரிக்க
(அல்லது)
ஆ) ’தாய்மைக் கு வறட்சி இல்லை
’ என்னும் சிறுகதை யில் வரும் ஏழைத்தா யின் பாத்திரப் படைப்பை விளக்குக
45)அ.
நீங்கள் விரும்பிப் படித்த நூல் ஒன்றுக்கு மதிப்புரை எழுதுக
(அல்லது)
ஆ. பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.
PDF வடிவில் பதிவிறக்க👇👇