8 TH STD TAMIL ANNUAL EXAM ANSWER KEY-2022

 

முழு ஆண்டுத்தேர்வு விடைக்குறிப்புகள்

8.ஆம் வகுப்பு-தமிழ்

1.அ.வைப்பு

2.ஆ.நெடுந்தேர்

3.அ.பயிலுதல்

4.ஆ.இரட்டுற மொழிதல் அணி

5.இ.மூன்று

6.ஈ.அமராவதி

7.ஈ.கசடு+அற

8.இருந்து

9.இ.உவமைத்தொகை

10.ஆ.வனைதல்

11.இ.சுல்தான் அப்துல் காதிர்

12.ஆ.தந்தை பெரியார்

13.ஆ.கல்லாதவர்

14.இ.நல்வாழ்வுக்காக

15.இ.மதுரை

16.அ.இயலாத செயல்

17.இ.மழை

18.இ.தலை

19.அ.அலறும்

20.இ.வாணிதாசன்

21.  அ.வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!

         வாழிய வாழியவே!

         வான மளந்தது அனைத்தும் அளந்திடு

         வண்மொழி வாழியவே!

         ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

         இசைகொண்டு வாழியவே!

         எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

         என்றென்றும் வாழியவே!

ஆ.     ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! – கல்லில்

          உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்

                                                       (ஓடை ஆட…)

         பாட இந்த ஓடை எந்தப்

                பள்ளி சென்று பயின்ற தோ டி!

         ஏடு போதா இதன்கவிக் கார்

                 ஈடு செய்யப் போரா ரோடி!

                                                         (ஓடை ஆட…)

          நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி

                   நாட்டு மக்கள் வறுமை ஓட்டிக்

          கொஞ்சிக் குலவிக் கரையை வாட்டிக்

                   குளிர்ந்த புல்லுக்கு இன்பம் கூட்டி

                                                            (ஓடை ஆட…)

           நெஞ்சில் ஈரம் இல்லார் நாண

                     நீளு ழைப்பைக் கொடையைக் காட்டிச்

            செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்

                       சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்

                                                               (ஓடை ஆட…)

22.அ. கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்

           மற்றோர் அணிகலம் வேண்டாவாம்-முற்ற

           முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே

           அழகுக்கு அழகுசெய் வார்.

ஆ. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

      நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

      சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து

      நின்றே நிலைபெற நீர்நினைந் து உய்ம்மினே.

23.பண்புடையார்ப் பட்டுண்டுலகம் அதுவின்றேல்

      மண்புக்குள் மாய்வது மன்.

24.எல்லாப்பொருண்மை

25.பயிர் செழிப்பு,உணவு தருகிறது,உழைப்பைக்கொடையாகத்தருகிறது.

26.வேர்,பட்டை,பூ,கனி

27.முடிவடையாத வினைச்சொல் – பெயரெச்சம்,வினையெச்சம்

28.ஆல்,ஆன்,ஒடு,ஓடு

29.பெரிய முயற்சி

30.பீமாராவ் ராம்ஜி அம்பேதகர்

31.தேன்மலர்,தேன்கூடு,தேன்சிட்டு,குருவிக்கூடு

32.விவசாயம் என்பது ஆயிரங்காலத்துப்பயிர்,என் குடும்பம் வழையடி வாழையாக நெசவு செய்கிறது

33.ஆங்கிலேயர் ஆட்சி

34.நிலைமொழியும்,வருமொழியும் சேருவது-இயல்பு,விகாரம்.

35.பழங்குடியினர்,மொட்டு

36.4-வெண்பா,ஆசிரியப்பா,கலிப்பா,வஞ்சிப்பா

37.ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு,தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம்.

38. மூங்கிலைக் கொண்டு பலவகையான கைவினைப் பொருள்கள் செய்யப்ப டுகின்றன. இதோ பாருங்கள். மட்டக்கூடை, தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்ப ம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக்குழாய், கால்நடை களுக்கு மருந்து புகட்டும் குழாய் என எத்தனையோ பொருள்கள் மூங்கில் மூலம் உருவாகின்றன.

39. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை க் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.

            (எ.கா.) தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே

                         நாவினால் சுட்ட வடு.

       இத்திருக்குறளில் முதலில் நெருப்பு, கொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும்தன்மை உடையவை என்று கூறப்படுகிறது. பின்னர், நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்; உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு கூறப்படுகிறது. எனவே இது வேற்றுமை அணி ஆகும்.

40. பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும். கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்.

          நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும்.

41.மரம்+ கட்டில் – கெடுதல்(மர+கட்டில்)  தோன்றல்(மரக்கட்டில்)

42.சுடுமண் சிற்பங்கள்,மூங்கில்கலை,கோரைப்பாய்,பனையோலை,பிரம்புக்கலை

43.

§  இயற்கைச்சீற்றங்களின்போது உதவுதல்.

§  மூதாட்டிக்கும்,சிறுமிக்கும் காலணி வழங்கினார்

§  பள்ளிகளில் காலணி வழங்கும் திட்டம்

§  நன்கொடைகளை வாரி வழங்கினார்.

44.   காடு களில் வ ள ரும் மூங்கிலில் வண்டு க ள் துளையிடும். அவற்றின் வழியாகக் காற்று வீசும்போது இன்னிசை எழும்பும். இதனை க் கேட்டு மகிழ்ந்த நம் முன்னோர் அமைத்துக் கொண்டவையே குழல்கள். இதனை வேய்ங்குழல், புல்லாங்குழல் என்றும் அழைப்ப ர். குழல் ஏழு சுரங்களை உண்டாக்குவதற்கு உரிய ஏழு துளைகளை உடையதாக இருக்கும்.இது சுமார் இருபது விரல் நீளம் உடையதா க இருக்கும். மூங்கில் மட்டுமன்றிச் சந்தனம், செங்காலி, கருங்கா லி ஆகிய மரங்களா லும் குழல்கள் செய்யப்ப டுகின்றன. கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததா கச் சிலப்ப திகாரம் கூறுகிறது.

       மனிதர்கள் தொ டக்க காலத்தில் இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே பிற்காலத்தில் கொம்பு என்னும் இசைக்கருவிக்கு அடிப்படையாயிற்று. இக்காலத்தில் பித்தளை அல்லது வெண்கலத்தா ல் கொம்புகள் செய்யப்படுகின்ற ன. இதனை வேடர் வேட்டையின் போது ஊதுவர். கழனி மேடுகளில் காவல் புரிபவர்கள் விலங்குகள், கள்வரை விரட்டவும் மற்ற காவல்காரர்களை விழித்திருக்கச் செய்யவும் கொம்பினை ஊதுவர். ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், து த்தரி போன்ற பல வகையான கொம்புகள் இக்கா லத்தில் திருவிழா ஊர்வலங்களின்போது இசைக்கப்படுகின்றன.

45.அறிவு சால் ஔவையார்-நாடக வடிவில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

46. உழவு, கைத்தொழில், வணிகம் என்னும் மூன்றும் ஒரு நாட்டு மக்களின் நாகரிக நல்வாழ்விற்கு அடிப்படைகளா கும் என்பர். உள்நா ட்டு, வெளிநாட்டு வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். கடல் வணிகத்தில் சேரநாடு சிறப்புற்றிருந்தது. அதற்கு அந்நாட்டின் இயற்கை அமைப்பே காரணமாக அமைந்திருந்தது. சேரர்கள் வலிமை மிகுந்த கப்பல் படையை வைத்திருந்தனர். செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியால் அவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டா ன்.

        கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களைச் சேரமன்னர்கள் அடக்கினர். முசிறி சேரர்களின் சிறந்த துறைமுகங்களுள் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்ட ன. பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை ஆகியன இறக்குமதி செய்யப்பட்ட ன. இச்செய்தியை,

              மீனோடு நெற்குவைஇ

             மிசையம்பியின் மனைமறுக்குந்து .........

             கலந்தந்த பொற்பரிசம்

              கழித்தோணியால் கரைசேர்க்குந்து        – புறம் 343 : 1- 8    என்னும் பாடல் விளக்குகிறது.

      சேரநாட்டில் உள்நா ட்டு வணிகமும் நன்கு வளர்ச்சியுற்றிருந்தது. மக்கள் தத்தம் பொருள்களைத் தந்து தமக்குத் தேவையான பொருளைப் பெற்றனர். நெல்லே விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர். உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை,

              நெல்லும் உப்பும் நேரே ஊரீர்

              கொள்ளீ ரோவெனச் சேரிதொறும் நுவலும் –    (அக. 390)    என்னும் அகப்பாடல் மூலம் அறியலாம்.

47. ம னி த ன் த னக்கு எ தி ரே இ ல்லாத வ ர்களுக்கும் பி ன்னா ல் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான். அதற்காகப் பாறைகளிலும் குகை ச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும். தொடக்க காலத்தில்           எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ கு றி க்காம ல் பொருளின் ஓ வி ய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர். அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் ஓசையைக் குறிப்பதா யிற்று.

48.அ.நண்பனுக்குக் கடிதம் (அல்லது) நான் விரும்பும் கவிஞர்.

49.நோய்தடுப்பு நடவடிக்கைகள் (அல்லது) மக்களிடம் இருக்க வேண்டிய உயர்பண்புகள்.

PDF வடிவில் பதிவிறக்க👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை