8. ஆம் வகுப்பு தமிழ்- மாதிரி பாடக்குறிப்பு
வகுப்பு: 8.ஆம் வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: கவிதைப்பேழை(தமிழ்மொழி வாழ்த்து)
கவிதைப்பேழை(தமிழ்மொழி மரபு)
நாள் : ஜூன் 3 ஆவது வாரம்
(13-06-2022 முதல் 17-02022 வரை)
1.அறிமுகம்:
மொழி கருத்தை அறிவிக்கும் கருவி மட்டுமன்று; அது மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது; உணர்வுடன் கலந்தது.
தமிழர்கள் தம் தாய் மொழியாகிய தமிழை உயிராகக் கருதி போற்றி வந்துள்ளனர். புலவர் பலர் தமிழைப் பல வகையாக வாழ்த்திப் பாடியுள்ளனர் அத்தகைய பாடல் ஒன்றை இங்கு அறிவோம்.
மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
2.படித்தல்:
செய்யுள் பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும் சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்
ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே செய்யுள் மற்றும் உரைநடைப் பகுதியைப் படித்தல்.
தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.
எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.
4.தொகுத்தலும்,வழங்குதலும்:
தமிழ்மொழி வாழ்த்து:
நமது பாடப் பகுதியில் உள்ள தமிழ் மொழி வாழ்த்தை இயற்றியவர் பாரதியார் ஆவார்.
அவரது இயற்பெயர் சி.சுப்பிரமணியன் என்பதாகும்.
பாரதியார் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போரிற்கு வித்திட்டார்.
பாரதிதாசன் பாரதியாரை ”சிந்துக்குத் தந்தை” என்று போற்றுகிறார்.
பாரதியார், ”தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க!” , “ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ் மொழி வாழ்க!” என்று தமிழ் மொழியை வாழ்த்துகிறார்.
தமிழ் மொழி மரபு
இவ்வுலகம் நிலம், நீர், தீ, காற்று, வொனம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவவுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவை ஆகும்.
திணை,பால் வேறுபாடு அறிந்து இவ்வுலகப் பொருட்களைக் கூற வேண்டும்
6.மதிப்பீடு:
மாணவர்களிடம் பின்வரும் வினாக்களைக் கேட்டு அவர்களது கற்றல் அடைவுகளை மதிப்பீடு செய்தல்.
தமிழ்மொழி வாழ்த்தை இயற்றிவர் யார்?
பாரதியாரின் இயற்பெயர் என்ன?
வைப்பு என்ற சொல்லின் பொருள் என்ன?
தமிழ்மொழி மரபு பாடல் எந்நூலில் உள்ளது?
ஐம்பூதங்கள் யாவை?
7. குறைதீர் கற்றல்:
கற்றலில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிதல்.
படித்தல், எழுதுதல் உள்ளிட்ட அடிப்படைத் திறன்களில் குறைபாடு உடைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எளிமையான செயல் திட்டங்களை உருவாக்கி படங்களைக் கற்பித்தல்.
எழுத்துகளை இனங்கண்டு எழுத்துகளைக் கூட்டி படிக்கும் திறன் குறைந்த மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை எழுத்து பயிற்சி வழங்குதல்.
பாடக் கருத்துகளை மீண்டும் சுருங்கக் கூறி மீள்பார்வை செய்து,
கற்றலில் ஏற்படும் குறைபாட்டைக் களைதல்
8.எழுதுதல்:
மாணவர்களைப் பாடப் பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதி வரச் செய்தல்.
மனப்பாடப் பாடலை படித்து வீட்டுத் தேர்வு எழுதி வரச் செய்தல்.
9.தொடர்பணி:
தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை இசையுடன் பாடி மகிழச் செய்தல்.
பஞ்சபூதங்கள் தொடர்பான படத்தொகுப்பு உருவாக்குதல்
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள்:
படவீழ்த்தி
கணிப்பொறி
பாடப்புத்தகம்
கரும்பலகை