9 TH STD TAMIL MODEL LESSON PLAN -JUNE WEEK 3

 9 .ஆம் வகுப்பு 

தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு

நாள்        :  13-06-2022 முதல்  17-06-2022 வரை            மாதம்          ஜூன்          

வாரம்     :  மூன்றாம் வாரம்                                   வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                     பாடத்தலைப்பு     :  1. திராவிட மொழிக்குடும்பம்

                                                                                                                                          

கருபொருள்                            :

Ø  திராவிட மொழிகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்

 

உட்பொருள்                           :

Ø  திராவிட மொழிகள் எவ்வாறு வகைப்படுத்தப் படுகின்றன என்பதை  அறிதல்

@ திராவிட மொழிகளில் தமிழே சிறந்தது என அறிதல்

@உலக மொழிகளில் மூத்தது தமிழ் மொழி என அறிதல்


அறிமுகம்                               :

#பிற மொழிகளில் கலந்துள்ள தமிழ்ச்சொற்கள் சிலவற்றைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

Ø  மொழிகளின் காட்சிச்சாலை

Ø  மொழி ஆய்வு

Ø திராவிட மொழிக்குடும்பம்

Ø  திராவிட மொழிகளின் பொதுப்பண்புகள்

Ø  குறில் -நெடில் வேறுபாடு

Ø  பால் பாகுபாடு

Ø  வினைச்சொற்கள்

Ø  திராவிட மொழிகளின் பழமையான இலக்கிய,இலக்கணங்கள்

Ø  சொல் ஒற்றுமை

Ø  தமிழின் தனித்தன்மைகள்

ஆசிரியர் செயல்பாடு              :

Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

Ø  தமிழையும் ,பிற திராவிட மொழிகளையும் ஒப்பீடு செய்தல்

Øதிராவிட மொழிக்குடும்பத்தின் அமைப்பினைக் கூறல் 

Ø   பாடலின் பொருளினை விளக்குதல்

Ø  அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக் கூடிய சொற்களைக் கொண்டு, உரைநடைத் தொடர் அமைப்பைக் கூறல்

Ø  மூலத்திராவிட மொழியின் பொதுப்பண்புகளைப் பாதுகாத்தலின் அவசியம் பற்றிக் கூறுதல்.


கருத்துரு வரைபடம்

தமிழோவியம்

தமிழ்விடு தூது

மாணவர் செயல்பாடு:

Ø  மாணவர்கள் தமிழ்மொழி எண்ணற்ற சிறப்புகளைக் கொண்டமொழி என உணர்தல்.

Ø   தமிழின் பெருமை கூற புதுக்கவிதை வடிவம் உகந்தது என உணர்தல்

@ தூது இலக்கிய வகையைப் பற்றி அறிதல்

@ தூது அனுப்ப தமிழ்மொழியே சிறந்தது என அறிதல்.

வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

மதிப்பீடு:

Ø  ஹைக்கூ என்றால் என்ன?

Ø   தமிழோவியம் பாடலை இயற்றியவர் யார்?

Ø   தூது என்றால் என்ன?

Ø   மூவினங்கள் யாவை?

தொடர்பணி:

·       பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை