10 TH STD TAMIL MODEL LESSON PLAN -JUNE WEEK 3

  10.ஆம் வகுப்பு 

தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு

    

நாள்                 :           13-06-2022 முதல்  17-06-2022          மாதம்               :            ஜூன்           

வாரம்               :           மூன்றாம் வாரம்                                   வகுப்பு              :            பத்தாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                             பாடத்தலைப்பு     :           1. அன்னை மொழியே

                                                                                                                                                      2. தமிழ்ச்சொல் வளம்

கருபொருள்                            :

Ø  வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்து பொருளுணர்தல்

Ø தமிழ்ச்சொல் வளத்தை அறிந்து பயன்படுத்துதல்

 

உட்பொருள்                           :

Ø  பாவலரேறு  பற்றி அறிதல்

Ø  தமிழ்மொழியின் சிறப்பைப் பற்றி அறிதல்.

Ø  அன்னை மொழியே பாடலின்  பொருளை உள் வாங்குதல்

Ø  தமிழ்ச்சொல் வளத்தை அறிதல்

Ø  தாவரத்தின் சினைப்பெயர்களை அறிதல்

அறிமுகம்                               :

Ø  தமிழின் சிறப்பை உணர்த்தும் இனியப் பாடல் பாடி அறிமுகம் செய்தல்

Ø  அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் தாவரங்களின் உறுப்பைக் குறிக்கும் தமிழ்ச்சொற்களை கரும்பலகையில் எழுத வைத்தல்.

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

Ø  பெருமைகள் மிகுந்த தமிழை தலை தாழ்த்தி வணங்குகிறோம்.

Ø  செழுமை மிக்க தமிழே ! எமக்குயிரே !

சொல்லுதற்கரிய நின் பெருமைதனை

என்னுடைய தமிழ் நாக்கு எவ்வாறுதான்

விரித்துரைக்கும் ? பழம்பெரு மையு ம்

தனக்கெனத் தனிச்சிறப்பும் இலக்கிய

வளமும் கொண்டண்ட தமிழே !

Ø  பாடலில் உள்ள நயங்கள் அறிதல் ( எதுகை, மோனை,இயைபு, பொருள் )

Ø  தமிழின் சொல்வளத்தையும்,பொருள் வளத்தையும் அறிதல்

§ அடிவகை

§  கிளைப்பிரிவு

§  இலைவகை

§  கொழுந்து வகை

§ பிஞ்சு வகை

§  மணி வகை

ஆசிரியர் செயல்பாடு              :

Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

Ø  பெருஞ்சித்திரனாரின் சிறப்புகல்;

Ø  தமிழின் பெருமையை அறிதல்.

Ø  கவிதையின் நயங்களை உணர்த்துதல்

Ø  தாவரங்களின் சினைப்பெயர்களைப் பற்றிக் கூறல்

Ø  அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக் கூடிய சொற்களைக் கொண்டு தமிழ்ச்சொல் வளத்தைக் கூறல்

Ø  தமிழ் ஆழ்ந்த சொல் வளமுடையது என்பதை உணர்த்துதல்

Ø  வித்துவகை , வேர்வகை , தாள் வகை ,காய்ந்த இலைவகை , இலைக்கா ம்பு வகை , பூமடல் வகை , அரும்பு வகை ,         பூக்கா ம்பு வகை ,இதழ்வகை , காய்வகை , கனி வகை , உள்ளீட்டு வகை , தா வரக் கழிவு வகை , விதைத்தோ ல்வகை , பதர் வகை , பயிர் வகை , கொடி வகை , மர வகை , கரும்பு வகை , காய்ந்த பயிர் வகை  ஆகியவற்றை விளக்குதல்.


கருத்து வரைபடம்:
அன்னை மொழியே

தமிழ்ச்சொல் வளம்

மாணவர் செயல்பாடு               :             

Ø  அன்னை மொழியே – மனப்பாடப் பாடலை பிழையின்றி வாசித்தல்

Ø  பாவலரேறின்  சிறப்புகளை அறிதல்

Øஅன்னை மொழியே- கவிதையில் உள்ள நயங்களை அறிதல்

Ø  சொல் அட்டைகள் கொண்டு தொடர் உருவாக்குதல்

Ø  தமிழ்ச்சொல் வள்;அம் பற்றி அறிதல்

Øதாவரங்களின் சினைப்பெயர்களை அறிதல்

வலுவூட்டல்                             :

Ø  கவிதையை மீண்டும் வாசித்தல்

Ø  அன்றாய வாழ்வில் பயன்படுத்தும் கலைச்சொற்களைப் பற்றி உரையாடி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்                      :

Ø   மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடப்பொருளை மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றல் மேற்கொள்ளல்.

மெல்ல கற்போர் செயல்பாடுகள்:

Ø  கவிதையில் உள்ள எதுகை,மோனை நயங்களை அறிதல், எடுத்து எழுதுதல்

Ø  எளிய சொற்கள் கொண்டு தொடர் உருவாக்குதல்

மதிப்பீடு                                 :

Ø  அன்னை மொழியே பாடலின் ஆசிரியர் யார்?

Ø  பாப்பத்தே என்பதன் பொருள் யாது?

Ø  கவிதையில் உள்ள மோனை சொற்கள் யாவை?

Ø  தமிழ்ச்சொல் வளம் என்ற கட்டுரையை இயற்றியவர் யார்?

Ø  சம்பா நெல் வகைகள் சிலவற்றைக் கூறுக

தொடர்பணி:

Ø  பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருக.






கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை