10 TH STD TAMIL MODEL LESSON PLAN -JULY WEEK 3

10.ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்                 :          18-07-2022 முதல்  22-07-2022         

 மாதம்               :            ஜூலை     

வாரம்               :          3 ஆவது  வாரம்                                 

 வகுப்பு              :            பத்தாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                           

 பாடத்தலைப்பு     :  1. தொகைநிலைத் தொடர்கள்

                                             2. விருந்து போற்றுதும்

கருபொருள்                            :

Ø  தமிழரின் பண்பாட்டுக் கூறுகளை அறிதல்

Ø  தொடர்களின் அமைப்பை அறிந்து பயன்படுத்துதல் 

உட்பொருள்                           :

Ø  விருந்தோம்பல் பற்றி அறிதல்

Ø இலக்கியங்களில் விருந்தோம்பல் பற்றி அறிதல்.

Ø  தொடர் அமைப்பை அறிதல்

Ø  தொகைநிலைத் தொடர் வகை அறிதல்

அறிமுகம்                               :

Ø  தமிழின் சிறப்பை உணர்த்தும் இனியப் பாடல் பாடி அறிமுகம் செய்தல்

Ø  அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் தொடர்களை கரும்பலகையில் எழுத வைத்தல்.

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

Ø  அறவுணர்வும் தமிழர் மரபும்

@ தனித்து உண்ணார்

@ இன்மையிலும் விருந்தோம்பல்

@ விருண்ட் அன்றும் இன்றும்

Ø  சொற்றொடர் அறிதல்

Ø  தொகைநிலைத் தொடர்களின் 6 வகைகளை அறிதல்

§  வேற்றுமைத் தொகை

§  வினைத்தொகை

§  பண்புத் தொகை

§  உவமைத் தொகை

§  உம்மைத் தொகை

§  அன்மொழித்தொகை

ஆசிரியர் செயல்பாடு              :

Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

Ø இலக்கியங்கள் காட்டும் பண்டைய தமிழரின் விருந்தோம்பல் பண்பினை தெளிவாக விளக்குதல்

Ø  தொகை நிலைத் தொடர் என்பது யாது என்பதன கூறல்

Ø  அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக் கூடிய சொற்களைக் கொண்டு தொகைநிலைத் தொடர் வகைகளை  கூறல்

Ø  உருபு, சொல் மறைந்து வருவது தொகை நிலைத் தொடர் என உணர்த்துதல்

Ø  தொகை நிலைத் தொடர்களின் ஆறு வகைகளையும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் தொடர்களைக் கொண்டு எளிய முறையில் விளக்குதல்


கருத்து வரைபடம்:

தொகைநிலைத்தொடர்கள்


விருந்து போற்றுதும்

மாணவர் செயல்பாடு               :             

Ø  உரைநடைப் பகுதியை பிழையின்றி வாசித்தல்

Ø தமிழரின் விருந்தோம்பல் அன்றும்,இன்றும் என்ற நோக்கில் கருத்துகளைப்புரிந்து கொள்ளுதல்

Ø  சொல் அட்டைகள் கொண்டு தொடர் உருவாக்குதல்

Ø  தொகை நிலையின் ஆறு உறுப்புகள் மட்டுமல்லாது உருபு பயனும் உடன் தொக்க தொகை பற்றி அறிதல்

Ø  இரு பெயரொட்டு பண்புத் தொகைப் பற்றி அறிதல்

வலுவூட்டல்                             :

Ø விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் வலுவூட்டல்

Ø  அன்றாய வாழ்வில் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டு தொடர் அமைத்து வினையின் வகைகள் வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்                      :

Ø   மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடப்பொருளை மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றல் மேற்கொள்ளல்.

மெல்ல கற்போர் செயல்பாடுகள்:

Ø  உரைப்பகுதியைப் பிழையின்றி வாசித்தல்

Ø  எளிய சொற்கள் கொண்டு தொடர் உருவாக்குதல்

மதிப்பீடு                                 :

Ø  விருந்து என்பதை வரையறுக்கும் நூல் யது?

Ø  சொற்றொடர் எனபது யாது?

Ø  தொகை நிலைத் தொடரின் வகையைக் காண்க : அண்ணன்,தம்பி 

தொடர்பணி:

Ø  பாடப்பகுதியில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருக.

கற்றல் விளைவு

@ நம் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான விருந்தோம்பலின் மாண்பை உணர்ந்து பெருமிதத்துடன் பின்பற்றுதல்


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை