9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 18-07-2022 முதல் 22-07-2022
மாதம் : ஜூலை
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.பெரியபுராணம்
2.புறநானூறு
கருபொருள் :
Ø நீர்வளத்தின் இன்றியமையாமையை அறிதல்
@ அரசனின் கடமைகளை அறிதல்
உட்பொருள் :
Ø நீர்வளத்தைப் பெருக்குவதன் அவசியத்தை அறிதல்
அறிமுகம் :
# உங்கள் ஊரைச்சுற்றியுள்ள நீர் நிலைகள் யாவை ? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்
முக்கிய கருத்துகள் மற்றும்
பாடச் சுருக்கம் :
Ø நீர்வளம் மிக்கதால் சோழநாடு திருநாடு என அழைக்கப்படுகிறது.
@ நீர் வளம் மிகுந்துள்ளதால் சோழநாடு அனைத்து வளங்களையும் பெற்றுத்திகழ்கிறது
Ø அரசனின் முக்கியக் கடமைகளில் ஒன்று நீர்நிலைகளைப் பெருக்கி நீர்வளத்தை மேம்படுத்தலாகும்
ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø திருநாட்டின் சிறப்பைத் தெளிவாக விளக்குதல்.
Ø அரசனின் முக்கியக் கடமைகளில் ஒன்று நீர்நிலைகளைப் பெருக்கி நீர்வளத்தை மேம்படுத்தல் என்பதை அறிந்துகொள்ளச்செய்தல்
கருத்துரு வரைபடம்
பெரியபுராணம்
புறநானூறு
மாணவர் செயல்பாடு:
Ø நீரின்றி இவ்வுலகமே இயங்காது என அறிதல்
Ø நீர்வளம் ஒருநாட்டிற்கு எவ்வளவு அவசியம் என்பதை அறிதல்
@ உணர்வுகளை வெளிப்படுத்த கவிதை மிகச்சிறந்த வழி என உணர்தல்
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
மதிப்பீடு:
Ø பெரியபுராணத்தை இயற்றியவர் யார்?
Ø திருநாட்டில் பாயும் ஆறு எது?
Ø புறநானூறு-----நூல்களுள் ஒன்றுபென்னி
தொடர்பணி:
· பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
கற்றல் விளைவு
@ இயற்கை அழகைப்போற்றும் கவிதைகளைப்படைத்தல்