கலாம் நினைவு தினம்-சிறப்பு வினாடி வினா
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேசுவரம் தீவில் சிறு படகு உரிமையாளரின் மகனாய் கடந்த 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ம் நாள் பிறந்த அவரின் முழுப் பெயர் ஆவுல் பக்கீர் ஜலாலுதீன் அப்துல் கலாம். கலாமுடன் உடன் பிறந்த சகோதரர்கள் மூன்று பேர். ஒரு சகோதரி. கடைக்குட்டியான கலாம், குடும்ப ஏழ்மை காரணமாக பள்ளி நாட்களில் சைக்கிளில் வீடு வீடாய் சென்று செய்தித்தாள் விநியோகித்ததை தன் வாழ் நாள் முழுவதும் பேசி மகிழ்ந்திருக்கிறார்.
1958-ம் ஆண்டு இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் பணிபுரியும் வாய்ப்பை பெற்றார். அப்போது கலாமின் சம்பளம் ரூ. 250 தான். தனது சிந்தனையாலும், உழைப்பாலும் 1980-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரோகிணி செயற்கைகோள் திட்டத்தில் இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து திரிசூல், அக்னி, பிரித்வி ஏவுகணை திட்டங்களுக்கும் இயக்குநராகப் பணிபுரிந்தார். 1998-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி மதியம் 3.45 மணியளவில் பொக்ரானில் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தினார். பணி ஓய்வு பெற்ற பின்னர் இந்தியாவின் அறிவியல் ஆலோசகராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். தன்னுடைய வாழ்நாள் முழுதும் நாட்டுக்காகவே வாழ்ந்த கலாம் அவர்கள் இளைஞர்களிடத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
அவருடைய நினைவைப் போற்றும் வகையில் தமிழ்ப்பொழில் வலைதளம் மாணவர்களுக்கான சிறப்பு வினாடி வினாவை இணைய வாயிலாக நடத்த உள்ளது. அதில் பங்கேற்று 70 % மதிப்பெண் பெறுவோருக்கு இலவச மின்சான்றிதழ் அவரவர் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
சிறப்பு வினாடி வினா இணைப்பைப் பெற