10 TH STD TAMIL QUARTERLY EXAM MODEL QUESTION PAPER-1

 

காலாண்டுப் பொதுத் தேர்வு-மாதிரி வினாத்தாள்-1

10.ஆம் வகுப்பு                           தமிழ்                                  100 மதிப்பெண்கள்

பகுதி-1 (மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                                1)மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச்சங்கம் வைத்தும்என்னும் சின்னமனூர்ச்செப்பேடு உணர்த்தும் செய்தி

அ) சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது    

ஆ) காப்பிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது            

இ) பக்தி இலக்கியக்காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

ஈ)சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

2)காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பன                                        

)இலையும் சருகும் ஆ)தோகையும் சண்டும் இ)தாளும் ஓலையும் ஈ)சருகும் சண்டும்             

3) நீரற வறியாக் கரகத்து - என்று கரகத்தைக் குறிப்பிடும் நூல்

அ)அகநானூறு  ஆ) சிலப்பதிகாரம்  இ) புறநானூறு  ஈ) பதிற்றுப்பத்து

4)திருமூலர் இயற்றிய நூல்………

)தொல்காப்பியம்  )நன்னூல்   )திருமந்திரம்  )புறநானூறு

5)மெத்தவணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது                                   )வணிகக்கப்பல்களும்ஐம்பெருங்காப்பியங்களும்                                )பெரும்வணிகமும்,பெருங்கலன்களும்                         

)ஐம்பெருங்காப்பியங்களும் அணிகலன்களும்  )வணிகக்கப்பல்களும்,அணிகலன்களும்                                          

6)’உனதருளே பார்ப்பன் அடியேனே’ – யார்,யாரிடம் கூறியது?

)குலசேகராழ்வாரிடம் இறைவன்          )இறைவனிடம் குலசேகராழ்வார்         )மருத்துவரிடம்,நோயாளி                    )நோயாளி,மருத்துவரிடம்

7)சங்க இலக்கியங்களில் பண்ணொடு பாடப்பட்ட நூல் ------------

அ)அகநானூறு   ஆ)புறநானூறு   இ)கலித்தொகை   ஈ)பரிபாடல்

8) இங்கு நகரப்பேருந்து நிற்குமா?’ இன்று வழிப்போக்கர் கேட்பது-----வினா.

    ‘அதோ அங்கு நிற்கும்என்று மற்றொருவர் கூறியது--------விடை.

அ)ஐய வினா, வினா எதிர் வினாதல் ஆ) அறியா வினா, மறை விடை

இ) அறியா வினா, சுட்டு விடை ஈ) கொளல் வினா, இனமொழி விடை

9)அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணம்         

)வேற்றுமை உருபு  )எழுவாய்  )உவம உருபு  )உரிச்சொல்                                                 

10)கீரிபாம்பு என்ற சொல்லில் இடம்பெற்ற தொகை                                                                     

அ) வினைத்தொகை ஆ) உவமைத்தொகை இ)உம்மைத்தொகை ஈ) பண்புத்தொகை      

11)குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்

அ)முல்லை,குறிஞ்சி,மருத நிலங்கள்     ஆ)குறிஞ்சி,பாலை,நெய்தல் நிலங்கள் 

இ)குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்   ஈ)மருதம்,நெய்தல்,பாலை நிலங்கள்

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

    வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

    மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

    மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா ! நீ

    ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே .

12)இப்பாடலில் மருத்துவன் என்பது யாரைக் குறித்தது?

அ) இறைவன் ஆ) குலசேகராழ்வார் இ) பாண்டியன் ஈ) பல்லவன்

13)இப்பாடல் எந்த நூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது

அ) சிவஞான போதம் ஆ) பன்னிரு திருமுறைகள் 

 இ) நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் ஈ)தேவாரம்

14) வித்துவக் கோட்டம்மா-என்பதன் இலக்கணக்குறிப்பு

அ) வினையெச்சத்தொடர் ஆ)பெயரெச்சத்தொடர்   இ)விளித்தொடர்  ஈ)அடுக்குத்தொடர்

15)இப்பாடலை இயற்றியவர் யார்?

அ) இறைவன் ஆ) குலசேகராழ்வார் இ) பாண்டியன் ஈ) பல்லவன்

 PDF வடிவில் பதிவிறக்க இங்கே சொடுக்குக

பகுதி-2(மதிப்பெண்கள்:18)

                                                            பிரிவு-1                                           4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:(21 கட்டாயவினா)

16) வசன கவிதை என்பது யாது?

17) 'தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக்

குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக்குறிப்பிடுக.

18)பறை-பெயர்க்காரணம் தருக.

19)விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

20)வறுமையின் காரணமாக உதவி கேட்டுவருபவரின் தன்மானத்தை எள்ளிநகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன ?

21)’குற்றம்’ எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.

                                                     பிரிவு-2                                            5X2=10

ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

22) வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும்,பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.

23) கீழ்வரும்  தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்.முல்லைப்பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

24)உறங்குகின்ற-பகுபத உறுப்பிலக்கணம் தருக.

25)அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.

(தனிச்சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடராக மாற்றுக)

26) இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? தோ ... இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?

மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

27)மரபு வழுவமைதியை சான்றுடன் விளக்குக.

28)கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்க :  1.Emblem 2.Intellectual

பகுதி-3(மதிப்பெண்:18)

                                                            பிரிவு-1                                         2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

29)புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.

          -இது போல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களை எழுதுக.

30) இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த

சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

31) பத்தியைப் படித்துப் பதில் தருக:-

     ஐ.நா. அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (translation) என்பது எழுதப்பட்டதைமொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது ( I n t e r p r e t i n g ) எ ன்றே சொல்லப்படுகிறது . ஐ.நா .அவையில் ஒருவர் பேசுதைமொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு

இடத்தில் இருப்பார் . ஒருவர் பேசுவதைக் காதணி கேட்பியில் (Headphone) கேட்டபடிசில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார் . அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணி கேட்பியை எடுத்துப் பொருத்திக் கொண்டு அவரதுமொழியில் புரிந்துகொள்வார் .

1.மொழிபெயர்ப்பு என்பது யாது?

2.மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் எவ்வாறு குறிப்பிடுவர்?

3.இப்பத்திக்குப் பொருந்திய தலைப்பொன்று தருக..

                                                       பிரிவு-2                                        2X3=6                                                 

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)

32)தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணமாகப் பாவலரேறு கூறுவன யாவை?

33)மாளாத காதல் நோயாளன் போல்-எனும் தொடரிலுள்ள உவமையை விளக்குக.

34)அ)அருளைப் பெருக்கி…. எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.

(அல்லது)

   ஆ)விருந்தினனாக எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.

                                                                  பிரிவு-3                                        2X3=6                                                  

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

35)அலகிட்டு வாய்பாடு எழுதுக:

           செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

           எஃகதனிற் கூரிய தில்

36)  முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

      இன்மை புகுத்தி விடும்.

இக்குறட்பாவில் அமைந் துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

37)சொற்பொருள் பின்வருநிலையணியைச் சான்றுடன் விளக்குக.

பகுதி-4(மதிப்பெண்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:

38)அ)மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையும்,,பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

(அல்லது)

    ஆ)இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.

39)அ)மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்”என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் பங்கேற்று முதல்பரிசுபெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

(அல்லது)

    ஆ)உங்கள் பகுதியில் பழுதடைந்துள்ள குடிநீர் தேக்கத்தொட்டியைச் சரிசெய்து தருமாறு நகராட்சித் தலைவருக்குக் கூட்டு விண்ணப்பம் எழுதுக

40)அ)பள்ளியிலும்,வீட்டிலும் உனது செயல்கள் எவ்வாறு இருக்கும் என வேறுபடுத்திக் காட்டுக.

(அல்லது)

ஆ)மொழி பெயர்க்க:

     Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the streets. It is performed by ruralartists. The stories are derived from epics like Ramayana, Mahabharatha and other ancient puranas. There aremore songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a smallorchestra forms a koothu troupe. Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artistsdress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas.

41)நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

நூலக உறுப்பினர்  படிவம்

----------மாவட்ட நூலக ஆணைக்குழு

மைய / கிளை / ஊர்ப்புற நூலகம் --------

 

உறுப்பினர் சேர்க்கை அட்டை

 

அட்டை எண்:                                                                           உறுப்பினர் எண்:                                     

1.     பெயர்                                                           :          

2.    தந்தை பெயர்                                                 :          

3.    பிறந்த நாள்                                                    :          

4.    வயது                                                           :          

5.    படிப்பு                                                           :          

6.    தொலைபேசி / அலைபேசி எண்                          :          

7.    முகவரி                                                         :          

      (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)                                       

                 நான் --------- நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ. ------ சந்தா தொகை ரூ. ----- ஆக மொத்தம் ரூ. ----- செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.

 

இடம்:    

நாள்:                                                                                                                                                                                   

                                                                                                    தங்கள் உண்மையுள்ள

     

திரு / திருமதி / செல்வி / செல்வன் ----------------- அவர்களை எனக்கு நன்கு தெரியும் எனச் சான்று அளிக்கிறேன்.

        

                                                                                              பிணையாளர் கையொப்பம்

 

42)காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

பகுதி-5 (மதிப்பெண்:24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                           3X8=24

43)அ)தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவைகுறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக.

(அல்லது)

 ஆ)தமிழின் இலக்கிய வளம்-கல்வி மொழி-பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்- அறிவியல் கருத்துகள் - பிறதுறைக் கருத்துகள் - தமிழுக்குச் செழுமை - மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு 'செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

44)அ)"அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம்" என்னும் தலை ப்பில் கற்பனைக்கதை ஒன்று எழுதுக. (அல்லது)

  ஆ)புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும்

    ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ?

45)அ)அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

(அல்லது)

   ஆ)குமரிக் கடல்முனையையும் வேங்கடமலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர்

திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை,தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி,கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி,கோவை யாத்து,அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் சபுலவர்கள்.

     இக்கருத்தைக் கருவாக் கொண்டு ‘சான்றோர் வளர்த்தமிழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை

எழுதுக.

 PDF வடிவில் பதிவிறக்க இங்கே சொடுக்குக


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை