8 TH STD TAMIL QUARTERLY EXAM MODEL QUESTION PAPER

காலாண்டுத்தேர்வு மாதிரி வினாத்தாள்(2022-2023)

எட்டாம் வகுப்பு              பாடம்- தமிழ்               நேரம்:2.30 மணி                  மதிப்பெண்கள்: 100

 

அ)பலவுள்தெரிக:                                                                                                                      16X1=16

1.செவ்விந்தியர்கள் நிலத்தை----மதிக்கின்றனர்.

அ)தாயாக  ஆ)தந்தையாக   இ)தெய்வமாக  ஈ)தூய்மையாக

2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ______ என அழைக்கப்படுகிறது.

அ) கோட்டெழுத்து ஆ) வட்டெழுத்து இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து

3. கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ______.

அ) இளமை ஆ) முதுமை இ) நேர்மை ஈ) வாய்மை

4.உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று _____.

அ)தலை வலி ஆ) காய்ச்சல் இ) புற்றுநோய் ஈ) இரத்தக் கொதிப்பு

5.'கலனல்லால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

அ) கலன் + லல்லால் ஆ) கலம் + அல்லால் இ) கலன் + அல்லால் ஈ) கலன் + னல்லால்

6.செஞ்சொல் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது

அ)கடல் ஆ)ஓடை  இ)குளம்   ஈ)கிணறு

7.தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான இலக்கண நூல்

அ)நன்னூல்   ஆ)அகப்பொருள் விளக்கம்  இ)தொல்காப்பியம்  ஈ)தொன்னூல் விளக்கம்

8.கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் _____.

அ)படித்து ஆ) எழுதி இ) வந்து ஈ) பார்த்த

9.பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் _____.

அ) செல்க ஆ) ஓடு இ) வாழ்க ஈ) வாழிய

10.இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____.

அ)இ,  ஆ)உ,   இ)எ,    ஈ)அ,

11. ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார். இதில் ------என்து சொல்லுருபாக வந்துள்ளது.

அ)ஓவியர்   ஆ)தூரிகை    இ)ஆல்    ஈ)கொண்டு

12. மலர் பானையை வனைந்தாள்’ – இத்தொடர் ________ பொருளைக் குறிக்கிறது.

அ) ஆக்கல் ஆ) அழித்தல் இ) கொடை ஈ) அடைதல்

13.சென்றனர் என்ற வினைமுற்றுக்குரிய வேர்ச்சொல்

அ)செல்ல  ஆ) சென்ற இ) செல் ஈ) சென்று

14.உள்ளங்கை நெல்லிக்கனி போல-எனும் உவமைத்தொடர் குறிக்கும் பொருள்

அ)ஒற்றுமையின்மை ஆ)வெளிப்படைத்தன்மை இ)பயனற்ற செயல் ஈ)எதிர்பாரா நிகழ்வு

16.சேரர்களின் தலைநகரம் _____.

அ) காஞ்சி ஆ) வஞ்சி இ) தொண்டி ஈ) முசிறி

ஆ)பொருத்துக:                                                                                                                           4X1=4

17. புலி              -  அ. குருளை

18. சிங்கம்         -  ஆ.  பறழ்

19. யானை        -   இ.  குட்டி

20. ஆடு            -   ஈ. . கன்று

இ)அடிமாறாமல் எழுதுக                                                                                                    3+3+2+2=10

21.வாழ்க நிரந்தரம் எனும் பாடலை அடிமாறாமல் எழுதுக

22.”பேர்தற்கு” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.

23.”தன்குற்றம்” எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.

24.”கொளல்” என முடியும் குறளை அடிமாறாமல் எழுதுக

ஈ)எவையேனும் ஒன்பது வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க :                           9X2=18

25.ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?

26.பாரதிதாசன் பாரதியாரை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள்ளார்?

27.நண்பர்களின் இயல்பை அளந்துகாட்டும் அளவுகோல் எது?

28.தாய்நாடு எனும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?

29.தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுபவை யாவை?

30.ஓவிய எழுத்து என்றால் என்ன?

31.எழுத்துகளின் பிறாப்பு என்றால் என்ன?

32.வினைமுற்று என்றால் என்ன?

33.உரிமைப்பொருளில் வரும் வேற்றுமையைச் சான்றுடன் விளக்குக.

34.பொருத்தமான நிறுத்தற்குறியிடுக : அ.மூவேந்தர் சேரர் சோழர் பாண்டியர்  ஆ.பாம்பு பாம்பு

35.கலைச்சொல் தருக : அ.REFORM  ஆ.VALLEY

36.சரியான மரபுச்சொல்லால் நிரப்புக: அ.தண்ணீர்---(குடி/பருகு)  ஆ.சுவர்-----(கட்டு/எழுப்பு)

உ..எவையேனும் நான்கனுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடையளி                                           4X4=16

37. ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?

38.ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையே யுள்ள வேறுபாடுகள் யாவை?

39. உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

40. எச்சம் என்றால் என்ன?அதன் வகைகளை எழுதுக

41.தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவமாற்றங்களை விளக்குக

42.பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும் திட்டத்துக்கு அடிப்படையாக அமைந்த நிகழ்வை எழுதுக.

43.அறிவியல் கல்வி குறித்து திரு.வி.க கூறுவன யாவை?

ஊ.எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விரிவான விடையளி                                                     3X7=21

44.காப்பியக்கல்வி குறித்து திரு.வி.க கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

45.வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையைச் சுருக்கி எழுதுக.

46. தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்று குறித்து சியாட்டல் கூறுவனவற்றை எழுதுக.

47.தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறுவனவற்றைச் சுருக்கமாக எழுதுக.

48.எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.

எ) கட்டுரை வடிவில் விடையளிக்க:                                                                                            1X8=8

49.அ. நான் விரும்பும் கவிஞர் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக. 

(அல்லது)

ஆ.விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக

ஏ)பின்வரும் சிந்தனை வினாவிற்கு நன்கு சிந்தித்து விடை எழுதுக                                            1X7=7

36.அ. நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?

(அல்லது)

   ஆ.தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்யவேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவன யாவை

 

 PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை