9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு

நாள் : 28-10-2024 முதல் 30-10-2024
மாதம் : அக்டோபர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.சிற்பக்கலை
2. இராவண காவியம்
1.கற்றல் நோக்கங்கள் :
# வரலாற்றின் வாயில்கள் குறித்து அறிதல்.
#இலக்கியம் காட்டும் ஐவகை நிலங்களின் அழகை நுகர்ந்து அவற்றை விவரித்து எழுதுதல்.
2..கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# மாமல்லபுரம் சுற்றுலா சென்றது உண்டா?
# ஐவகை நிலங்கள் யாவை??
ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
@ சிற்பம்,கல், உலோகம்,செங்கல், மரம்
@ சிற்பம், முழு உருவ சிற்பம், புடைப்புச் சிற்பம்.
@ பல்லவர் - சுதை, கருங்கல் - காஞ்சி, மாமல்லபுரம்
@ பாண்டியர் - குகைக் கோவில் - திருமயம், குன்றக்குடி.
@ சோழர் -கற்சிற்பம்- தஞ்சைப் பெரிய கோவில்.
@ விஜயநகரம் - சுதை, உயர் கோபுரம் - தெலுங்கு, கன்னடம்.
@ நாயக்கர்- ஆயிரங்கால் மண்டபம் -மதுரை மீனாட்சியம்மன் கோவில்.
@ பௌத்த, சமணம்- திருநாதர் குன்று, தீர்த்தங்கரர் உருவம்.
@ ஐவகை நிலங்களின் வருணனைகள்
5.ஆசிரியர் செயல்பாடு :
@கலைகள் குறித்தும் அவை உணர்த்தும் பொருண்மை குறித்தும் விளக்குதல்.
@ பல்வேறு மன்னர் காலத்தில் சிற்பக் கலையில் ஏற்பட்ட வளர்ச்சிகள் குறித்துப் பட்டியலிடுதல்.
@இன்றைய சிற்பக்கலை குறித்து உணர்த்துதல்.
@நூல்வெளி பகுதியை விளக்குதல்.
@ செய்யுளில் இடம்பெற்ற இலக்கணக்குறிப்புகளை விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
சிற்பக்கலை
இராவண காவியம்
7.மாணவர் செயல்பாடு:
# மாணவர்கள் பத்தி பத்தியாகப் படித்தல்.
# பல்லவர், பாண்டியர் விஜயநகர மன்னர், நாயக்கர் காலத்து பல்வேறு சிற்பங்கள் குறித்து அறிதல்.
# இவை வரலாற்றின் வாயில்களாக அமைவதை புரிந்து கொள்ளுதல்.
# ஐவகை நிலங்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1. சிற்பங்கள் வடிவ அடிப்படையில்________,________என இரு வகைப்படும்.
2. இராவணகாவியத்தை இயற்றியவர் ________
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
3. சிற்பக்கலை என்றால் என்ன?
4. புலவர் குழந்தை-குறிப்பு வரைக
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
5.செப்பு திருமேனிகளின் பொற்காலம் எது? ஏன்?
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
# வரலாற்றின் வாயில்கள் குறித்து அறிதல்.
#இலக்கியம் காட்டும் ஐவகை நிலங்களின் அழகை நுகர்ந்து அவற்றை விவரித்து எழுதுதல்.
காணொளிகள்
சிற்பக்கலை👇👇
இராவண காவியம்👇👇