10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 24-10-2022 முதல் 28-10-2022
மாதம் : அக்டோபர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.புறப்பொருள் இலக்கணம்
2.சங்க இலக்கியத்தில் அறம்
3.ஞானம்
1.கற்றல் நோக்கங்கள் :
@ பொருளிலக்கணத்தில் புறப்பொருள் பெறும் இடமறிந்து,அதனைச் செய்யுளில் கண்டறியும் திறன்பெறுதல்.
@ அறக்கருத்துகளை வேராகக் கொண்ட சங்க இலக்கியங்களின் மையப்பொருளறிதல்.
@ கட்டுரை,நாடகம் போன்றவற்றின் வடிவங்களைப் படித்துணர்ந்து, சொல்லப்புகும்கருத்தினை வெளிப்படுத்த ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்து வலுவாகப் பயன்ப டுத்துதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø திரைப்படங்களில் போர்க்காட்சிகளைப் பார்த்துள்ளீர்களா?
Ø யாருக்காவது உதவி செய்துள்ளீர்களா?
ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
Ø வெட்சி முதல் பெருந்திணை வரையிலான 12 புறத்திணைகள் உள்ளன.
@ அறத்தில் வணிகநோக்கம் கூடாது.@ அரசியலிலும் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
@ அறங்கூறும் அவையங்கள் சங்க காலத்திலேயே இருந்துள்ளன
@ போர்,பிறருக்கு உதவுதல்,உண்மை பேசுதல் முதலியவை அனைத்திலும் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
# நம் பாடப்பகுதியில் உள்ள “ஞானம்” கவிதையை இயற்றியவர் வேணுகோபாலன்.
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø நிறுத்தற் குறியீடு அறிந்து வாசித்தல்.
Ø இலக்கணக்குறிப்பை விளக்குதல்
Ø உரைநடைப் பகுதியை விளக்க நிகழ்காலச்சான்றுகளைக் கூறுதல்
6.கருத்துரு வரைபடம்:
புறப்பொருள் வெண்பாமாலை
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு