PDF வடிவில் பதிவிறக்க👇
6.ஆம் வகுப்பு-தமிழ்-இரண்டாம் பருவம்
வினா விடைகள்
இயல்-1 மூதுரை
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர்கள் நூல்களை --------
கற்க வேண்டும்.
அ) மேலோட்டமாக ஆ) மாசுற இ) மாசற ஈ) மயக்கமுற
2. இடமெல்லாம் என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது --------
அ) இடம் + மெல்லாம் ஆ) இடம் + எல்லாம் இ)
இட + எல்லாம் ஈ) இட + மெல்லாம்
3. மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது --------
அ) மாச + அற ஆ) மாசு + அற இ) மாச + உற ஈ) மாசு + உற
4. குற்றம் + இல்லாதவர் என்பதனைச்
சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------
அ) குற்றமில்லாதவர் ஆ)
குற்றம்இல்லாதவர் இ) குற்றமல்லாதவர் ஈ) குற்றம்அல்லாதவர்
5. சிறப்பு + உடையார் என்பதனைச்
சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------
அ) சிறப்புஉடையார் ஆ) சிறப்புடையார் இ)
சிறப்படையார் ஈ) சிறப்பிடையார்
குறுவினா
1.கற்றவரின் பெருமைகளாக மூதுரை
கூறுவன யாவை?
விடை:
ü மன்னர்
, நன்கு கற்றவர் இருவரில் மன்னரே சிறந்தவர்
ü மன்னருக்கு
அவரது நாட்டில் மட்டுமே சிறப்பு
ü கற்றவருக்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு
சிந்தனை வினா
1. கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகளைப் பட்டியலிடுக.
விடை:
ü கல்லாதவர்
வள்ளுவரின் கூற்றுப்படி கண்ணில்லாதவராகக் கருதப்படுவார்.
ü மரத்திற்குச்
சமமாவர்.
ü நாட்டிற்குப்
பயனற்றவராவர்.
2. கல்வியின் சிறப்பாக நீங்கள்
எதனைக் கருதுகிறீர்கள்?
விடை:
ü கல்வி
ஒருவனை முழு மனிதனாக்கும்.
ü அழியாப்
புகழைப் பெற்றுத்தரும்.
ü வாழ்க்கையின்
நோக்கத்தை நிறைவேற்றும்.
PDF வடிவில் பதிவிறக்க👇
துன்பம் வெல்லும் கல்வி
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மாணவர்
பிறர்__________ நடக்கக் கூடாது.
அ)
போற்றும்படி ஆ) தூற்றும்படி
இ) பார்க்கும்படி ஈ) வியக்கும்படி
2. நாம்__________சொல்படி நடக்க வேண்டும்.
அ) இளையோர்
ஆ) ஊரார் இ) மூத்தோர்
ஈ) வழிப்போக்கர்
3. கைப்பொருள்
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது__________
அ) கையில் +
பொருள் ஆ) கைப் + பொருள் இ)
கை + பொருள் ஈ) கைப்பு + பொருள்
4. மானம்
+ இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்__________
அ)
மானம்இல்லா ஆ) மானமில்லா
இ) மானமல்லா ஈ) மானம்மில்லா
சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. மனமாற்றம்
– தவறு செய்பவர்கள் தவற்றை உணர்ந்து மனமாற்றம் அடைய வேண்டும்.
2. ஏட்டுக்
கல்வி – ஏட்டுக்கல்வியோடு பட்டறிவும் இருக்க வேண்டும்.
3. நல்லவர்கள்-
நல்லவர்களோடு பழகுவதே சிறந்தது
4. சோம்பல்
– சோம்பல் மனிதனை முட்டாளாக்கும்.
குறுவினா
1. நாம்
யாருடன் சேரக் கூடாது?
விடை:
நாம்
தன்மானமில்லாதவரோடு சேரக்கூடாது.
2. எதை
நம்பி வாழக் கூடாது?
விடை:
அடுத்தவர்
பொருளை நம்பி வாழக் கூடாது.
3. நாம்
எவ்வாறு வாழவேண்டும் எனப் பட்டுக்கோட்டையார் கூறுகிறார்?
விடை:
அறிஞர்கள்
கூறிய அறிவுரையின்படி வாழவேண்டும்
4. நாம்
எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?
விடை:
தாயின்
புகழும்,தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும்.
சிந்தனை வினா
1.நீங்கள்
படித்து என்னவாக விரும்புகிறீர்கள்? ஏன்?
விடை:
நான்
படித்து ஆசிரியராக விரும்புகிறேன்.ஏனெனில் , ஆசிரியருக்கு மட்டுமே அனைத்து துறைகளிலும்
வல்லுநர்களை உருவக்கும் வல்லமை கிடைக்கும்.
PDF வடிவில் பதிவிறக்க👇
கல்விக்கண் திறந்தவர்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பள்ளிக்கூடம்
செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _____.
அ) ஆடு
மேய்க்க ஆள் இல்லை ஆ) ஊரில்
பள்ளிக்கூடம் இல்லை
இ) வழி தெரியவில்லை ஈ) பேருந்து
வசதியில்லை
2. பசியின்றி
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________.
அ) பசி + இன்றி
ஆ) பசி + யின்றி இ) பசு + இன்றி ஈ) பசு + யின்றி
3. படிப்பறிவு
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.
அ) படி +
அறிவு ஆ) படிப்பு + அறிவு
இ) படி + வறிவு ஈ) படிப்பு + வறிவு
4. காடு
+ ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________.
அ) காட்டாறு ஆ) காடாறு
இ) காட்டுஆறு ஈ) காடுஆறு
சொற்றொடரில் அமைத்து எழுதுக.
அ) வகுப்பு –
இரயிலில் முதல் வகுப்பில் சென்றேன்
ஆ) உயர்கல்வி
– எனது அண்ணன் உயர்கல்வி பயில வெளிநாடு சென்றார்
இ) சீருடை
– மாணவர்கள் பள்ளிக்குச் சீருடை அணிந்து செல்ல வேண்டும்.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. குழந்தைகள்
பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க சீருடைத் திட்டத்தை
அறிமுகப்படுத்தினார்.
2. காமராசரைக்
‘கல்விக் கண் திறந்தவர் ’ என மனதாரப் பாராட்டியவர் பெரியார்
குறு வினா
1. காமராசர்
காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?
விடை:
ü பொறியியல்
கல்லூரிகள்
ü மருத்துவக் கல்லூரிகள்
ü கால்நடைமருத்துவக்
கல்லூரிகள்
ü ஆசிரியர்
பயிற்சி நிறுவனங்கள்
2. காமராசர்
முதல்வராகப் பொறுப்பேற்றதும் கல்விக்காகச் செய்த முதல் பணி யாது?
விடை:
மூடப்பட்டிருந்த
ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளைத் திறந்தார்.
சிறு வினா
1.காமராசரின்
கல்விப்பணிகள் குறித்து எழுதுக.
விடை:
ü மூடப்பட்டிருந்த
ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளைத் திறந்தார்
ü இலவசக்
கட்டாயக் கல்வித்திட்டத்தை ஏற்படுத்தினார்.
ü மதிய
உணவுத்திட்டம் மற்றும் சீருடைத்திட்டங்களை உருவாக்கினார்
சிந்தனை வினா
1.நீங்கள்
முதலமைச்சரானால் கல்வி முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்களை வகுப்பீர்கள்?
விடை:
நான் முதலமைச்சரானால்
கல்வி முன்னேற்றத்திற்காகப் பின்வரும் திட்டங்களை நிறைவேற்றுவேன்.
ü மாணவர்
தனித்திறன் ஊக்குவிப்புத் திட்டம்.
ü கல்விக்
களப்பயணத்திட்டம்.
ü நுண்கலைகள் பயிற்றுவிப்பதற்கான சிறப்புத்திட்டம்
PDF வடிவில் பதிவிறக்க👇
நூலகம் நோக்கி
1.அண்ணா நூற்றாண்டு நூலக்த்தைப்
பற்றிச் சுருக்கமாக எழுதுக.
விடை:
v அண்ணா
நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமாகும்.
v இந்த
நூலகம் தரைத்தளம் மற்றும் எட்டு அடுக்குகளைக் கொண்டது.
v தரைத்தளத்தில்
பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது.இங்கு அவர்களுக்கான பிரெய்லி நூல்கள்
இருக்கும்.
v முதல்
தளம் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி.இங்கு பிற நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட
ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.
v இரண்டாம் தளத்தில் சங்ககாலம் தொடங்கி இன்று வரை
உள்ள அனைத்து தமிழ் நூல்களும் உள்ளன.
v மூன்றாம் தளத்தில் அரசியல் சார்ந்த நூல்களும், நான்காம் தளத்தில் பொருளியல், சட்டம் சார்ந்த நூல்களும், ஐந்தாம் தளத்தில் கணிதம், அறிவியல்,
மருத்துவம் உள்ளிட்ட நூல்களும் உள்ளன.
v ஆறாம் தளத்தில் பொறியியல், வேளாண்மை திரைப்படங்களைச் சார்ந்த நூல்களும் ஏழாம் தளத்தில் பழமையான ஓலைச்சுவடிகள் காப்பகமும் எட்டாம் தளத்தில் கூட்ட அரங்கு,
கலையரங்கு உள்ளிட்டவையும் உள்ளன.
இன எழுத்துகள்
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மெல்லினத்திற்கான
இன எழுத்து இடம்பெறாத சொல் எது?
அ) மஞ்சள் ஆ)
வந்தான் இ) கண்ணில் ஈ)
தம்பி
2. தவறான
சொல்லை வட்ட மிடுக.
அ) கண்டான் ஆ) வென்ரான் இ) நண்டு ஈ)
வண்டு
பின்வரும் சொற்களைத்
திருத்தி எழுதுக.
தெண்றல் – தென்றல்
கன்டம் - கண்டம்
நன்ரி - நன்றி
மன்டபம் – மண்டபம்
குறுவினா
1.இன
எழுத்துகள் என்றால் என்ன?
விடை:
ஒலிக்கும்
முயற்சி,
பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள்
எனப்படும்.
மொழியை ஆள்வோம்
தொடர்களை நீட்டித்துப் புதிய
தொடர்களை உருவாக்குங்கள்.
மழை பெய்தது
1.கனமழை பெய்தது
2.ஊரில் கனமழை பெய்தது
3.எங்கள் ஊரில் கனமழை பெய்தது
4.நேற்று எங்கள் ஊரில் கனமழை பெய்தது.
இரு பொருள் தரக்கூடிய சொற்களைப்
பயன்படுத்திச் சொற்றொடர்கள் அமையுங்கள்.
(நூல், மாலை,
ஆறு, படி)
மாலை – மலரால் மாலை தொடுத்தான் , சூரியன் மாலையில்
மறைந்தது.
ஆறு - கங்கை
மிகப்பெரிய ஆறு , எண்களில் ஒன்று ஆறு.
படி – அளவைகளில் ஒன்று படி , தினமும் நூல்களைப் படி.
பின்வரும் சொற்களைப் பயன்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குங்கள்.
1. ஆசிரியர்
கவிதை எழுதுகிறார்.
2. ஆசிரியர்
கவிதை படிக்கிறார்.
3. ஆசிரியர்
பாடம் கற்பிக்கிறார்
4. மாணவன்
பாடம் எழுதுகிறான்
5. மாணவன்
பாடம் படிக்கிறான்.
உரையாடலை நிறைவு
செய்யுங்கள்.
மாணவர் : வணக்கம்
ஐயா.
தலைமை
ஆசிரியர்
: வணக்கம் மதி. உனக்கு என்ன வேண்டும்?
மாணவர் : எனக்கு
மாற்றுச் சான்றிதழ் வேண்டும் ஐயா.
தலைமை
ஆசிரியர்
: மாற்றுச்சான்றிதழ் வேண்டுவதன் காரணம் என்ன?
மாணவர் : என்
தந்தைக்குப் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது ஐயா.
தலைமை
ஆசிரியர்
: அப்படியா! எந்த ஊருக்குப் பணி மாறுதல் கிடைத்திருக்கிறது?
மாணவர் : மதுரைக்கு ஐயா!
தலைமை
ஆசிரியர்
: அங்கு எந்தப் பள்ளியில் சேரப் போகிறாய்?
மாணவர் : மாநகராட்சிப் பள்ளியில் ஐயா!
தலைமை
ஆசிரியர்
: உனது அப்பாவை அழைத்து வந்துள்ளாயா?
மாணவர் : என்
அப்பாவை அழைத்து வந்திருக்கிறேன் ஐயா.
கீழே கொடுக்கப்பட்டுள்ள
தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப் படுகிறது.
(குழந்தைகள்
நாள், மாணவர் நாள், ஆசிரியர் நாள்,
தேசிய இளைஞர் நாள், கல்வி வளர்ச்சி நாள்)
1. காமராசர்
பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள்
2. டாக்டர்
எஸ். இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் நாள்
3. அப்துல்கலாம்
பிறந்த நாள் மாணவர் நாள்
4. விவேகானந்தர்
பிறந்த நாள் தேசிய இளைஞர் நாள்
5. ஜவஹர்லால்
நேரு பிறந்த நாள் குழந்தைகள் நாள்
இன எழுத்துகள் அமைந்துள்ள
சொற்களை
வட்டமிடுங்கள்.
கங்கை, பக்கம், வண்டு, மண்டபம், மங்கை, வெந்தயம், தந்தம், பஞ்சு, பச்சை, தக்காளி, மஞ்சள், கம்பளம், குன்று, காக்கை,
செங்கடல், தேங்காய்.
கீழ்க்காணும் சொற்களுள்
அமைந்துள்ள இன எழுத்துகளை எடுத்து எழுதுங்கள்.
சங்கு -ங்,க்
நுங்கு - ங்,க்
பிஞ்சு - ஞ்,ச்
வஞ்சம் - ஞ்,ச்
பண்டம் -ண்,ட்
சுண்டல் - ண்,ட்
வண்டி - ண்,ட்
பந்தயம் - ந்,த்
பந்து, - ந்,த்
கற்கண்டு - ண்,ட்
தென்றல் - ன்,ற்
நன்று - ன்,ற்
பின்வரும் பத்தியைப் படித்து
வினாவிற்கேற்ற விடையளிக்கவும்.
1. காமராசரின்
வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள் --------------
அ) பெற்றோர்
ஆ) சிறுவன், சிறுமி
இ) மக்கள் ஈ) ஆசிரியர்கள்
2. இந்நிகழ்வு சிறுவனது
குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது?
அ) ஏழ்மை ஆ) நேர்மை இ)
உழைப்பு ஈ) கல்லாமை
3. மறுநாள்
குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் நெகிழ்ந்தார்
4. சிறுவனும்
சிறுமியும் எதற்காகக் காமராசரின் வீட்டிற்கு வந்தனர் ? பண உதவி கேட்க
5. காமராசர்
செய்த உதவி யாது? பண
உதவி
‘கல்விக்கண்
திறந்த காமராசர்’ இத்தொடரிலுள்ள எழுத்துகளை மட்டும் பயன்படுத்திப் புதிய சொற்களை
உருவாக்குங்கள்.
(எ.கா.) கண்
கல்வி,கவி,வில்,கதி,காண்
முறை மாறியுள்ள சொற்களைச் சரியான இடத்தில் பொருத்திச் சொற்றொடரை நிறைவு செய்க.
1. முளையிலே
விளையும் தெரியும் பயிர் – விளையும் பயிர் முளையிலேயே
தெரியும்
2. ஆக்குவோம்
இல்லாமை கல்லாமையை – கல்லாமையை இல்லாமை ஆக்குவோம்.
PDF வடிவில் பதிவிறக்க👇