மாணவர் வாசித்தல் பயிற்சிக்கையேடு
மாணவர்களின் தமிழ் படித்தல் மற்றும் எழுதுதல்
திறன்களை வளர்க்கும் பயிற்சிக் கையேடு.
சென்னை மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் அவர்கள் மாணவர்களின் தமிழ் படித்தல்
மற்றும் எழுதுதல் திறன்களை வளர்க்கும் பயிற்சிகள் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஆசிரியப்பணியே
அறப்பணியாக மேற்கொள்ளும் தமிழாசிரியர்களுக்குத் தற்காலங்களில் தமிழ் பாடம்
கற்பித்தலில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளையும் வகைகளும் மாணவர்கள் தமிழ் பாடத்தை
ஆர்வத்தோடு படிப்பதற்கு வழி காட்டும் வகையிலும் பயிற்சிக் கையேடு
உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள்
தமிழில் எழுத்து சொல் சொற்றொடர் ஆகியவற்றை எளிய முறையில் படிக்கும் பொருட்டும்
பிழையின்றி எழுதும் பொருட்டு, பல்வேறு கற்பித்தல் உத்திகள்
கையேட்டில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்
எழுத்துக்கள் முழுவதையும் ஐயமின்றி உரிய ஒலி குறிப்போடு உச்சரிக்கவும்,எழுத்துகள் தனித்தும் பிற எழுத்துகளோடு இணைந்து சொற்களையும் அவற்றை சரியான
முறையில் எழுதவும், படிக்கவும் பல்வேறு பயிற்சிகள்
கையேட்டில் இடம்பெற்றுள்ளன.
சொல் மற்றும்
தொடர்களைப் பிழையின்றி படிக்கவும் தொடர்களை படித்து பொருள் உணர்ந்து கொள்ளவும்
தொடர்களை தாமரை எழுதும் திறன் பெறவும் வழிகாட்டும் நோக்கோடு புதிய உத்திகளுடன்
நம்பிக்கையோடு அமைந்துள்ளது.
ஆசிரியர்
செயல்பாடுகளும் மாணவர் செயல்பாடுகளும் இணைந்து பல்வேறு வகுப்பறைச் செயல்பாடுகளில்
ஈடுபடும் வகையிலும் தொடர் பணிகளை மேற்கொண்டு மதிப்பீடு செய்யும் படியாகவும் கையேடு
அமையப்பெற்றுள்ளது.
இரட்டைக்
கோடுகள் வகுப்பறையில் அட்டைகள் மற்றும் கரும்பலகை போன்ற துணை கருவிகளை பயன்படுத்தி
மாணவர்களின் படித்தல் மற்றும் எழுதுதல் திறன்கள் வளர்க்கப்பட்டு தமிழ் பாடத்தை
ஆர்வத்துடன் படிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கையேட்டினைப் பதிவிறக்கம் செய்து ஆசிரியப் பெரு மக்களும் மாணவர்களும் பலரையும் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கையேட்டினைப் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்.
Download Timer