6 TH STD TAMIL TERM 2 QUESTION AND ANSWERS (UNIT 2)

6.ஆம் வகுப்பு-தமிழ்-இரண்டாம் பருவம்

வினா விடைகள்

இயல்-2 ஆசாரக்கோவை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பிறரிடம் நான் --------- பேசுவேன்.

அ) கடுஞ்சொல் ஆ) இன்சொல் இ) வன்சொல் ஈ) கொடுஞ்சொல்

2. பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக்கொள்வது --------- ஆகும்.

அ) வம்பு ஆ) அமைதி இ) அடக்கம் ஈ) பொறை

3. அறிவு+உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

அ) அறிவுடைமை  ஆ) அறிவுஉடைமை  இ) அறியுடைமை   ஈ) அறிஉடைமை

4. இவை +எட்டும் என்பதனைச் சேர்த்து எழுதக்கிடைக் கும் சொல் ---------

அ) இவை எட்டும் ஆ) இவையெட்டும் இ) இவ்வெட்டும் ஈ) இவ்எட்டும்

5. நன்றியறிதல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------

அ) நன்றி+யறிதல் ஆ) நன்றி+அறிதல் இ) நன்று+அறிதல் ஈ) நன்று+யறிதல்

6. பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ---------

அ)பொறுமை +உடைமை ஆ)பொறை+யுடைமை இ)பொறு+யுடைமை ஈ)பொறை+உடைமை

                                                                         PDF வடிவில் பதிவிறக்க

குறுவினா

1. எந்த உயிருக்கும் செய்யக் கூடாதது எது?

விடை: எந்த உயிருக்கும் செய்யக் கூடாதது தீங்கு.

2. நாம் யாருடன் நட்புக் கொள்ள வேண்டும்?

விடை: நாம் நற்பண்புகள் உள்ளவரோடு நட்புக் கொள்ள வேண்டும்.

சிறுவினா

1.ஆசாரக்கோவை கூறும் எட்டு வித்துகள் யாவை ?

விடை:

ü  செய்ந்நன்றி மறவாமை 

ü  பிறர் செய்யும்தீமைகளைப் பொறுத்தல்

ü  இன்சொல் பேசுதல்

ü  எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்

ü  கல்வியறிவு பெறுதல்

ü  அனைவரையும் சமமாக எண்ணுதல்

ü  அறிவுடையவராய் இருத்தல்

ü  நல்லவரோடு நட்புக் கொள்ளுதல்.

சிந்தனை வினா

1. உங்கள் நண்பரிடம் உங்களுக்குப் பிடித்த பண்புகளைப் பட்டியலிடுக.

விடை: அமைதி ,அனைவருக்கும் உதவுதல்,இரக்க குணம்

2. நல்ல ஒழுக்கங்களை வித்து எனக் கூறுவதின் காரணத்தைச் சிந்தித்து எழுதுக.

விடை: நல்ல விதைகள் நல்ல விளைச்சலைத் தருவது போல நல்ல ஒழுக்கங்கள் நல்ல வாழ்க்கையைத் தரும் என்பதால் அவ்வாறு சொல்லப்பட்டது.

இயல்-2 கண்மணியே கண்ணுறங்கு

சரியான விடையை த் தே ர்ந்தெ டுத்து எழுதுக.

1. 'பாட்டிசைத்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………

அ) பாட்டி+சை த்து ஆ) பாட்டி+இசை த்து இ) பாட்டு+இசைத்து ஈ) பாட்டு+சைத்து

2. 'கண்ணுறங்கு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………

அ) கண்+உறங்கு ஆ) கண்ணு+உறங்கு இ) கண்+றங்கு ஈ) கண்ணு+றங்கு

3. வாழை +இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………………

அ) வாழையிலை ஆ)வாழை இலை இ) வாழைலை ஈ)வாழிலை

4. கை +அமர் த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்  சொல் ………………

அ) கைமர்த்தி ஆ) கை அமர்த்தி  இ) கையமர்த்தி ஈ) கையைமர்த்தி

5. உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொ ல் …………………

அ) மறைந்த  ஆ) நிறைந்த  இ) குறைந்த  ஈ) தோன்றிய

குறுவினா

1. இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று நாடுகள் யாவை ?

விடை: சேர நாடு,சோழ நாடு ,பாண்டிய நாடு

2. நமது வீட்டிற்கு வந்தவரை உபசரிக்கும் முறையாநாட்டுப்புறப் பாடல் கூறுவதுயாது?

விடை: இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்க வேண்டும்.

3. கண்மணியே கண்ணுறங்கு பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச்சொற்களை எடுத்து எழுதுக.

விடை:

     ராரோ

     ராரோ

     ந்தவனம்

     ற்றமிழ்ப

     ண்ணோடு

     பார்போற்ற

     ந்தத்திலே

     ங்கத்திலே                               PDF வடிவில் பதிவிறக்க

சிறுவினா

1.தாய் தன் குழந்தையை எவ்வாறெல்லாம் பாராட்டுகிறாள்?

விடை:கண்ணே,கண்மணியே,சேரநாட்டு முத்தேன்,சோழநாட்டு முக்கனி,பாண்டியநாட்டு முத்தமிழ்

சிந்தனை வினா

1. வாய்மொழி இலக்கிய வகைகளின் பெயர்களைத் தொகுக்க.

விடை: விடுகதை,புதிர்,நாட்டுப்புறப்பாடல்கள்,பழமொழிகள்.

2. குழந்தைகளைக் கொஞ்சுவதற்குப் பயன்படுத்தப்படும் சொற்களைத் தொகுக்க.

விடை: கண்ணே,மணியே,ராசா,பட்டு,தங்கம்

இயல்-2 தமிழர் பெருவிழா

சரியான விடையை த் தே ர்ந்தெ டுத்து எழுதுக.

1. கதிர் முற்றியதும் ___________ செய்வர்.

அ)அறுவடை  ஆ)உரமிடுதல் இ)நடவு ஈ)களையெடுத்தல்

2.விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் _________ கட்டுவர் .

அ) செடி ஆ)கொடி இ)தோரணம் ஈ) அலங்கார வளைவு

3.  பொங்கல்+அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக் கும் சொல் ___________

அ)பொங்கலன்று ஆ) பொங்கல்அன்று இ)பொங்கலென்று ஈ)பொங்கஅன்று

4.போகிப்பண்டிகை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________

அ)போகி+பண்டிகை ஆ)போ+பண் டிகை  இ) போகு+பண்டிகை  ஈ) போகிப்+பண்டிகை

5. பழையன கழிதலும்____________ புகுதலும்.

அ) புதியன    ஆ) புதுமை     இ) புதிய      ஈ) புதுமையா

6. பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும்.

பட்டுப்போன மரத்தைக் காண _____________ தரும்.

அ) அயர்வு ஆ) கனவு இ) துன்பம் ஈ) சோர்வு

சொற்றொடரில் அமை த்து எழுதுக.

அ)பொங்கல் – பொங்கல் விழா தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

ஆ)செல்வம்  - கல்வியே சிறந்த செல்வம் ஆகும்.

இ)பண்பாடு   - விருந்தோம்பல் தமிழரின் சிறந்த பண்பாடு

குறுவினா

1.போகிப்பண்டிகை  எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

விடை: தீயனவற்றை அழித்து நல்லனவற்றையே சிந்திக்க வேண்டும் என்பதற்காக.

2.உழவர்கள் ஏன் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர் ?

விடை : மாடுகள் உழவுத்தொழிலுக்குப் பெரிதும் உதவி செய்வதால் உழவர்கள் நன்றி செலுத்துகின்றனர்.

சிறுவினா

1.காணும் பொங்கலை மக்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர் ?

விடை:

ü  உறவினர்களைக் கண்டு மகிழ்வர்.

ü  குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வர்.

ü  விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்துவர்.

சிந்தனை வினா

1. பொங்கல் விழாவின்போது உங்கள் ஊரில் என்னென்ன சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வீர்கள்?

விடை:

ü  சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

ü  கரகாட்டம்,மயிலாட்டம்,பறையாட்டம்

ü  கலைநிகழ்ச்சிகள்,கோலப்போட்டிகள்

2. காணும் பொங்கல் எவ்வாறு மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது?

விடை: ஒருவரை ஒருவர் பார்த்து அன்பினைப் பரிமாறிக் கொள்வதால் அவர்களிடையே ஒற்றுமை வளர்கிறது.

PDF வடிவில் பதிவிறக்க

இயல்-2 மனம் கவரும் மாமல்லபுரம்

சிறுவினா

1. மாமல்லபுரம் எப்படி உருவானது? அதற்குக் காரணமான நிகழ்வு யாது?

விடை:

ü  நரசிம்ம பல்லவர் சிறுவயதில் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த பெரிய பாறையின் நிழல் யானையின் உருவம்போலத் தோன்றியது.

ü  தனது எண்ணத்தை அவரது தந்தையிடம் கூறியுள்ளார்

ü  அவரது தந்தையும் அங்கிருந்த ஒவ்வொரு பாறையின் நிழலும் ஒவ்வொரு உருவம்போலத் தெரிவதாகக் கூறினார்.அனைத்தையும் சிற்பமாக மாற்றலாம் எனக் கூறினார்.

இந்நிகழ்வே மாமல்லபுரச் சிற்பங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது.

இயல்-2 மயங்கொலிகள்

சரியான விடையை த் தே ர்ந்தெ டுத்து எழுதுக.

1) சிரம் என்பது ------------------- (தலை / தளை)

2) இலைக்கு வேறு பெயர் ------------------- (தளை / தழை )

3) வண்டி இழுப்பது ------------------- (காலை / காளை)

4) கடலுக்கு வேறு பெயர் ------------------- (பரவை / பறவை )

5) பறவை வானில் ------------------- (பறந்தது / பரந்தது)

6) கதவை மெல்லத் ------------------- (திறந்தான் / திரந்தான்)

7) பூ ------------------- வீசும். (மனம் /மணம்)

8) புலியின் ------------------- சிவந்து காணப்படும். (கன் /கண்)

9) குழந்தைகள் ------------------- விளையாடினர் . (பந்து /பன்து)

10) வீட்டு வாசலில் ------------------- போட்டனர் . (கோலம் / கோளம்)

தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக.

1)ன் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மம் வீசின.

2)தேர்த் திருவிலாவிற்குச் சென்ர் .

3)வாழைப்பம் உடலுக்கு மிகவும் நல்து.

குறுவினாக்கள்

1. மயங்கொலி எழுத்துகள் யாவை ?

விடை:

   ண,ன,ந

   ல, ழ,

    , ற ஆகிஎட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

2. ,,ந ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக.

விடை:

     - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் டுப்பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.

     - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன்பகுதியைத் தொடுவதால் கரம் பிறக்கிறது.                         

       - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் அடிப்பகுதியைத் தொடுவதால் கரம் பிறக்கிறது.

பத்தியைப் ப டித்து வினாக்கள் அமைக்க.

     முகிலன் பொங்கல் விழாக் கொண்டாடத் தாத்தா வீட்டிற்குச் சென்றான். அங்குச்செவலை என்ற காளை இருந்தது. அக்காளையை முகிலனுக்கு மிகவும் பிடிக்கும்.அதற்குத் தீவனம் வைப்பது அவனது வழக்கம். வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்து காய்கறிகள் பறித்துக் கொடுத்துத் தாத்தாவுக்கு உதவுவான். அவன், தாத்தா பாட்டியோடு மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடுவான்.

(எ. கா.) முகிலன் யார் வீட்டிற்குச் சென்றான்?

1. முகிலன் ஏன் தாத்தா வீட்டிற்குச் சென்றான்?

2. முகிலனின் தாத்தா வீட்டில் இருந்த காளை எது?

3. முகிலனின் வழக்கம் யாது?

4.முகிலன் அவனது தாத்தாவுக்கு எவ்வாறு உதவினான்?

5.முகிலன் யாருடன் பொங்கல் விழாவைக் கொண்டாடுவான்?

சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக.

1. கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்

2. மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்

3. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்

4. மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்

விடை: 3. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்.

உரைய ாடலை நிரப்புக.

செல்வன் : வாங்க மாமா. நலமாக இருக்கின்றீர்களா?

மாமா : நான் நலம். நீ எப்படி இருக்கிறாய்?

செல்வன் : நன்றாக இருக்கிறேன். உட்காருங்கள் மாமா.

மாமா : அப்பா , அம்மா எங்கே சென்றுள்ளா ர்கள்?

செல்வன் : இருவரும் கடை வீதிக்குச் சென்றுள்ளார்கள்.

மாமா : அப்படியா? நீ எப்படி படிக்கிறாய்?

செல்வன் : நன்றாகப் படிக்கிறேன் மாமா.

மாமா : நாளை விடுதலை நாள் விழா. உங்கள் பள்ளியில்  போட்டிகள் நடத்துகிறார்களா?

செல்வம் : ஆம் மாமா. நான் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்கிறேன்.

மாமா : வெற்றி பெற வாழ்த்துகள்.

செல்வம் : நன்றி மாமா!!

நட்பு என்னும் தலைப்பில் கவிதை எழுதுக.

   இன்பம் கொடுப்ப து நட்பு

   ஊக்கம் அளிப்பது நட்பு

   உயர்வைத் தருவது நட்பு

   உண்மையாய் இருப்பது நட்பு.

பொங்கல் திருநாள் -கட்டுரை

முன்னுரை:

     இயற்கையோடு இணைந்து வாழ்வதே தமிழரின் வாழ்க்கை முறை ஆகும்.இயற்கையை வணங்குதல் தமிழர் மரபு.தமிழர் கொண்டாடும் பல விழாக்கள் இயற்கையைப் போற்றும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன . அவற்றுள் சிறப்பானது பொங்கல் விழா ஆகும்.இது தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது.

போகித்திருநாள்:

     வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை􀁉 செய்யும் நாள் (போக்கி) போகித் திருநாள். இது மார்கழி மாதத்தின் இறுதிநாள் ஆகும். தீயனவற்றை அழித்து நல்லனவற்றையே சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்விழா கொண்டாடப் படுகிறது.

பொங்கல் திருநாள்
   தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள் ஆகும் திருநாள் அன்று வாசலில் வண்ணக் கோலமிடுவர். மாவிலை தோரணம் கட்டுவர். புதுப்பாலையில் புத்தரிசியோடு வெல்லம், முந்திரி, நெய் சேர்த்து பொங்கல் இடுவர். பொங்கல் என்பதற்குப் பொங்கி பெருகுவது என்று பொருள்.

மாட்டுப் பொங்கல்
    பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் மாடுகள் உழவர்களின் செல்வமாக மதிக்கப்படுகின்றன. உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் விளங்குகின்றன. அவற்றிற்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
காணும் பொங்கல்
     மாட்டுப் பொங்கல் அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும். இந்நாளில் உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர். குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதை கழிப்பர்
முடிவுரை
   இயற்கை, உழைப்பு, நன்றி உணர்வு, பண்பாடு ஆகியவற்றைப் போற்றும் விழாவாகவே பொங்கல் விழா கொண்டாடப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் உறுதி ஏற்று பொங்கல் விழாவின் மாண்பை உணர்ந்து செயல்பட வேண்டும்

கீழே உள்ள சொற்களைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.

(எ.கா.) கல்+ல்+உண்டு = கல்லுண்டு, கல்+ல்+இல்லை = கல்லில்லை ..

   பல்லுண்டு,பல்லில்லை

   மின்னுண்டு,மின்னில்லை

   மண்ணுண்டு,மண்ணில்லை

PDF வடிவில் பதிவிறக்க

இயல்-2 திருக்குறள்

சரியான விடையை த் தே ர்ந்தெ டுத்து எழுதுக.

1. விருந்தினரின் முகம் எப்போது வாடும்?

அ)நம் முகம் மாறினால் ஆ)நம் வீடு மாறினால் இ)நாம் நன்கு வரவேற்றால் ஈ)நம் முகவரி மாறினால்

2.நிலையான செல்வம் .........................

அ) தங்கம் ஆ) பணம் இ) ஊக்கம்  ஈ) ஏக்கம்

3.ஆராயும் அறிவு உடையவர்கள் ....................... சொற்களைப் பேசமாட்டா ர்கள்.

அ) உயர்வான ஆ) விலையற்ற இ) பயன்தராத ஈ) பயன்உடைய

4. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ)பொருளு+டைமை ஆ) பொரு+ளுடைமை இ) பொருள்+உடைமை  ஈ) பொருள்+ளுடைமை

5. உள்ளுவது+எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ)உள்ளுவதுஎல்லாம் ஆ)உள்ளுவதெல்லாம் இ)உள்ளுவத்தெல்லாம் ஈ)உள்ளுவதுதெல்லாம்

6. பயன்+இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) பயனிலா ஆ) பயன்னில்லா   இ) பயன்இலா ஈ) பயன்இல்லா

நயம் அறிக

  உள்ளத்தால் உள்ள லும் தீதே பிறன்பொருளைக்

 கள்ளத்தால் கள்வேம் எனல்

இக்குறளில் உள்ள எதுகை , மோனைச்சொற்களை எடுத்து எழுதுக.

எதுகை:

     ள்ளத்தால்  ள்ளலும்

     ள்ளத்தால் , கள்வேம்

மோனை:

      ள்ளத்தால்  ள்ளலும்

      ள்ளத்தால் , ள்வேம்.

இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

  ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் ஊக்கம்

  அசைவுஇலா உடையான் உழை .

விடை:

  ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும் அசை வுஇலா

  ஊக்கம் உடையான் உழை .

  உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது

  தள்ளாமை தள்ளினும் நீர்த்து.

விடை:

   உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது

   தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

ஊக்கமது கைவிடேல்” என்பது ஔவையாரின் ஆத்திசூடி. இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

  விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா

  மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று.

  உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

  நில்லாது நீங்கி விடும்.

  சொல்லுக சொல்லில் பயனுடைய  சொல்லற்க

  சொல்லில்  பயன்இலாச் சொல்.

விடை:

  உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

  நில்லாது நீங்கி விடும்.

பின்வரும் கதைக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

    வீட்டிற்குள் வந்த வேலனைத் தந்தை அழைத்தார் .”உங்கள்பள்ளியில் பேச்சுப்போட்டி நடப்பதாகக் கூறினாயே, பெயர் கொடுத்து விட்டாயா?” என்று கேட்டார் . ”இல்லையப்பா , அமுதன் என்னை விட நன்றாகப் பேசுவான். அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். எனவே நான் பெயர் கொடுக்கவில்லை ” என்றான் வேலன். ”போட்டியில் வெற்றியும்தோல்வியும் இயல்புதான். அதற்காகப் போட்டியிடாமல் இருக்கக் கூடாது. நாம் எந்த அளவு ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும்.எனவே நீ போட்டியில் கலந்து கொள்” என்றார் அப்பா . உற்சாகம் அடைந்தான் வேலன். ”நாளை பெயர் கொடுத்துவிடுகிறேன் அப்பா ” என்றான்.

   மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

   நோக்கக் குழை யும் விருந்து.

   வெள்ளத்து அனைய மலர் நீட்ட ம் மாந்தர்தம்

   உள்ளத்து அனையது உயர்வு.

   அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

   பெரும்பயன் இல்லாத சொல்.

விடை:

    வெள்ளத்து அனைய மலர் நீட்ட ம் மாந்தர்தம்

    உள்ளத்து அனையது உயர்வு.

குறுவினா

1. எப்படி உண்பது விரும்பத்தக்கது அன்று?

விடை: அமிழ்தமே ஆனாலும் விருந்தினர் இருக்கும்போ து தான்மட்டும் உண்பது

விரும்பத்தக்கது அன்று.

2. எது தீமையானது என்று வள்ளுவர் கூறுகின்றார் ?

விடை: அடுத்தவர் பொருளைக் களவாடலாம் என உள்ளத்தால் நினைப்பது கூடத் தீமையானது.

3. ஆக்கம் யாரிடம் வழிகேட்டுச் செல்லும்?

விடை: தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழிகேட்டுக்கொண்டு செல்லும்.

4. நாம் எத்தகைய சொற்களைப் பேசவேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார் ?

விடை: பயனுடைய சொற்கள்

 PDF வடிவில் பதிவிறக்க

 

    

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை